Thursday, November 30, 2017

இன்று கன்னியாகுமரியில் புயல் மழை ...

இன்று கன்னியாகுமரியில்
புயல் மழை ...

Image may contain: people standing, ocean, sky, outdoor and water

ஆக நீங்கள் சொல்வதைப்போல தகுதியே தடை

அன்புள்ள இராதாகிருஷ்ணன் ஐயா,

இது மட்டுமா! மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் பிறந்த மண் என்று மூவரில் ஒருவரை மட்டும் குறிப்பிடுகிறார்! மற்ற இருவரான ஸ்யாமா சாஸ்திரிகளும், முத்துஸ்வாமி தீட்சிதரும் கவுண்டம்பாளையத்திலும் எருமநாயக்கன்பாளையத்திலும் பிறந்தனர் போலும்! மூவர் பிறந்ததும் திருவாரூரில்தானே! பழைய தஞ்சைத் தரணியில்தானே!

சர் சுவாமி ஐயர் என்கிறார். சர்.பி.எஸ்.சிவசாமி ஐயரைத்தான் குறிப்பிடுகிறார் என்று நாமாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! சர்.பி.எஸ்.சிவசாமி ஐயர் நீதித்துறையில் எப்பேர்ப்பட்ட நிபுணராகத்திகழ்ந்தவர், சுதந்திரப்போராட்ட வீரர்! நீங்களே பலமுறை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சென்னையில் அவர் பெயரில் பள்ளியே இருக்கிறதே!

முழு உரையையும் கேட்டால் இன்னும் எத்தனையொ! எழுதித்தராமல் வழக்கமாகச் சொல்லத் தோன்றுவது " எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது " என்பது மட்டுந்தான்போலும்!

எப்பொழுதேனும் அரிதாக வாய்தவறிப் பேசுவது வேறு. ஆனால் எதை  எழுதிக்கொடுத்தாலும் அப்படியே படித்துவிடுவது என்பது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல! உடனிருப்போரும் முதல்வராயிற்றே என்று பார்த்துச் 'செய்ய' வேண்டும் !

' ஆக '
 நீங்கள் சொல்வதைப்போல தகுதியே தடை!:)
-Venkada Prakash

Wednesday, November 29, 2017

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்!!! கூறியது யார்? மெத்தப்படித்த தமிழக முதல்வர்!!!

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்!!! கூறியது யார்? மெத்தப்படித்த தமிழக முதல்வர்!!!

ஞானத்தில் ஞாலத்தில் உயர்ந்தது தமிழகம் என்பார்கள். கவிக்கொரு கம்பன், பாட்டுக்கொரு பாரதி என்று ஜொலித்த தமிழகத்தில் கருமாந்திரம் பிடித்த முதலமைச்சர் என்பவர் கம்பராமாயணம் தந்த சேக்கிழார் என்று தஞ்சை எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் இன்று பேசுகிறார். எங்கே முட்டிக்கொள்ள? எங்கே மோதிக்கொள்ள? தமிழக மக்களே… உங்களுக்குத் தகுதியான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் வேண்டாமென்று தீர்க்கமாக நீங்களே முடிவெடுத்துவிட்டபிறகு இதையெல்லாம் பார்த்து எங்கள் தலையிலடித்துக்கொள்ளவேண்டியதுதான். தகுதியே தடை என்று நான் அடிக்கடி சொல்வதற்கேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இப்படியொரு கேடுகெட்ட நிலையா தமிழகத்திற்கு?! விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாயோ?  

மணல் குவாரிகளுக்கு தடை

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட மதுரை ஹைகோர்ட் பிரிவு அதிரடி உத்தரவு!  

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்திலும் ஒருவித அய்யம் இருக்கவே செய்கின்றது. இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா அல்லது நீர்க்குமிழி போல் நிலை இழக்குமா என்பது தான் என அய்யத்திற்கு காரணம். 

மக்கள் நலன் காக்கும் அரசு என்றால் இயற்கையின் நன்மை, நாட்டு மக்களின் நன்மையை கருதி அமைதி காக்கும். ஆனால் மக்கள் விரோத அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றது.  தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது   உச்சநீதிமன்றம் வரை  சென்று போராடி மதுக்கடைகள் திறக்க பாடுபட்டவர்கள். மக்கள் நலனில் இத்தனை அக்கறையா எனக் கேட்காதீர்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைக்கு எத்தகைய பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டவர்கள். அதே அக்கறை மணல் குவாரி விசயத்திலும் வந்து விட்டால் இன்றைய தீர்ப்பும் நீர்த்துப் போகுமே என்ற  அச்ச உணர்வு ஏற்படுகின்றது.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை
புதிதாக மணல் குவாரிகளை அமைக்கவும் கூடாது
சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை கேமரா பொருத்தி கண்காணிக்க ஆணை
மலேசிய மணலை எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவு
சோதனை சாவடிகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க உத்தரவு
தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்ட மணலை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை ஆணை
வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க ஆணை
மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ஆணை
வருங்காலத்தில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மணலை இறக்குமதி செய்யலாம்.
மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, நாட்டின் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இறக்குமதி மணலை அரசு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்யலாம்
மணல் இறக்குமதி குறித்து முறையான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
#sandmafia
#மணல்குவாரிகளுக்குதடை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-11-2017

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...

கோயம்புத்தூர் யுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,; தஞ்சாவூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்கட்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படி மக்களின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கில் தேவையற்ற பயனற்ற செலவுகளை செய்ய வேண்டுமா?

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...என்ற மனநிலையில் தமிழக அரசு இருக்கிறதோ...?

