Sunday, November 26, 2017

பாமரர்கள் அறிந்தது படித்தவர்களுக்கு புலப்படவில்லை ஏனோ....? ........................................................... தகுதியற்ற, தரமற்ற கிரிமினல், ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா.......?


சமீபத்தில் முன்னால் அமைச்சர் தங்கவேலுவின் மகன் திருமணம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.மண விழா முடிந்தபிறகு கிராமத்திற்கு சென்றிருந்தேன். என் கிராமத்தில் ஒரு தொழிலாளி. அவரது மகனுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் டெல் மென்பொருள் பொறியியல் கம்பெனியில் எனது சிபாரிசின் பேரில் வேலை வாங்கி கொடுத்திருந்தேன். 
எப்போது கிராமத்திற்கு வந்தாலும் அவர் என்னை சந்திப்பதுண்டு. 

அவர் பாணியில், கிராமத்து நடையில் என்னிடம் கேட்டார். "ஐயா, கொள்கை ரீதியாக இல்லாமல், மக்களை நினைக்காமல், சுய ஆதாயம், தற்புகழ்ச்சி, சுயவழிபாடு, தகுதியற்ற, தரமற்ற கிரிமினல், ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா? இது எப்படி? தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாலே அவர்கள் சமுதாயத்தில் பெரிய மனிதர் ஆகிவிடுவார்களா? பிறகு எப்படி நல்ல காரியங்கள் எல்லாம் நாட்டில் நடக்கும். இதற்கும் ஏடுகளும் , தொலைக்
காட்சிகளும் தகுதியற்றவர்களை தூக்கி பிடிக்கின்றனர்." என்றார் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு சாதாரண சாமானியன். 

இதே கருத்தை அமெரிக்காவில் உள்ள பிர்ன்ஸ்டன் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சமீபத்தில் நடத்திய கருத்தரங்களில் விவாதிக்கப்பட்டது. 

தகுதியற்ற, தரமற்ற,கிரிமினல் பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே அவர் ஒரு ஜனநாயகத்தில் தலைவராக,மைய புள்ளியாகவோ, அங்கமாகவோ, மக்கள் பிரதிநிதியாகவோ கருத முடியாது. 
 ஒரு தவறான கணக்கீட்டில் வந்தவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் ரசாயணத்தில், மக்களின் உண்மையான, நேர்மையான, ஆளுமையான மனிதர்களே மக்களின் பிரதிநிதியாக திகழ முடியும். பெரும்பான்மை மக்கள் ஆதரவளித்துவிட்டாலே என்றால் தகுதியற்றவர்கள் எல்லாம் தலைவராக முடியாது என்ற கருத்துகளை ஜனநாயகத்தில் அவசியமாக கவனிக்கப்பட வேண்டியது என அந்த கருத்தரங்களில் புதிய கோணத்தில் கருத்துக்களை வெளியிடப்பட்டது.

மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் கூறிய கருத்துகளை ஒரு கிராமத்தில்  சாதாரண பாமரன் சொல்கையில், படித்தவர்களோ, தேர்தல் நாளன்று அவர் வீட்டிற்கு பணம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு பணம் வரவில்லையே என்று வாங்கிக் கொள்ளும்போது எப்படி நமது ஜனநாயகம் வலுப்பெறும், நேர்திசையில் பயணிக்கும்? கேலிக்கூத்தான இந்த போலி மற்றும்  பிம்பமாமான ஜனநாயகத்தை மாற்றி  மாற்று அரசியலுக்கான நேர்மையான பாதையை வகுக்க வேண்டும்.
#Democracy 
#ஜனநாயகம்
#பொது_வாழ்வு
#அரசியல்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
26/11/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...