Friday, March 31, 2017

இந்தியாஅரசியல்

வாசமில்லாத மலர்களிது. வசந்தத்தை தேடுகின்றன...
-------------------------------------

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் செய்திகளை தினசரிகளில் புரட்டும் போதும், தொலைக்காட்சிகளில் காணும் போதும் 
தினகரன், தீபா, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோரது பெயர்களை அடிக்கடி காணும் போது மனம் ஒப்பவில்லை. 

இயற்கையாக மலரும் மலர்கள் மணம் வீசுபவையாக இருக்கும். அவைகள்  மொக்கு, மொட்டு, அரும்பு, முகிழ், மூகை, மலர் என  படிப்படியாக மலரும் போது தான் முழுமையா மலர் எனப்படுகின்றன. அதில் மணம் இருக்கும். தற்போதெல்லாம் திருமண மணவறை அலங்காரங்களில் காகிதப் பூக்களை கொண்டும், நூல்களை கொண்டு பூ வடிவங்கள் செய்து அதனைக் கொண்டு அலங்கரிக்கும் அதில் வாசனை இருப்பதில்லை.  

இவ்வாறு தான் அவசரத்திற்கு சுயலாபம் கருதி அரசியல் அரிதாரம் பூசப்பட்டு சந்தையில் இறக்குமதியானவர்கள் தான் தினகரன், தீபா, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர். அரசியல் என்றால் அதில்  பொதுவாழ்வு, பொதுநலம் வேண்டாமா? சமூக பார்வை வேண்டாமா? மொழியறிவு வேண்டாமா? புரிதல் வேண்டாமா? அனுபவம் வேண்டாமா? தியாகம் வேண்டாமா? 

இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இந்த மூவரிடம் உண்டா? இதில் எப்படி பன்னீர்செல்வத்தை  இணக்கின்றீர்கள் என யோசிக்கலாம். அவரும் 2001ல் தகுதி மீறி திடீர் என முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தானே? 

இந்த ஆயத்த அரசியல்வாதிகள் எங்கிருந்து தொடங்கினார்கள்?  

ராஜாஜியின் மகன். சி.ஆர். நரசிம்மன்.  சுதந்தர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவையில் தொகுதியில் 1951, 1957 மக்களவைத் தேர்தலில்  சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கடுத்து 1962ல் நடந்த தேர்தலில் திமுகவின் க.இராசாராமிடம் தோற்றுப்போனார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எந்த அரசியல் களத்திலும், பொதுவாழ்விலும் இருந்ததாக தெரியவில்லை. 

சுதந்திர போராட்ட வீரர் சேலம் விஜயராகவ ஆச்சார்யாவின் புதல்வர் ஆர்.டி.பார்த்தசாரதி மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரசால்  அறிவிக்கப்பட்டார். அதற்கு முன் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.  பொதுவாழ்வில் இருந்ததாக தகவல் இல்லை. 

நேரு தனது மகள் இந்திராகாந்தி அவர்களை ஒருங்கினைந்த காங்கிரசின் தலைவியாக முன்மொழிவதற்கு பாட்டீல்,ஜெயபிரகாஷ் நாராயணன்,  ராஜேந்திர பிரசாத் , கிருபளானி  இந்திராவின் அத்தை விஜயலட்சுமி பண்டிட், சரோஜினி நாயுடு  ஆகியோரே கடுமையாக  எதிர்த்தனர். கடுமையான கருத்துக்களை முன் வைத்தனர். இந்திராகாந்தியை அரசியலில் படிப்படியாக கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் ஆலோசனையும். அதனையும் மீறித்தான் நேரு இந்திராகாந்தியை காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தார்.  

கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின்  புதல்வி பத்மஜா நாயுடு எந்த ஒரு களப்பணியில் இல்லாமல் தான் கவர்னர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 

இப்படியாக பலர் காங்கிரசில் எந்த ஒரு உழைப்பும் இல்லாமல்  முன்னுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கு பின்னால்  தகுதியானவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். 

1986 என நினைக்கின்றேன், உயர் நீதிமன்றத்தில் 16வது கோர்ட்டில் நீதிபதி ரத்னம் அவர்கள் முன்னிலையில் CRP வழக்குகள் விசாரணையில் நடந்துக் கொண்டிருக்கின்றது.  சீனியர் வழக்கறிஞர் வி.பி.ராமன் அவர்களிடம் ஜூனியராக அப்போது பணியாற்றிய ஒரு பெண் வக்கீல் வழக்கறிஞர் குமாஸ்தா ,'மேடம், டெல்லியில் இருந்து தொலைபேசி வந்ததாகவும், இந்த எண்ணுக்கு உங்களை தொடர்புகொள்ள சொன்னதாக'ஒரு துண்டு சீட்டை அளித்தார். அதனை தொடர்ந்து சுமார் 20நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே சென்று வந்தார். 
மாலை டெல்லி பயணம். அடுத்த நாள் டெல்லியில் இருந்து சென்னை பயணமானார். இதற்கிடையில் அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் வேட்பாளராகின்றார்.  காங்கிரசின் முன்னால் தலைவரின்  பேத்தி என்ற தகுதியின் அடிப்படையில், அதுவரை காங்கிரஸ் கட்சிக்கு எந்த உழைப்பும் அல்லாத அவரை ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கின்றது அன்றைய காங்கிரஸ்.அன்று என்னருகில் இருந்த , அனைவரும் அறிந்த  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஏசய்யா என்னிடம்," நல்லவேளை நீயும் நெடுமாறனும் காங்கிரசில் இல்லை" என வேதனையுடன் பகிர்ந்துக் கொண்டார்.  அந்த ஏசய்யா பற்றி இன்னொரு தகவலை இங்கு குறிப்பிட வேண்டும். சென்னை, ஸ்பென்சர் சந்திப்பில் எம்.ஜி.ஆர் சிலைஅருகில் ராஜிவ்காந்தி சிலை அமைக்க வேண்டும் என 1992ல் அனுமதி பெற்றவர். அவரும் மறைந்து விட்டார் என்பது வருத்தத்தக்க விடயம்..

எம்.ஜி.ஆர் தன்னுடன் திரைப்படங்களில் நடித்து வந்த வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு 1986ல் மேலவை உறுப்பினர் பதவியை  அளிக்க முன் வந்தார். 

ஆனால்  கே. சுந்தரம் என்ற வழக்கறிஞர் " திவாலான ஒருவர் மேலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாது என்ற சட்டம் நிலுவையில்  இருப்பதை  குறிப்பிட்டு நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக பல குளறுபடிகள். தன்னுடன் நடித்த சக நாயகிக்கு உறுப்பினர் பதவி அளிக்க இயலாத மேலைவை அமைப்பு ஆட்டுக்கு தாடி தேவையே இல்லை என ஜனாதிபதி ஒப்புதல் பெற்று வரலாற்று கீர்த்தி மிக்க மேலவையை கலைத்தார்  பிரகஸ்பதி எம்.ஜி.ஆர். 

