Thursday, August 17, 2023

*சர்ச்சில் மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது. அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார். அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்*^.

*சர்ச்சில்
மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.
அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.
அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்*^. 
—————————————
சுதந்திர தினத்தன்று இந்திய பூர்விகம் கொண்ட ரிஷி சுனாக் பிரிட்டிஷ் பிரதமராக அமர்ந்திருக்கிறார். கன்சர்வேடிவ் கட்சியில் மாதம் ஒரு பிரதமர் மாறிக்கொண்டிருந்த நிலை மாறி ரிஷியால் ஒரு நிலையான(ஸ்டெபிளிட்டி) நல்லாட்சி நடக்கவிருக்கும் சுவடுகள் தெரிகின்றன




சர்ச்சில் கல்லறையில் உருண்டு, புரண்டுகொண்டிருப்பார். காரணம் ரிஷி  சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சிதான். இந்தியாவுக்கு விடுதலை கூடாது என பிடிவாதமாக இருந்தார்.

சர்ச்சிலின் தேர்தல் தோல்விக்கு பின், அட்டிலி பிரிட்டிஷ் பிரதமராக வந்தார். அட்டிலி இந்திய விடுதலைக்கு காரணம் கூட….

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியா, காந்தியை வெறுத்து பேசினார். பஞ்ச காலத்தில் இந்தியா இவரால் பாதிக்கபட்டது
இந்தியாவுக்கான உள்நாட்டு ஆட்சியை அதிகரிக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தது சர்ச்சைக்குரியது. சர்ச்சில் இந்திய துணைக்கண்டத்தின் சுதந்திரம் குறித்து தொடர்ந்து அகந்தையுடனும் திமிர்பிடித்தவராகவும் இருந்தார், மேலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய கேள்வி பரவலாக விவாதிக்கப்பட்டபோது அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை. அவரது கன்சர்வேடிவ் மனதிற்கு, ''இந்தியா ஒரு தெய்வீகமற்ற நாடு, துர்நாற்றங்கள் மற்றும் சலிப்புகள்.'' 
(அவரது தாய்க்கு எழுதிய கடிதத்தில், 1896) சர்ச்சில் உத்தமர் காந்தியை பக்கிரி என பேசியது  இப்பவும்  வேதனையான விடயம் . 

இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி சர்ச்சில்
மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.
அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.
அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்.

#இந்தியவிடுதலைவரலாறு #சர்ச்சில் #அட்டிலி #பிரிட்டிஷ்
#IndependenceDay #indiahistory
#இந்தியசுதந்திரதினம்
#15august2023 
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
17-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...