ராஜீவ் படுகொலை குறித்து
அவிழ்க்கப்படாத முடிச்சுகள் என்ற ஒரு பத்தி 1991ல் அந்த துயர சம்பவ நேரத்திலேயே எழுதியிருந்தேன். ராஜீவ் படுகொலை மிகவும் துயரமானது. யாரும் ஏற்றுக்கொள்ள
முடியாத ரணமான சம்பவம். ஆனால், அந்த வழக்கில் பல விடயங்கள் மர்மங்களாகவே இன்றுவரை தீர்வு
காணப்படாமலேயே உள்ளது.
அவர் படுகொலை
செய்யப்பட்ட அன்று, விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்து
திருப்பெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்லும் திட்டத்தில்
விமானம் பழுதடைந்துவிட்டது என்று சொல்லி பயணம் தள்ளிப் போகும் என்று ராஜீவிடம்
சொல்லப்பட்டது. ஆனால் திடீரென விமானம் சரியாகிவிட்டது. நீங்கள் புறப்படலாம் என்று
கூறியதில் உள்ள மர்மங்கள் என்ன? அவரோடு வந்த வெளிநாட்டுக்காரர்கள் சென்னைக்கு
வரவில்லையே? அவர்கள் எங்கே சென்றார்கள்?
அன்றைய
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்படி ராமமூர்த்தி திருப்பெரும்புதூரில்
கூட்டம் நடத்தும் இடம் பாதுகாப்பானது அல்ல என்று மறுத்த போதும் அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் மார்க்ரெட்
ஆல்வா அங்குதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்தியதன்
நோக்கம் என்ன? தனுவுக்கும், சிவராசனுக்கும்
காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு இருந்ததா? பெங்களூருக்கு
அவர்கள் எப்படி சென்றார்கள்.
அங்கு
யார் யாரை சந்தித்தார்கள்? என்பதையெல்லாம்
விசாரிக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். அதுமட்டுமல்லாமல் எப்படி சுப்பிரமணிய
சாமி ராஜீவின் துயர சம்பவத்துக்கு முன்பே தொலைபேசியில் ராஜீவ் கொலை செய்யப்பட்டுவிட்டாரே
என்று செய்திகள் வந்தது உண்மைதானா? சந்திராசாமி இதில் சம்மந்தப்பட்டுள்ளாரா? வளைகுடா
நாடுகள் பிரச்சனை மற்றும் ராஜீவுக்கு வந்த எச்சரிக்கை மற்றும் பன்னாட்டு புவியரசியல்
சூழல்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டதா?
கிட்டத்தட்ட
27 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும்
ராஜீவ் படுகொலையில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இதை குறித்து விரிவான கட்டுரையை
1991இல் ராஜீவ் படுகொலை நேரத்தில் பரபரப்பாக இருந்தபொழுது எழுந்த சந்தேகங்களை ஏற்றுக்கொள்கின்ற
வகையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. கே.டி.தாமஸ் அவர்கள் இதில்
தவறு நடந்துள்ளது என்று வெளிப்படுத்தியது வேதனை தருகின்றது. ஆனால் இந்த வழக்கில் சம்மந்தமில்லாதவர்களின்
வாழ்க்கை எல்லாம் இருண்டுவிட்டதே என்பது தான் நம்முடைய வேதனை.
எனது விரிவான பதிவு
நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களின் காலந்தாழ்த்திய ஒப்புதல்.
#ராஜீவ்படுகொலை
#ஈழத்தமிழர்
#rajiv_assassination
#Srilankan_tamils
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-11-2017
No comments:
Post a Comment