இது போல பொதுவாழ்வு என்றால் என்னவென்று அறியாத ஜெயலலிதாவை  அரசியலுக்கு அழைத்து வந்தது தான் தமிழக  அரசியலின்  இழுக்கு. அழுக்குகள்அதிமுகவில்அடைக்கலமாகி அவைகள்  ஏற்படுத்திய கறைகளில் சிலர் தான் இந்த  ஓ.பன்னீர்செல்வம், தீபா, தினகரன் ஆகியோர்.. 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் நேருவால் தேடப்பட்ட போது தமிழகத்தில் இருந்து பொருளாதார மேதை ஆர்.கே .சண்முகசெட்டியாரை தேர்வு செய்தனர்.  இவர் கொச்சி சமஸ்தானம் திவானாக  பணி புரிந்தவர். இரண்டாம் உலகப்போரின் இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க பெருமளவில் உதவியவர்.  நாட்டுப்பிரிவினை வந்த போது ஏற்பட்ட கணக்கு வழக்கு சிக்கல்களை திறம்பட, நியாயமான முறையில் தீர்த்துவைத்தவர்.  இலக்கிய மற்றும் எழுத்தாற்றல் மிக்கவர். திறமை இல்லாத வாரிசுகள்முன்மொழிய 
இத்தகைய திறமைசாலியான  இவர் மீதும் அபாண்ட பழி சுமத்தி இரண்டு ஆண்டுகளில்  நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர். 

பணக்காரரர் என்ற ஒரே தகுதியால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மத்திய அமைச்சர் பொறுப்பேற்றார். பின்னர் முந்திரா ஊழல் வழக்கில் பதவியை ராஜினாமா செய்தார்.  

இதில் மாறுபட்டவர்கள் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , தந்தை பெரியார், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜோசப்.சி.குமரப்பன்,  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அச்சுதபட்டவர்தன் , கிருபளானி, மோகன் தாரியா போன்ற சில தியாக செம்மல்கள் தான் பதவிகளை நாடாமல் பொதுவாழ்வில் பயணித்த முன்மாதிரிகள். 

அச்சுதபட்டவர்தன் அவர்களைப் பற்றி ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை நேரு விடுத்தார். அதற்கு பதில் அளித்த தியாகசீலர் அச்சுதபட்டவர்த்தன் ," என் பணி நாடு சுதந்திரம் பெற்றதுடன் முடிந்துவிட்டது. நான் கிராமத்திற்கு செல்கின்றேன். இதோ இந்த ஜோல்னா பையில் இரண்டு பைஜாமாவும், ஜிப்பாவும் உள்ளது . எனக்கு இது போதும்" என்றார். 

வாசனையற்ற இந்த தீபா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்ற காகிதப் பூக்கள் மேடையையும், பாடையையும்  அலங்கரிக்கலாம் ஆனால் இவர்கள் பூசைக்கு உதவும் தியாக மலர்களாக முடியாது.

#இந்தியாஅரசியல்
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
31.03.2017

எஸ்.ஜே.வி.செல்வநாயகம்


மலேசியாவில் பிறந்த வேலுப்பிள்ளை #செல்வநாயகம் தமிழீழ விடுதலைக்காக அறவழியில் போராடிய பெருமைக்குரிய ஈழத் தமிழர்களின் தலைவர்.

அவர்90%இந்துவாக்காளர்களைக்
கொண்ட #காங்கேசன்துறை தொகுதியில் 1952 முதல் 1956 தவிர 1947 முதல் 1976 இல் இறக்கும் வரை 25 வருடங்கள் எம்.பி யாக இருந்த கிறிஸ்தவர். 1947, 1956, 1960 (மார்ச்), 1960 (ஜூலை),1965,1970 பொதுத்தேர்தல்கள் மற்றும் 1975 இடைத்தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்றார்.

”என்னைப்போற்றாதீர்கள், என் கொள்கைகளைப்போற்றுங்கள்” என்று கூறியவரும், 1976 இல்வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனித்தமிழீழத்தை பிரகடனப்படுத்தியவரும்,#ஈழத்துக்காந்தி என அழைக்கப்படுபவரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தைசெல்வா(எஸ்.ஜே.வி.செல்வநாயகம் Q.C) அவர்களின் 115 ஆவது பிறந்த தினம் இன்று...

மதுரை

மதுரை கோபி ஐயங்கார் டிபன் சென்டர்:
 -----------------------------------
மதுரையில் மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி இணையும் இடத்தில்  காங்கிரஸ் அலுவலகம் இருந்தது. தென் மாவட்ட விடுதலை வீரர்கள் காமராசர் உட்பட பலரும் தங்கிய இடம்.

1960களிலிருந்து பழ. நெடுமாறனுடைய நிர்வாகத்தின் கீழ் இக்கட்டடம் இருக்கின்றது.அரசியல் மாணவர் பருவத்திலிருந்து நான் சென்ற இடம். 1970ல் சில நேரம் கூட மதுரைக்கு தொடர் வண்டியில் சென்றுவிட்டு, அங்கு குளித்துவிட்டு கிராமத்திற்கு சென்ற காலங்கள் எல்லாம் உண்டு.


இந்த மாடியின் கீழ் கோபி உணவு விடுதியுண்டு. சுவையான பலகாரங்கள் கிடைக்கும். கோபி ஐயங்கார் டிபன் சென்டரில் வெள்ளை ஆப்பம், கோதுமை தோசை, கத்தரிக்காய் பஜ்ஜி, அடை அவியல், ரவா பொங்கல், பால்போளி, சீரக போளி, புளியோதரை, கார சட்னி ஃபில்டர் காபி  போன்ற சுவையான உணவு வகைகள் மதுரையில் பிரபல்யம்.
100 ஆண்டுகளாக இந்தக் கடை உள்ளது. இந்தக் கடையை மூலக்கடை என்று அழைப்பதும் உண்டு. இந்தக் கடையின் உரிமையாளர் கோபாலன் ஐயங்கார் 18 வயதில் இந்த டிபன் சென்டரை துவக்கினார்.இன்றைய ஆங்கில ஹிந்துவில் விரிவான பத்தி வெளி ஆகியுள்ளது.

மதுரை மேலச் சித்திரை வீதியில் இந்த பிள்ளையார் கோவில் மண்டபம்;1924ஆம் ஆண்டில் தியாக சீலரான சுப்பிரமணிய சிவா அந்த மண்டபத்தில் தேசியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பாரதியின் பாடல்கள் மற்றும் இந்திய நாட்டின் வரலாறு, தமிழ்மொழியின் சிறப்பு போன்றவை கற்பிக்கப்பட்டன. சிவா அவர்களின் மறைவிற்கு பிறகு அம்மண்டபம் காங்கிரசு கட்சியின் அலுவலகமாக மாறியது.
மதுரை நகரையும், மதுரை மாவட்டத்தையும் சேர்ந்த நா.ம.ரா. சுப்புராமன்,  அ. வைத்தியநாதய்யர், மௌலானாசாகிப், என்.ஆர். தியாகராசன், ஆர். சிதம்பரபாரதி,  அ. சிதம்பர முதலியார், எல். கிருஷ்ணசாமி பாரதி, பூ, கண்ணன், புலி, மீனாட்சிசுந்தரம், சீனவாச வரதன், இலட்சுமிபதி ராசு போன்ற தியாக சீலர்கள் அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றார்கள். இம்மண்டபத்தில்தான் அவர்கள் கூடி விடுதலைப் போராட்டத்திற்கான திட்டங்களைத் தீட்டினார்கள். விருதுநகரிலிருந்து தலைவர் காமராசர் மதுரை வரும்போதெல்லாம் இம்மண்டபத்தில் தங்கி, தோழர்களுடன் கலந்தாய்வு செய்வது வழக்கம். அவர் முன்னின்று நடத்திய பல போராட்டங்களுக்கான பாசறையாகவும் இம்மண்டபம் திகழ்ந்தது. மண்டபத்திற்குள்ளேயிருக்கும் பிள்ளையார் சிலைக்குப் பின்புறம்தான் தங்களது ஆயுதங்களைத் தொண்டர்கள் மறைத்து வைப்பது வழக்கம்.
#மதுரை 
#கோபிஐயங்கார்டிபன்சென்டர்
#காங்கிரசு
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
31.03.2017

Thursday, March 30, 2017

ஈழப்போர்

இன்றைய (30-3-2017) டைம்ஸ் ஆப் இந்தியா Times of india வெளியிட்ட
செய்தியில்,விடுதலை புலிகளை ஒழிக்க இந்தியா உதவியது என இந்திய முன்னாள் கப்பல் படை தளபதி சுனில் லம்பா ஒப்புதல்.....!

