Sunday, August 13, 2023

இரும்பு மனிசிதான் நடிகை ஸ்ரீதேவி.

#*

*



(*இன்று ஆகஸ்ட் 13, நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள்*) *வேறு ஒன்றும் இல்லை. அவர் குடும்பம் தெரிந்து குடும்பம். சில கவனித்த நினைவுகள்*..












•••••
நாட்டில் பலருக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை மிகவும் சிறப்பானது என்ற சிந்தனை இருக்கும். அழகிய முகம், சிறந்த திறமை, மகள்களுடன் நிம்மையான குடும்பம் என …. தூரத்து பார்வையில அவரது வாழ்க்கை விரும்பத்தக்கதாகவும் இருந்தது. ஆனால், உண்மையிலேயே ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக இருந்தாரா?
அவரது தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடிக்கும் பறவையைப் போல இருந்ததையும், அவரது தந்தையின் இறப்புக்குப் பின்னர் மிகவும் கட்டுப்பாடுகள் விதித்த அவரது தாயால் அவர் வாழ்க்கை.சிறு குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து பார்ததுண்டு.

எங்களுக்கு பக்கத்து கிராமம் மீனம்பட்டி, இவரின் தந்தை  வழக்கறிஞர் அய்யப்பன் எனக்கு உறவினர்.கடந்த 1989 இல் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 
சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட போது ஶ்ரீ தேவி தேர்தல் செலவுக்கு நன்கொடை அனுப்பினர். இவரின் பெரியப்பா ராமசாமி ஜனதா கட்சியின் சிவகாசி எம்எல்ஏவாக 1977வாக இருந்தார்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மூளை அறுவைசிகிச்சையால் ஸ்ரீதேவியின் தாய் உளவியல் நோயாளியானார். ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவும்  திருமணம்.
இறப்பதற்கு முன்பு ஸ்ரீதேவியின் தாய், சொத்துகள் அனைத்தையும் ஸ்ரீதேவியின் பேரிலேயே உயிலாக எழுதி வைத்தார். ஆனால், அந்த உயிலில் கையெழுத்திடும் தனது தாய் தெளிவாகச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்று ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்குத் தொடுத்தார்.

போனி கபூரின் தாய் ஒருமுறை ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ஸ்ரீதேவியின் வயிற்றில் குத்தினார். பின் நாட்களில்,
ஸ்ரீதேவி தம்மைப்பற்றி அதிகம் பேசாதவராகவே இருந்தார். அதன் காரணம் அவர் தன்னைச் சுற்றி ஒரு மனச்சுவர் எழுப்பி இருந்ததுதான். தனக்குள் என்ன உள்ளது என்பதை பிறர் அறிந்துகொள்வார்களோ என்பது குறித்து ஸ்ரீதேவி ஒருவித கவலை கொண்ட அச்சத்துடனேயே இருந்தார்.

ஒரு மனிசி உடலுக்குள் சிக்கிக்கொண்ட குழந்தையாயாகவே ஸ்ரீதேவி இருந்தார். அவர் மிகவும் வெள்ளந்தி அப்பாவி ஆனால் தனது அனுபவங்களால் ஒரு சந்தேக மனநிலையுடன் அவர் இருந்தார். எனவே அது அப்பாவித்தனத்துடன் பொருந்திப்போகவில்லை. அவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் இன்று வரை உள்ளது. இந்த ரணங்கள்ளோடு வாழ்ந்த வரை அவர் இரும்பு மனிசிதான். இதய சுத்தியோடு அவர் மகிழ்ச்சியாக இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும்.
இந்த வெள்ளந்தியின வாழ்க அவரின் பெயரும், புகழலும்…

#ஸ்ரீதேவி #Sridevi
#TamilCinema #tamilnadu 

#ksrpost
13-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...