Wednesday, November 29, 2017

மணல் குவாரிகளுக்கு தடை

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட மதுரை ஹைகோர்ட் பிரிவு அதிரடி உத்தரவு!  

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்திலும் ஒருவித அய்யம் இருக்கவே செய்கின்றது. இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா அல்லது நீர்க்குமிழி போல் நிலை இழக்குமா என்பது தான் என அய்யத்திற்கு காரணம். 

மக்கள் நலன் காக்கும் அரசு என்றால் இயற்கையின் நன்மை, நாட்டு மக்களின் நன்மையை கருதி அமைதி காக்கும். ஆனால் மக்கள் விரோத அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றது.  தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது   உச்சநீதிமன்றம் வரை  சென்று போராடி மதுக்கடைகள் திறக்க பாடுபட்டவர்கள். மக்கள் நலனில் இத்தனை அக்கறையா எனக் கேட்காதீர்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைக்கு எத்தகைய பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டவர்கள். அதே அக்கறை மணல் குவாரி விசயத்திலும் வந்து விட்டால் இன்றைய தீர்ப்பும் நீர்த்துப் போகுமே என்ற  அச்ச உணர்வு ஏற்படுகின்றது.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை
புதிதாக மணல் குவாரிகளை அமைக்கவும் கூடாது
சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை கேமரா பொருத்தி கண்காணிக்க ஆணை
மலேசிய மணலை எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவு
சோதனை சாவடிகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க உத்தரவு
தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்ட மணலை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை ஆணை
வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க ஆணை
மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ஆணை
வருங்காலத்தில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மணலை இறக்குமதி செய்யலாம்.
மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, நாட்டின் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இறக்குமதி மணலை அரசு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்யலாம்
மணல் இறக்குமதி குறித்து முறையான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
#sandmafia
#மணல்குவாரிகளுக்குதடை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-11-2017

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...