போரின் போது இவர்தான் 
பொறுப்பில் இருந்து,இலங்கையில்
ராஜபக்ச அரசுக்கு உதவினார்

#ஈழம் #
ஈழப்போர்
#இலங்கை
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2017

Farmers

Farmers with small land holding produce almost 80% of food supply in Asia and Africa. However majority of world's undernourished people are also the same farmers. Credit availability and market access can be key to dealing with this paradox.Do you agree? 
தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, இராமநாதபுர மாவட்ட சாயல்குடி உள்ளடங்கிய கரிசல் மண்ணில் மிளகாயும், பருத்தியும், சூரியகாந்தியும், மிளகாயில் ஊடுப்பயிராக வெங்காய பயிர் செய்வது உண்டு.
ஆனால், இந்த வருடம் மழையில்லாமல் சரியான வெள்ளாமை இல்லாமல் ஆகிவிட்டது. விளைந்த மிளகாய்க்கும் விலை இல்லை.கிணற்றில் தண்ணீர் உரிய  அளவு  செடிகளுக்கு கிடைக்காததால் தகுந்த விளைச்சல் இல்லை .வழக்கமாக ஏக்கருக்கு 10முதல் 13குவிண்டால் கிடைக்கும் .ஆனால் தற்போதுஅதிகபட்சமாக  5குவிண்டால் வரை கிடைக்கும் .கடந்த ஆண்டு குவிண்டால்  ரூபாய் 12 ஆயிரம் விலை போனது .தற்போது ரூபாய் 6.500 விலை போகிறது .
படம் :கடலையூர் விவசாயி செல்வராஜ்
#Agriculture #Sustainability
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2017


தொகுதி சார்ந்த தேர்தல் அறிக்கை;

தொகுதி சார்ந்த தேர்தல் அறிக்கை;
1989 தேர்தலில்.
-----------------------------------
தேர்தலில் தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை என  இப்போது
பேசப்படுகின்றது. 

1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கோவில்பட்டியில் தேர்தல் நான் களம் கண்ட போது;மூன்று பக்கத்தில் அந்த தொகுதியை குறித்து 40 பிரச்னைகளை தேர்தல் அறிக்கையாக 28 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட அனுபவம் எனக்கு உண்டு.

அப்போது அந்த தொகுதியில் கோவில் பட்டி வட்டத்தில் கிழவிபட்டி,சங்கரன் கோவில் வட்டத்தில் வெள்ளாகுளம், சங்குபட்டி கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. குடிநீர் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. 

கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்'என்ற பாலசந்தரின் திரைப்படம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள ஏழுபட்டி கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது.அந்தத் திரைப்படம் வந்த நான்கு வருடம் கழித்து அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டேன். 

கிராமங்களுக்கு உயர்நிலை குடிநீர்த்தொட்டி வசதியும், கைப்பம்பு குடிநீர்வசதியும் இன்ன இன்ன கிராமங்களுக்கு அமைத்து தருகிறோம் என்ற உறுதியையும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தேன்.

எட்டயபுரம் மகாகவி பாரதி நெசவு ஆலை தொழிலாளருக்கு வீட்டு வசதியும், சங்கீத மேதை முத்துசாமி தீட்சதர், விளாத்திகுளம் சுவாமிகள் என்ற நல்லப்ப சுவாமிகள்  கால் ஊன்றி எட்டயபுரத்தில் இசைக் கல்லூரியும், 

மகாகவி பாரதியும், சீதகாதியும், சோமு சுந்தர பாரதி போன்ற தமிழறிஞர்கள் உலாவிய மண்ணில் கிராமிய படிப்புகள் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும், 

எட்டயபுரம் தனி தாலுக்கா அமைக்கப்படும் என்றும், 

கோவில் பட்டி வட்டாரத்தில் விவசாயப் போராட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமானவர்கள் அதாவது 20 மேற்பட்டவர்கள் உரிமை கேட்டு போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் எனவும், 

விவசாய விலை பொருட்களுக்கு நியாயமான இலாப விலையும், விவசாய இடுப் பொருட்களின் விலை குறைக்கவும் குரல் கொடுப்பேன் எனவும், 

கோவில்பட்டியில் உள்ள அரசு விவசாயப் பண்ணையில் விவசாயக் கல்லூரி துவக்கவும் குரல் கொடுப்பேன் எனவும், 

வறண்ட குளங்களை தூர்வாரி முள் செடிகளை வெட்டுவதும்என்றும், 

கேரள அச்சங்கோவில் - பம்பையை வைப்பாரோடு இணைத்து கங்கை, வைகை, தாமிரபரணி, குமரிமுனை வரை தேசிய நதிகளை இணைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கை விரிவுப்படுத்தி கோவில்பட்டி வட்டாரத்தில் நீர்ப்பாசன வசதியை பெருக்குவேன் எனவும், 

கோவில்பட்டி குடிநீருக்கு புதிய பைப் லைன் அமைப்பதும், 

அரசு கலைக்கல்லூரி அமைப்பது எனவும்,

புறவழி சாலை அமைக்கவும்,

பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும், 

என பல அத்தொகுதியின் தேவைகளை தேர்தல் அறிக்கையில் அப்போது சொல்லியிருந்தேன்.

ஆனால் வெற்றி வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. என்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாரளர் சோ. அழகிரிசாமி வெற்றி பெற்றார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். எளிமையானவர், சைகளில் பிரயாணம் செய்யக்கூடியவர், கோவில்பட்டி சாத்தூர் டீ கடையில் உட்கார்ந்து அனைவரையும் சந்திக்கக் கூடிய நல்ல மனிதர்.என் மீதும் அன்பு கொண்டவர். அக்கட்சியின் சட்டமன்ற தலைவராகவும் விளங்கியவர். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும்;சரி பெரியவர் நல்லவர் அவரிடம்தானே தோற்தோம் என்று எனக்கு ஒரு ஆறுதல். 

தோற்றபின்பும் நான் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பேருந்துகள் செல்ல கிழவிபட்டிக்கும், வெள்ளாகுளம் - சங்குப்பட்டி என இரண்டு மார்க்கங்களுக்கும் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
150 கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக அடிப்பம்பு வசதிகளையும் செய்துக்கொடுத்தேன். 8 கிராமங்களக்கு குடிநீர் உயர்நிலைத் தொட்டிகளை கட்ட கடமைகளை செய்தேன். ரோடு வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதிகளும் செய்து தரப்பட்டது. எட்டயபுரத்தில் நெசவாளர் காலனியும் கட்டப்பட்டது. 

இப்படியானநினைவுகள்......
இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கையை செய்திதாளில் பார்த்தபோது இந்த நினைவு ஓட்டங்கள் மனதில் எழுந்தது.

#தொகுதிதேர்தல்அறிக்கை
#கோவில்பட்டி
#தேர்தல்1989
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2017


Wednesday, March 29, 2017

திரைக் கலைஞர் சிவகுமார்

இன்றைக்கு மதிப்புக்குரிய திரைக் கலைஞர் சிவகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கும், எனக்கும் 1984 கால கட்டத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு.
நான் அவரை என்ன முதலாளி? என்ன கவுண்டரே என்று அழைப்பேன்? அவரும் என்னை,என்னையா கருசக்காட்டு நாயக்கரே என்று அழைப்பார்? இப்படியான பிரியமான நட்பு.
அவரும் கி.ரா.வை தந்தையாக மதிக்கக்கூடியவர்.  என் நூல்கள் வெளியிட்டு விழாக்கள் அனைத்திலும் திரு. சிவகுமார் அவர்கள் பங்கேற்றுள்ளார்.

