Monday, August 7, 2023

ரவீந்திரநாத் தாகூர்

இதயத்தை வழிநடத்திச் செல்…!
- ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் கவிதை
••••
'இதயம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசமற்று
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை இருக்கிறதோ,
குடும்பத்தின் குறுகிய தடைகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியில்லாமல்
பூரணத்துவம் நோக்கி
தன்னுடைய கைகளை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
என் தெய்வமே!

விழித்தெழட்டும் எனது தேசம்!

#rabindranathtagore #tagore #

 #தாகூர்

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...