Wednesday, November 8, 2017

பரிணாமம்

பரிணாமம்...
-----------------

பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நடவடிக்கையே. அதுபோல, பகுத்தறிவின் எல்லை இதுதான் என சொல்லமுடியாது. பகுத்தறிவுகளில் மாற்றங்கள் வரும். மாற்றங்கள் நிலையானவை. அந்த மாற்றங்களுக்குள் எது நியாயங்கள், அறங்கள் என்று முடிவு செய்வது அந்தந்த காலகட்டங்களே. 

இயற்கையின் நகர்வுக்கேற்ப அந்தந்த நேரங்களில் மனித சமுதாயத்தின் போக்குகளை கொண்டே பரிணாம வளர்ச்சியில் நியாயங்களும், தீட்டுக்களும் தீர்மானிக்கப்படுகின்றன. பின்நவீனத்துவம் என்று சொல்லப்படுவதை கடந்து; இன்னொரு அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்னொரு தத்துவமும் வரலாம். பின்நவீனத்துவத்துக்கு எதிர்வினையாக கூட வரலாம். பரிணாமமும், நியாயங்களின் போக்குகளில் சமூகம் எடுத்துக் கொள்வது தான். 

 இந்த விடயங்களில் அகமாகவும், அந்தரங்கமாகவும் சில கமுக்கங்கள் நடக்கின்றன. மந்தனங்கள் என்று சொல்லக்கூடிய இவற்றுக்கு தான் மதிப்பும் கூட. வெளிப்படையாக உதட்டளவு பேச்சுகள் தான், புறவெளிப்பாடு தான். இவை பொய்த்தும் போய்விடுகின்றன. 

எனவே பரிணாமம் மாற்றம் என்பது அந்தரங்கமானது சில மனித நடவடிக்கைகளில். ஆனால் விலங்கியல் பார்வையில் பரிணாமம் என்பது வெளிப்படையான கூறுகளின் வளர்ச்சி தெரியும் என்றாலும், அதிலும் சில மர்மங்களும் தவிர்க்க முடியாது.

#சமூக_பரிணாமம்
#மாற்றங்கள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08/11/2017

No comments:

Post a Comment

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1 ———————————————————— கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மாணவ பருவத்...