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இலக்கியம், அரசியல், பொது விசயங்களை விவாதிப்பது உண்டு. மகாபாரதம், இராமாயணத்தையும் கதைச் சுருக்கத்தை அவர் இரண்டு மணிநேரத்தில் தனித்தனியாக விரிவாக சொல்லக்கூடிய ஆற்றலும், ஆளுமையும் பெற்றவர்.

அடிக்கடி சொல்வார்;இதற்கு நீதாய்யா காரணம் என்று சொல்வார். ஏன் என்று கேட்டால் இராமாயணம் உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரைத் தொகுப்புக்களை நீதாய்யா கொடுத்த அந்த நூல்களை படித்துதான் எனக்கு ஆர்வம் வந்தது.

இராமாயணத்திற்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், ரசிகமணி டி.கே.சி.,இராஜாஜி,
அ.ச. ஞானசம்பந்தம் போன்ற பல தமிழறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள்.

மகாபாரதம் கும்பகோணம் பதிப்பகம் வெளியிட்ட இராமானுசாச்சாரியார் தொகுத்து வெளியிட்டதும், வில்லி பாரதமும், நல்லாபிள்ளை பாரதமும், இராஜாஜி உரை, வை.மு.கோபால
கிருஷ்ணமாச்சாரியார்போன்ற மகாபாரத பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.

சிவகுமார் அவர்கள் இராமாயணத்தைப் பற்றி நூறு பாடல்களில் கம்பன் என் காதலன் என்ற உரையும், மகாபாரதம் முழு பாரதக் கதை இரண்டு மணிநேரத்தில் ஆற்றிய உரையை கேட்டாலே முழுமையான இரண்டு காப்பியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அவர் வரைந்த ஓவியங்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளாகவே என்றைக்கும் இந்த மண்ணில் இருக்கும்.
அவர் நடித்த திரைப்படங்களில் உள்ள அறிய புகைப்படங்களை தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளார்.

ஓவியங்களின் தொகுப்பையும், திரைப்பட புகைப்படங்களின் தொகுப்பையும் இவர்களின் புதல்வர்களான தமிழகம் போற்றும் திரைக் கலைஞர்களான சூர்யாவும், கார்த்தியும் இணைந்து பல லட்சங்கள் செலவு செய்து தனித்தனியாக இரண்டு அரிய தொகுப்புகளாக தமிழகத்திற்கு அற்பணித்தது மகிழ்ச்சியான செய்தியாகும்.இதுசினிமாவரலாற்றுக்கு ஆவணமாகவும்,இவரின் ஓவியங்கள் தொகுப்பும் தமிழகத்தின்கலாச்சாரத்தை பறைச்சாற்றும் ஆதாரங்களாக விளங்கும்.

சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது இவரின் பேச்சு கொங்கு கிராமத்து பேச்சுவழக்கில் இருக்கும்.
 எருமை கட்டித்தயிரிலிருந்து கம்பங்கூல் வரை பேசிக்கொள்வது வாடிக்கை. தமிழ் படைப்புகளிலிருந்து  சினிமா ஏடுகளாக வெளிவந்த பேசும் படம்,பொம்மை வரையான பேச்சுகள் தொடரும். 

அவரோடு பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது.
என்னுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் கேள்விக் கேட்டு அதுக்குறித்து கண்டிப்பதும் உண்டு. என் மனைவி இறந்தபோது என்னய்யா அற்புதமான இல்லாலை இழந்துவிட்டியே நீ கவனித்திருக்க வேண்டாமா என்று கவலையோடு கேட்பது வாடிக்கை. என் மனைவியிடம் அன்பை காட்டுவார்.

தற்போது அவர், தி.நகர் கிருஷ்ணா தெருவில் குடியிருந்த பழைய வீட்டிலிருந்து அருகே ஆற்காடு வீதியில் உள்ள புதிய வீட்டிற்கு புதல்வர்களுடன் குடி பெயர்ந்துள்ளார். இந்த வீடு நல்ல கட்டட கலை நுணுக்கத்தோடு கட்டப்பட்டுள்ளது.திரு.சிவகுமார் சொன்னார்,  என்னுடைய இரண்டு மருமகளும் ஒரே வீட்டில்குடியிருக்கனும் சொன்னதனால்தான் இந்த வீட்டை கட்டினோம் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

நான் சொன்னேன் விந்திய-சத்புரா மலைகளில் உள்ள மராட்டியத்திலிருந்து ஒரு மருமகளும், உங்கள் கொங்கு மண்டலத்திலிருந்து வந்த ஒரு மருமகளும் இருப்பதால் இது பாரத விலாசம் தான் என்றேன்.
உங்கள் மனம் போல உங்களுடைய வாழ்வு அமைந்துள்ளதற்கு பெருமை கொள்கிறேன் என்று சொன்ன போது சிவகுமார் தலையை ஆட்டிக் கொண்டார்.

அடுத்த மாதம் லண்டன் செல்கிறேன் என்று சொன்ன போது காந்தியார் படங்களை கொடுத்து நீங்கள் சந்திக்கும் முக்கியமானவர்களுக்கு இந்த படங்களை வழங்குங்கள் என்று தாராளமாக ஒரு சகோதர பாசத்துடன் என்னிடம் வழங்கியதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
எழமையும், பகட்டு இல்லாத அன்பை காட்டும் அற்புத மனிதர்தான் சிவகுமார் அவர்கள்.

#சிவகுமார்
#தமிழகதிரையுலகம்
#இராமாயணம், #மகாபாரதம்
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
29.03.2017

அன்புடை நெஞ்சங்களுக்கு வணக்கம்.

அன்புடை நெஞ்சங்களுக்கு வணக்கம்.

நேற்று நடந்த நிகழ்வு ஒன்றை எனது முகநூலில் பதிவு செய்தேன். அந்த பதிவினை தொடர்ந்து வெளிநாடு வாழ் நண்பர்களும், ஈழத்து மண்ணில் இருந்து சில நண்பர்களும் , உள்ளூர் நண்பர்களும் என்னை தொடர்பு 
" இப்படியும் நடந்ததா?" என வாஞ்சையுடன் விசாரித்தார்கள்.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் அந்த கசந்த நிகழ்வு அது ஏற்படுத்தியக் காயமும் நேற்று நடந்த நிகழ்வின் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.  

அன்புடன் விசாரித்த அன்பு நண்பர்கள் பலர் எனது பணிகளை நினைவூட்டியும் , தேசிய நதினீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கு, கண்ணகி கோவிலில் தமிழரின் உரிமை நிலைநாட்டல், மேலவை அமைக்கும் வழக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி  கூடன்குளம் முதல் ஆலங்குளம் சிமண்ட் தொழிற்சாலை வரை தொடந்த வழக்குகள், 
சிறை கைதிகளுக்கு வாக்குரிமை, வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் பகுதி மக்களை கர்னாடக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தது என இதுபோன்ற பல வழக்குகளை பட்டியலிட்டும், இன்னும் சிலரோ நான் எழுதிய நூல்களில் அட்டைப்படங்களை பதிவு செய்து அத்துடன் கருத்துக்களையும் பதிவு செய்தது மனக்காயங்களுக்கு அருமருந்தாக அமைந்தது.  உலகம் அன்பால் நிரப்பப்பட்டு உள்ளதாகவே இருப்பதை நினைவுபடுத்தியது. 

