Monday, August 14, 2023

எங்களுக்காக வீழ்வது எவரானாலும் பலா பலன் எங்களுக்கே...

எங்களுக்காக வீழ்வது எவரானாலும்
பலா பலன்  எங்களுக்கே... 

முன்பொருநாள்
உனக்காக   உதவிட அவனிடம் பேசினேன்

பிரிதொரு நாளில்
அவனுக்கான உயர்வுக்கு அவளுடன் பேசினேன்

நேற்றைய நாளில்
அவளுக்கான தீர்வுக்கு வேறொருவருடன் பேசியிருந்தேன்

ஒவ்வொருவரும்  ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்ள 
பேசப்படுமிடத்தில்  இடத்தில்
என் பேச்சும் பணிகள் இருந்திருக்கிறது

 இன்றையநாளில்
எனக்காகப் பேச எவருமற்று
அவரவர் பெற்றதுடன்
அவசரமாகக் காணாமல் போனார்கள்..

இப்போது..
நானும் நானும் நிம்மதியாக எவ்வித அடிமைத்தனம் இல்லாமல்
பேசிக் கொண்டிருக்கிறோம்

எல்லா வினைக்கும் 
ஏதோ பொருள் இருக்கிறது
ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கிறது

 இப்படித்தான்…. சில பல சுகமான சுமைகள்….

(நாளை நாட்டின் 77 வது சுதந்திர நாள் 15-8-2023)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-8-2023.
10.30 இரவு

Picture- Hampi


No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...