#MGR100
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-11-2017

“30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி?” என பரிகாசமான படமா…?


‘30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படத்தில் போட்டு கேலியாக பேசக்கூடிய அளவில் முதலமைச்சர் பதவி ஆகிவிட்டதே என்ற நிலை. தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூராரில் இருந்து கலைஞர் வரை மக்களிடம் சென்று களப்பணிகள் ஆற்றியே முதல்வரானதுண்டு. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி முதலமைச்சர் பதவி அவ்வளவு எளிதாக நினைக்கக்கூடிய வகையில் ஆகிவிட்டதே என்ற வேதனையான சூழல். தகுதியே தடை. எந்த அடிப்படை தகுதியில்லாமலும் யார் வேண்டுமானலும் அனுபவமற்ற எந்த உழைப்பில்லாத வகையில் முதலமைச்சர் ஆகிவிடலாமென்ற போக்காகிவிட்டது. இது ஆரோக்கியமான நிலையல்ல. தேர்தலில் 50% மேல் வாக்குகளை பெற்றவர்கள் தான் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கவேண்டும். ஆனால் இங்கோ 20% முதல் 30% வாக்குகளை பெற்றாலே வெற்றி பெற்றுவிடலாமென்று நாம் ஏற்றுக்கொண்ட ஜனநாயக வாடிக்கையாகிவிட்டது.
தரம், தகுதி, ஊழல் செய்தவர்கள், கிரிமினல்கள் எல்லாம் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதல் தான் இப்படி எல்லாம் பரிகாசமான படங்கள் வெளியாகின்றன.
ஒரு வியம் அரசியலில் கவனிக்க வேண்டியது. ஒருவர் எவ்வளவுதான் திறமையானவராகவோ நேர்மையானவராகவோ ஆளுமையானவராகவோ இருந்தாலும் தேர்தலில் வெல்வது எளிதல்ல. அதற்கு தற்போதுள்ள நிலையில் ஓர் தனி கணக்குண்டு. நிலைமைகள் எல்லாம் உண்மைக்கு மாறாக பொய்கள் மௌனமாக அடர்த்தியாகிவிட்டது. என்ன செய்ய…?
அவர் ரோடு போட்டார் சரி; பள்ளிக்கூடம் கட்டினார், குடிநீர் கொடுத்தார் சரி; என்பதெல்லாம் முக்கியமல்ல. எங்கேயோ என்னவோ பண்ணிட்டு போங்க. அதனால எனக்கு என்ன பலன்? என்கிற கேள்வி தான் நம்மூர் வாக்கு அரசியலின் அடிநாதம்.
தனிப்பட்ட முறையில் தனக்கான பலன் என்பதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கும் மக்கள்தான் 80 சதவீதத்துக்கும் மேலானவர்களாக இருக்கிறார்கள். சுயநலம், தேர்தலுக்கு காசு வாங்கி வாக்களிப்பது என்ற நிலை வந்துவிட்டது. பணம் கொடுத்து வாக்கினை பெற்று வெற்றி பெற்றவர் தன்னுடைய பதவியை பல கோடிக்கு தன்னுடைய ஆதரவை வழங்க விலை போகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவரோ தன்னலம், தன்னுடைய புகழ் என்பது தான் அவருடைய திடமான நோக்கமாக இருக்கிறது. அவருக்கு மக்களை பற்றி சிந்திக்க வேண்டியதுமில்லை, மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிட்டார். அவருடைய வாக்குச் சந்தை கடமையை நேர் செய்துவிட்டார்.
பிறகெப்படி ஆரோக்கியமான ஜனநாயக அமைப்புகளோ அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும். மக்கள் சரியான போக்கில் சென்று ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு மெய்ப்பொருள் கண்டால் தானே நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
முடிதிருத்தும் நிலையத்துக்கு செல்கையில் நாம் சரியாக அமர்ந்தால் தானே முடியை வெட்டி திருத்துவார். தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் அவரால் என்ன செய்ய முடியும். அதில் பாதிக்கப்படுவது முடியை வெட்ட வந்தவர் தானே. அதே போல தான் தேர்தலில் மக்கள் சரியாக அணுகவில்லையெனில் எப்படி நேர்மையாளர் ஆட்சிக்கு வரமுடியும். பிறகெப்படி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மேற்கத்திய நாடுகளில் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று தவறானவர்களை தலைவர்களாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்து பரவிவிடுகிறது. தலைவர்களுக்கான இலக்கணத்தை இல்லாதவர்கள் தான் இந்த வணிக அரசியலில் தலைவர்களாக தலையெடுத்து வியாபார அரசியலை நடத்துகின்றனர். இதை கண்கூடாக நாமும் பார்க்கின்றோம்.
இல்லாத மேடையிலே,
எழுதாத நாடகத்தை,
எல்லோரும் நடிக்கின்றோம்,
நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.
இப்படியான நிலையில் எப்படி அறம், நேர்மை, கண்ணியம், பொது வாழ்வில் தூய்மை என்பதை காண முடியும்? ஆனால் இதற்கும் முடிவுண்டு.
#அரசியல்
#பொது_வாழ்வு
#politics
#Public_life
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

28-11-2017.

Judiciary is not representative in Democracy, but it is a guardian to democracy and rule of law.

Public life is today a glasshouse.

There is a relentless demand for transparency and scrutiny. Our legal fraternity needs to be mindful of these legitimate urges of the people - the ultimate masters in a democracy.

All three organs of the State are obligated to be models of good conduct in a welfare state.


#judiciary
#democracy
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-11-2017.

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...