அன்பும் பண்பும் நிறைந்த நெஞ்சங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

தகுதியே தடை என்று இருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதையும் மீறி களப்பணிக்கு அளப்பரிய மரியாதை உண்டு என பலரும் நினைவூட்டினர். எங்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து எத்தனையோ அமைச்சர்கள் வந்திருக்கலாம்,  வளர்ந்திருக்கலாம். ஆனால்  எளிமையின் அடையாளம் காமராசர் அமைச்சரவையில் பணி புரிந்த மஜித் அவர்கள் தான் பலருக்கும் போற்றத்தக்க வகையில் நினைவிற்கு வருபவர்.  

எந்த பொறுப்பிற்கும் வராத என்னை, விமான நிலையமாகட்டும், ரயில் நிலையமாகட்டும், பிற பிரயாணங்களாகட்டும் என்னை சந்திக்கும் பலரும் கேட்பது , " என்ன கே.எஸ்.ஆர் இன்னுமா உங்க ட்ர்ன் வரவில்லை ?" என்பது தான். 

அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது ," நமக்கு கிடைக்கும் பொறுப்புகளுக்கு தடை ஏற்படுத்தி விடலாம் ஆனாலும் எனது பணிகளை தடுத்து விட முடியாது". 

அன்பு பரவிக் கிடக்கும் இவ்வுலகில் நல்லவைகளை மட்டும் செய்து அதன் வழி அன்பை பெற்று  இவ்வுலகில் பரவிக் கிடப்பேன்.
#ksrpost
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2017

Tuesday, March 28, 2017

சில மனிதர்களும் ; அவர்கள் அளித்த வேதனைகளும் ..........

சில மனிதர்களும் ; அவர்கள் அளித்த வேதனைகளும் ..........

-------------------------------------

இன்று காலை கையில் தேநீரும் தினசரி பத்திரிக்கையுடன் வாசிப்பில் மூழ்கிருந்தேன். வாசலில் பணக்கார வாகனம் ஒன்று வந்து நின்றது.  நம்மை பார்க்க இத்தகையோர் வருவதற்கான அவசியம் இல்லையே? வீடு மாறி வந்திருப்பார் என கருதிய படி , தினசரி பத்திரிக்கை வாசத்தை முகர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தேன். 


1990களில் அதிகாரமும், ஆணவமும் , எலும்புத்துண்டுகளுக்கு ஏமாறும் கூட்டமும் என வலம் வந்தவர். எனக்கும் அவருக்கும் 1998க்கு பின்னர் எந்த ஒரு உறவும் இல்லை. அவர் இருக்கும் திசைனோக்கி திரும்பினால் கூட என் சுயமரியாதைக்கு இழுக்கு என திசைமாறி போவதை வழக்கமாக வைத்திருந்தேன்.  அத்தகைய நல்லவர் அவர்.  


வீடு தேடி வந்தோரை நிற்க வைத்து பேசுவது அழகன்று என அமர சொன்னேன்.  தனக்கு உயர்நீதி மன்றத்தில் ஏதோ காரியம் ஆக வேண்டும் என வந்திருந்தால். கையில் ஒருப் பை.அதில் கத்தைகள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.  


கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன். 1998ல் நாடாளுமன்ற தேர்தலில் எனக்காக ஒதுக்கப்பட்ட வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை பாட்டியின் வடையை திருடிய காகம் போல் கொத்திக் கொண்டு போனவர்.  அன்று வெற்றி பெறும் நிலையில் இருந்தேன். அந்த வாய்ப்பு களவாடப் படமால் இருந்திருந்தால் இன்று சமூக வளைதளங்களில் பதியப்படும் மக்கள் பிரச்சனைகளை , சமுதாய  அவலங்களை, விவசாயிகளின் பிரச்சனைகளை  நாடாளுமன்றத்தில் வைத்திருக்க கூடும். இவருக்கும் எனக்கும் எந்தவிதப் பகையும் இல்லாமல் இருந்த போதே அத்தனைப் பெரிய துரோகத்தை இந்த சிறிய குணம் படைத்த இவர்  துரோகம் இழைத்தார். 


எனது பெயர்  அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் அதாவது மணமேடை ஏறும் நிமிடத்தில் மாற்றப்படும் மணமகன் போல், கண்ணிமைக்கும் நேரத்தில்  இன்னொரு பெயரை தன் பலத்தால் அறிவிக்க வைத்தார்.  


இந்த பின்னடைவால் ஏற்பட்ட ரணங்களும், இழப்புகளும், அவமானமும், தனிமனித கம்பீர இழப்பும்  சொல்லி மாளாது.  என் 44ஆண்டுகால அரசியல் வாழ்வுல்,  அரசியல் களப்பணியில் பெற்ற பேருகள் , மாற்றார் அளித்த  கேடுகளால் தனிமனித ஆளுமையில் இழப்பு ஏற்பட்டது.  


அன்று ஐநா சபையில் கிடைத்த பணியை மறுதலித்து விட்டு அரசியலில்  இருந்தேன். வழக்குரைஞர் தொழிலில் தொடர்ந்து இருந்தால் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ என சகாக்களை போல் பணியில் இருந்திருப்பேன். இப்படிப்பட்ட மனிதர்களால்  பெற்றது ஒன்றுமில்லை, இழந்தவை அதிகம். இவற்றை எல்லாம் கைக்குட்டையில் வியர்வை துடைப்பது போல் துடைத்து விட்டு இன்று தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதால் எவ்வித கூச்சமும் இல்லாமல் திறந்த வீட்டுக்குள் இவர்களால் எப்படி நுழைய முடிகின்றது.


எதிரியை மன்னித்து விடலாம், துரோகியை மன்னிக்க மனமில்லை.  என்னால் எளிதாக செய்யக் கூடிய  காரியம் தான். ஆனாலும் மனமில்லாத காரணத்தால் " சென்று வாருங்கள், வணக்கம் என வழி  அனுப்பிவிட்டேன்.  


வேதனையை விருந்தளித்து விட்டு பணத்தை மருந்தாக அளிக்க வந்திருப்பார் போலும். சுயமரியாதைக் காரணாக   நான் செய்தது சரி என தன்மான அரியாசனத்தில் அமர்ந்தவாரு அந்த தேநீரை அருந்தியவாறு இதனை  பதிவு செய்கின்றேன்.


காலச்சக்கரம் வேகமாக ஓடிவிட்டாலும், மனதில் ஆறாத காயங்கள்  அகத்தினில் வலிக்கின்றது இந்த பழைய நிகழ்வுகள்.


#தமிழகஅரசியல்

#ksrpost

#Ksradhakrishnanpost

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

27.03.2017

Monday, March 27, 2017

மதுரை கோபால கிருஷ்ண கோன்:

மதுரை கோபால கிருஷ்ண கோன்: 
----------------------------------
கடந்த 24.03.2017 அன்று மதுரையில் காலையில் நடைபயிற்சி சென்றபோது, வடக்கு சித்திரை வீதியில் இந்த படத்தில் உள்ள கோபால கிருஷ்ண கோன் பழைய பதிப்பகக் கட்டடம் கண்ணில் பட்டது.

இந்தப் பதிப்பகம், நூல் விற்பனை நிலையமும் அக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. இலக்குவனார், காளமேகனார்,ஐயம்பெருமாள் கோனார் போன்ற தமிழறிஞர்கள் கூடுகின்ற கேந்திர இடமாகும். அக்காலத்தில் இந்த பதிப்பகம் அற்புதமான தமிழ் நூல்களை வெளியிட்டது.

