Thursday, November 30, 2017

ஆக நீங்கள் சொல்வதைப்போல தகுதியே தடை

அன்புள்ள இராதாகிருஷ்ணன் ஐயா,

இது மட்டுமா! மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் பிறந்த மண் என்று மூவரில் ஒருவரை மட்டும் குறிப்பிடுகிறார்! மற்ற இருவரான ஸ்யாமா சாஸ்திரிகளும், முத்துஸ்வாமி தீட்சிதரும் கவுண்டம்பாளையத்திலும் எருமநாயக்கன்பாளையத்திலும் பிறந்தனர் போலும்! மூவர் பிறந்ததும் திருவாரூரில்தானே! பழைய தஞ்சைத் தரணியில்தானே!

சர் சுவாமி ஐயர் என்கிறார். சர்.பி.எஸ்.சிவசாமி ஐயரைத்தான் குறிப்பிடுகிறார் என்று நாமாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! சர்.பி.எஸ்.சிவசாமி ஐயர் நீதித்துறையில் எப்பேர்ப்பட்ட நிபுணராகத்திகழ்ந்தவர், சுதந்திரப்போராட்ட வீரர்! நீங்களே பலமுறை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சென்னையில் அவர் பெயரில் பள்ளியே இருக்கிறதே!

முழு உரையையும் கேட்டால் இன்னும் எத்தனையொ! எழுதித்தராமல் வழக்கமாகச் சொல்லத் தோன்றுவது " எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது " என்பது மட்டுந்தான்போலும்!

எப்பொழுதேனும் அரிதாக வாய்தவறிப் பேசுவது வேறு. ஆனால் எதை  எழுதிக்கொடுத்தாலும் அப்படியே படித்துவிடுவது என்பது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல! உடனிருப்போரும் முதல்வராயிற்றே என்று பார்த்துச் 'செய்ய' வேண்டும் !

' ஆக '
 நீங்கள் சொல்வதைப்போல தகுதியே தடை!:)
-Venkada Prakash

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...