Thursday, August 10, 2023

அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கில்……

அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கில் அவரையும மற்றும் அவரது மனைவியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (suo moto-relating to an action taken by a court of its own accord, without any request by the parties involved) வந்து விசாரிக்கிறார்.
மேலும் இது மட்டுமல்ல. இந்த இரண்டு ஆண்டுகளில், நில ஆக்கிரமிப்பு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
**

ரொம்ப ரேர்! பொன்முடிக்கு புது டென்சன்..ரிலீசான வழக்கை இன்று தாமாக கையிலெடுத்து விசாரிக்கும் ஹைகோர்ட். 
    தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ள நிலையில், அதன் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்து இருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டது. அங்கு பல்வேறு கட்டங்களாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அமைச்சர் பொன்முடி அவரது மனைவி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தன.

இதனை அடுத்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி வேலூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது. அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தேவையான ஆதாரங்கள் இல்லாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி கடந்த 1996 ஆம் ஆண்டு பதவி வகித்தபோது 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பொன்முடிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர் உட்பட 10 பேரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனையும் பொன்முடி வீட்டில் நடைபெற்றதுடன், அவரும் 2 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் பொன்முடிக்கு எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடரப்பட்டு ஜூன் 28 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கையில் கையில் எடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து எடுத்து இருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அதை விசாரிக்க உள்ளார். நீதித்துறை வரலாற்றிலேயே இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...