தமிழ் தொண்டாற்றிய இந்தப் பதிப்பகம் மீனாட்சியம்மன் ஆலையத்தின் அருகில் இருக்கும் இந்த கட்டடம் இன்றைக்கு மூடப்பட்டிருப்பதை பார்த்தால் எதோ இழந்ததைப் போல மனதில் படுகின்றது.

மதுரையில் சர்வோதயா புத்தக நிலையம், ஓர் முக்கியமான புத்தக அங்காடியாகும். கோபால கிருஷ்ண கோன் அருகில் உள்ள புது மண்டபத்தில் பாட நூல் புத்தகக் கடைகள் அதிகம்.
குறிப்பாக நடன சுந்தரம் பிரதர்ஸ், பழனியாண்டி சேர்வை புத்தகக்கடை, டவுன் ஹால் ரோட்டின் மேல்புறத்தில் ரீகல் தியேட்டர் எதிர்புறம் பாரதி புத்தகநிலையம் 1960களில் முக்கியமாக பேசப்பட்ட புத்தக அங்காடிகளாக இருந்தன.
#கோபாலகிருஷ்ணாகோன்
#மதுரை
#ksrpost
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2017

India Social -Cultural diversity


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் காலத்தை இழுத்தடிக்க முடியாது!


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை முடிவுக்கு கொண்டுவந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுகின்றது. 


இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை கடந்த 23 மார்ச், 2017அன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் எமது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், பிரித்தானிய தமிழர் பேரவை (#BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (#USTPAC), கனடிய தமிழர் பேரவை (#CTC) ஆகிய முன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ்வறிக்கையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். 


இலங்கை அரசாங்கம் 2015இல் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு (30/1) இணையனுசரனை வழங்கி எற்றுக் கொண்டதை தாங்கள் அறிவீர்கள். ஆனால் குறித்த பிரேரணையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை  இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில்தான் ஏற்கனவே அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய  வாக்குறுதிகளை முழுமையாக அமுல்படுத்துவதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசுக்குள்ள சர்வதேசத்திற்கான பொறுப்பும் கடப்பாடும் மீளவும் ஒருமுறை சர்வதேசத்தின் முன்னால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியதன் மூலம் தானாகவே ஒரு சர்வதேச பொறிக்குள் அகப்பட்டிருக்கிறது. 


குறித்த பிரேரணை தொடர்பில் கருத்துத்; தெரிவிக்கும் அமெரிக்க தமிழர் அரசியல் செயலவையின் தலைவர் Dr.காருண்யன் அருளானந்தம் 'இந்தப் புதிய பிரேரணையானது இலங்கை தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இருப்பதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான விடயமாகும் எனினும், இது மட்டும் போதுமானதல்ல. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பலவும், இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தகு நேரத்தையும் சக்தியையும் செலவளிதிருக்கின்றன. இதன் காரணமாகவே, 2012ஆம் ஆண்டிலிருந்து, இலங்கை தொடர்பில் இதுவரை ஐந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை அரசு தொடர்ந்தும் முன்னேற்றங்களை காண்பிக்காமல் இருக்க முடியாது” என கூறுகின்றார். 


எனவே இது தொடர்பில்  சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஒரு நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிடும் காருண்யன், பிரேரணையில் உள்ளடங்கியிருக்கும், அனைத்து விடயங்களும் முழுமையாக அமுல்படுத்துவதற்கான நிதி, தொழில் நுட்ப ஆலோசனைகளை மேற்படி நாடுகள் கொடுத்து ஒத்துழைப்பையும் நெருக்குதலையும் வழங்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும், என்றும் குறிப்பிடுகின்றார்.

  

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையை தொடர்ந்தே, புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் குறித்த பிரேரணையின் கீழ் ஏற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதற்கு முழு அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதற்குரிய கால அட்டவணை ஆகியவற்றை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார். உறுப்பு நாடுகள் பலவும் அவரது கூற்றினை ஆதரித்துள்ளன. அத்துடன் அரசாங்கம், இலங்கையின் அனைத்து சமூகங்களும் விளங்கிக் கொள்ளக் கூடியவாறான பரந்த வேலைத்திட்டம் ஒன்றையும் கைக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். 


மேலும், முன்னைய பிரேரணையின் (30/1) அமுலாக்கமானது கவலையளிக்கக் கூடிய அளவு மந்தமானதென ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அபிப்பிராயம் தெரிவித்திருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக் குமார்: 'இலங்கை அரசின்  செயற்பாடுகள் தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை. அதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பொறுப்புக் கூறல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளுமே, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் அரசாங்கமானது, குறித்த பிரேரணைக்கு, மீளவும் இணையனுசரனை வழங்கியிருப்பதன் ஊடாக பிரேரணையில் ஏற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய தனது பொறுப்பு மீளவும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் ரவி சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். 


இவ்வாறானதொரு பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை மற்றும் கனடிய தமிழர் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும், வடக்கு கிழக்கில் வாழும் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயல்பூர்வமான நன்மைகள் துரிதமாகச் சென்றடைவதற்கான வழிவகைகளை உருவாக்க தொடர்ச்சியாக செயற்படுமென இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புற்ற எம் மக்கள் அடைந்த பயன் மிகக் குறைவு. எனவே இது தொடர்பில் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை முதலில் நிரூபித்துக் காட்ட வேண்டுமாயின், அரசாங்கம் பின்வரும் விடயங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்:


கேப்பாப்புலவில் உள்ள காணிகள் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து காணிகளையும் உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை (#OMG) உடன் செயல்பட வைக்க வேண்டும்.

மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்கள் அனைத்தும் தடுக்கப்படுவதுடன் இதனை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்ற பொது அறிவித்தல் வெளி வரவேண்டும். 

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்கள், கண்காணிப்புக்கள், பழிவாங்கும்; நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துவதற்கான உத்தரவுகள் உடன் பிறப்பிக்கப்பட வேண்டும். 

அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையின் (#OHCHR) அலுவலகத்தை, வட - கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் திறப்பதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். 


கனடிய தமிழர் பேரவையின் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் இது தொடர்பில் கருத்துக் தெரிவித்திருக்கும் போது:  இலங்கை அரசாங்கம், கலந்தாலோசனை செயலணியின் (#CTF) பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் அதனை புறக்கணிக்குமாயின், அது, ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அவமதிப்பதாகவே அமையும் என்றும் அரசாங்கம் நிலைமாறுகால நீதி தொடர்பிலும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் ஈடுபடவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.


அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக கலப்பு நீதிமன்றத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையிலேயே பேரவையின் ஆணையாளர் தனது அறிக்கையில் கலப்பு பொறிமுறைய மீளவும் கண்டிப்பாக வலியுறுத்திருக்கின்றார். இது தொடர்பில் Dr. அருளானந்தம் 'நீதியின்றி நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை. கலப்பு நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக அரசாங்கம் உடனடியாக சுயாதீனமாகச் செயல்படும் சாட்சியங்களை பாதுகாக்கும் செயலணி உருவாக்க வேண்டும், விசேட வழக்குத் தொடுனர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்து, யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு என்பனவற்றை குற்றங்களாக சட்டமியற்றி அவற்றினை விசாரிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிப்பதன் மூலம் அரசாங்கம் தன் வாக்குறுதியினை மீறியுள்ளது என்று குறிப்பிடும் அருளானந்தம், வடக்கு கிழக்கில் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மறுசீரமைத்து, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றினாலன்றி நல்லிணக்கம் என்பது கானல் நீரே எனக் குறிப்பிட்டார். 


கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், மீளவும் நிகழாமல் தடுப்பதற்காக புதிய அரசியல் யாப்பு மற்றும் நிலைமாறுகால நீதி ஆகிய இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். வருட இறுதிக்குள் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இலங்கை அரசாங்கம் சமஸ்டி கட்டமைப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கு நிரந்தரமான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராஜ் குறிப்பிட்டார். 


இவை அனைத்தினதும் சாராம்சமாக கூறுவதாயின்: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்பட்டுவரும் நாம், ஒரு தெளிவான பெறுபேறை எதிர்பார்த்து நிற்கின்றோம். இலங்கையில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்லிணக்கம் நிகழ வேண்டுமென்றால், கிடைத்திருக்கும் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் ஆக்கபூர்வமாக பயன்;படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இதற்கும் மேலதிகமான ஒரு கால அவகாசத்தை அரசாங்கம் கோர முடியாது.


Sunday, March 26, 2017

நதி நீர் இணைப்பு

Amaravati: Andhra Pradesh’s mega river-linking project, known as ‘Pattiseema Lift Irrigation Scheme’ has entered the Limca Book of Records.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுதான் தீர்வு என்று சொல்லப்படுகிறது. நதி நீர் இணைப்பு குறித்து பல ஆண்டு காலமாகவே பேசப்படுகிறது.  நேரு காலத்தில் பெரிய நதிகளான பீயாஸ் - சட்லெஜ் நதிகள் பெரிய கால்வாய் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. இதேபோல் சட்லெஜ் நதியையும் யமுனையையும் இணைப்பதற்காக ஹரியானா , பஞ்சாப் மாநிலங்களில் சில மாவட்டங்களில் கால்வாய் வெட்டப்பட்டது. பின்னர், காலிஸ்தான் பிரச்னையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 

இதற்கு பின், இந்தியாவில் இரு நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லாத விஷயமாக கருதப்பட்டது. ஆனால்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளை இணைத்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ;அதுவும் ஒரே ஆண்டுக்குள். ஆந்திராவைப் பொறுத்த வரை கிருஷ்ணா, கோதாவரி நதிகள் முக்கியமானவை. மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைத்து 1,465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. கிருஷ்ணா நதி 1,300 கி.மீ நீளம் கொண்டது. இந்த நதி மகாராஷ்ட்ரா  ,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது. 

ஆந்திராவில் ராயலசீமா வறட்சி பாதித்த பகுதி. அதே வேளையில், தென்னிந்தியாவிலேயே கோதாவரி நதியில் இருந்துதான் அதிகமானத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி கடலில் கொண்டு சேர்ப்பது 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர். கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைப்பதால், ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். இதனால்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளையும் இணைக்கத் திட்டமிட்டார். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நதிகள் இணைத்த சாதனைக்கு லிம்கா அங்கீகாரம்கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டத்துக்கானச் செலவு ரூ. 1,427 கோடி.2015ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. ஹைதரபாத்தைச் சேர்ந்த மெகா இன்ஜீனியரிங்  நிறுவனம் சவாலாக எடுத்து இந்தப் பணியை மேற்கொண்டது. கேதாவாரி ஆற்றில் பட்டிசீமா என்ற இடத்தில் பிரமாண்டமான 'பம்ப் ஹவுஸ்' அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இந்த பம்ப் ஹவுஸ்தான் பெரியது. 24 பிரமாண்ட பம்புகள் ( 24 vertical turbine pumps)  இங்கு பொருத்தப்பட்டன. ஒவ்வொரு பம்பும் 4,611 குதிரைத் திறன் கொண்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 8,500 கியூபிக் தண்ணீரும் எடுக்க முடியும். இந்த பம்ப் ஹவுஸ் 173 நாட்களில் கட்டப்பட்டடது. கோதாவரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக கால்வாயில் தண்ணீர் பாய்ச்ச முதல் திட்டம் தயாரானது. 

பட்டீசீமா பகுதியில் இருந்து 174 கி.மீ தொலைவில்  விஜயவாடா அருகே போலாவரம் என்ற இடத்தின் அருகே கிருஷ்ணா நதி ஓடுகிறது. போலாவரம் வரை கால்வாய் வெட்டப்பட்டது. கோதாவரி பம்ப் ஹவுஸில் இருந்து எடுக்கப்படும் நீர் கால்வாய் வழியாக ஓடி போலாவரம் அருகே கிருஷ்ணாவில் கலக்க வைப்பதுதான் திட்டம். பணிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. ஒரே ஆண்டுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. பணிகள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆந்திர முதல்வர் அதனை தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவிலேயே இவ்வளவு விரைவாக ஒரு நதி மற்றொரு நதியுடன் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை. 

கடந்த  2015 மார்ச் 29ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்தத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.  தற்போது இந்த சாதனை 'லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோதாவரி நதியில் இருந்து கடலில் கலக்கும் 80 டி.எம்.சி தண்ணீரை ஆந்திரா மிச்சப்படுத்தியுள்ளது. 

-எம்.குமரேசன்

சென்னை பாரிமுனை

சென்னை பாரிமுனையின் அதை ஒட்டிய பகுதிகளைக் குறித்து சில செய்திகள்:
-------------------------------------
தி.மு.க. துவங்க வேண்டும் என்று அண்ணா விவாதித்தது தேவராஜ் முதலியார் தெருவில் உள்ள அவர் நண்பரின் வீட்டில்தான்.
அண்ணா அவர்கள் இரா. செழியன் பிராட்வேயில் உள்ள கூட்டுறவு வங்கியின் மாடியில் ஒரு அறையில் தங்கியிருந்த போது,அங்கு அண்ணா தங்குவது வாடிக்கை.. அப்போதுதான் இரா. செழியனுடைய நோட் புத்தகத்திலிருந்து ஒரு தாளை கிழித்து திராவிட முன்னேற்ற கழகம் என்று இங்க் பென்னால் எழுதியதாக செய்திகள்.

தேவராஜ் முதலியார் தெருவில் சந்திர மௌலீஸ்வரர், சென்கேசவ பெருமாள் கோவில் என்ற சைவ வைணவ கோவில் பக்கத்தில் குங்குமம், சந்தனக் கடைகள் இருக்கும். அதன் வாசனை தெரு வழியாக செல்லும்போதே நுகரலாம்.

ஒருமுறை விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனும், நானும் இப்பகுதிக்கு சென்றபோது சில நிமிடங்கள்  இப்பகுதியில் இருந்த கடைகளை பார்த்துக் கொண்டே குங்குமம், சந்தன நொடியை ரசித்து, அவர் நுகர்ந்தார்.

பிராட்வேயில் தான் பல பத்திரிகை அலுவலகங்கள் அப்போது இருந்தன.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி அலுவலகமும் நான் தங்கியிருந்த எம்.யூ.சி விடுதியின் எதிர்புறத்தில் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் அதிகமாக தலைமறைவாக இருக்கும்போது பிராட்வே பகுதியில் வந்து செல்வது வாடிக்கை.
ஜீவானந்தம், பி. இராமமூர்த்தி, பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஏ. நல்லசிவன், சங்கரய்யா என எண்ணற்ற தோழர்கள்.
டீயை குடித்துக் கொண்டு பிராட்வே பகுதியில் வளம் வந்தனர்.
சுத்தானந்த பாரதி, கந்தகோட்டத்திற்கு அடிக்கடி தமிழறிஞர்கள் ரா.பி. சேதுப்பிள்ளை, வையாபுரி பிள்ளை, பாரிமுனையின் பஸ்ஸில் இறங்கி நடந்து செல்வது வாடிக்கை.
முதன் முதலாக,  சீன பல் டாக்டர் தன்னுடைய மருத்துவமனையை சைனா பஜாரில் அதாவது பாய் கடை அமைந்திருந்தது. இப்படியான உயிரோட்டமான சென்னையின் தலைபகுதிததான் பாரிமுனை அந்த கம்பீரமான இடத்தில்தான் துலாக்கோல் நிலையில் நீதிபரிபாலனத்தை கடந்த ஒரு நூற்றாண்டு கழிந்தும் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டு இருக்கிறது.
#பாரிமுனை
#சென்னை
#திமுக
#அண்ணா
#பிரபாகரன்
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017


Saturday, March 25, 2017

சீர்திருத்த காங்கிரஸ்:

சீர்திருத்த காங்கிரஸ்:
--------------------
தமிழகத்தில்  இரண்டாவது பொதுத் தேர்தலிலே அதிருப்தியை காங்கிரஸ் சந்திக்க நேரிட்டது. சீர்த்திருத்த காங்கிரஸ் துவக்கப்பட்டது 1957 தேர்தலில் மொத்தமுள்ள 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களையும், திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக தேர்தல் களத்தில் நுழைந்து 13இடங்கள்-இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் சீர்திருத்தக் குழு 9-ம், கம்யூனிஸ்ட் கட்சி 4-ம், பார்வர்டு பிளாக் கட்சி 3-ம்  பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 2-ம், சோஷலிஸ்ட் கட்சி 1-ம் மற்றும் சுயேச்சைகள் 22 இடங்களையும் பெற்றனர்.

சீர்த்திருத்த காங்கிரஸ் எந்த நிலையில் உருவானது என்பதைப் பற்றி பலருக்கும் இதுவரை தெரியவில்லை. அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களில் கூட சீர்த்திருத்த காங்கிரஸ் பற்றி சொன்னால் நம்ப முடியாமல் இருக்கின்றனர்.

விருதுநகர் தொகுதியில் காமராஜர் 1957-ல் போட்டியிட்ட பொழுது அவருக்கு எதிராக, கோவை வி.கே. பழனிசாமி கவுண்டர், அருப்புக்கோட்டை ஜெயராம ரெட்டியார், செங்கல்பட்டு வி.கே. ராமசாமி, கே.டி. கோசல்ராம், எஸ்.எஸ். மாரிசாமி, டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பணியாற்றுவார்கள் எனவும், அவர்களோடு சாத்தூர் எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்ட எஸ். இராமசாமி நாயுடு சேர்ந்து காமராஜருக்கு எதிராகச் செயல்படுவார் என்றும் செய்திகள் உலவியபொழுது, எஸ்.ஆரைப் பார்கக அவருடைய வகுப்புத் தோழரான சி. சுப்பிரமணியம், சாத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சி.எஸ். அங்கு எஸ்.ஆரைச் சந்தித்தவுடன் எதிராக இல்லை என்பது தெரிய வந்தது. சீர்த்திருத்த காங்கிரஸ் இந்த கால கட்டத்தில் உருவானது.

பல்வேறு சந்தேகங்களை வீழ்த்திக் காமராஜர் வெற்றி பெற்றார்.

இத்தேர்தல் காலத்தில் தூத்துக்குடி வருவாய்க் கோட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்த பி.சி. அலெக்சாண்டர் வருவாய்த் துறையில் பயிற்சி பெற்றார். தன்னுடைய நூலில் இந்தத் தேர்தல் காலத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் சாலை வசதி இல்லாமல்கூட தேர்தல் பணிக்காகத் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் மராட்டிய ஆளுநராகவும், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குத் தனிச் செயலாளராகவும், இந்திய அரசியலும், பன்னாட்டு அளவிலும் பல பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர்.

ஆதாரம் : நான் எழுதிய
'நிமிர வைக்கும் நெல்லை' (2004)

#சீர்திருத்தகாங்கிரஸ்
#1957தேர்தல்
#தமிழகஅரசியல்

#Ksrpost 
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
25.03.2017

ரஜினி காந்த்.....?

யாழ்பாணத்தில் தமிழர்களுக்கான வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரஜினி போகக்கூடாது.

இதுவரை இலங்கை தமிழர்களுக்காக துரும்பையும் கிள்ளிபோடாத 
ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகூடாது .

தமிழக விவசாயிகள் டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருப்பதைப் பற்றி  ஒரு voice வரவில்லை.

1996 ல்தேர்தலில் இந்த மனிதன் 
வாய்ஸ் பல நல்லவர்கள்யும் வெற்றி பெறாமல் ஆக்கி விட்டது.என்னையும் பாதித்தது.

அந்த ரஜினி வாய்(ஸ்)விவசாயிகளின் பிரச்சினையில் ஏன் வர வில்லை ?

எல்லாம் ஆதாயமிக்க நோக்கம் .....

Friday, March 24, 2017

பெரிய சாமி தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம்

பெரிய சாமி  தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம் :
-------------------------------------
அன்றைய சென்னை மாகான அரசு, 1954-ல் பெரிய சாமி  தூரன் தலைமையில் தமிழில் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் குழுவை அமைத்தது. தமிழ் வளர்ச்சி கழகம் என்ற பெயரில்  சென்னைப்
பல்கலைக்கழகத்தில் அலுவலகம் அமைத்து பலத் தொகுப்புகளாக தமிழ் கலைக்களஞ்சியம் வெளிவந்தது. அது மாதிரி தமிழ் கலைக்களஞ்சியம் பார்க்க முடியாது. இது தமிழுக்குக் கிடைத்த அருட்கொடை. அதன் மறுபதிப்பு இல்லாமல் போய்விட்டது. எத்தனையோ தமிழ் கலைக்களஞ்சியம் வந்தாலும், தூரன் குழு தயாரித்த கலைக்களஞ்சியம் மாதிரி இல்லை.

பெரியசாமி தூரன் காலத்தில் தமிழக அரசு வழங்கிய அபரிமித உதவியினால்தான், அவரால் அத்தனை தொகுதிகளையும் முழுமைபெறச் செய்ய முடிந்தது. அத்தகைய ஆதரவு தற்போது இல்லாததாலேயே, தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுதிகள் தேங்கிப் போயிருக்கின்றன. .

1954 - 1968 காலகட்டத்தில் வெளியான ‘தமிழ் கலைக்களஞ்சியமோ’, 1968 - 1976 காலகட்டத்தில் வெளியான ‘குழந்தைகள் கலைக்களஞ்சியமோ’ அதன்பின் திருத்தங்களோ, மேம்படுத்துதல்களோ இன்றி அப்படியே உள்ளன.
ஒரே ஒரு நல்ல செய்தி, இவ்விரு கலைக்களஞ்சியங்களும் தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வலைதளத்தில் முழுமையாகப் படிக்கக் கிடைக்கின்றன என்பதுதான். எண்ணற்ற தனி நபர்கள், தம் தணியாத ஆர்வம் காரணமாக பல்வேறு கலைக்களஞ்சியங்களைத் தொகுத்துள்ளனர். ஆர்வம் மட்டுமே நம்பகத் தன்மையை உருவாக்கப் போதுமானதல்ல.
#கலைக்களஞ்சியம்
#Ksrpost 
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017

கழுகுமலை

கழுகுமலை:
......................
இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து கோவில்பட்டிக்கு கழுகுமலை வழியாக சென்றேன். கழுகுமலை முருகன் கோவில் கழுகாசல மூர்த்தி என்ற பெயரில் அமைந்த பழைய கோவில். அந்தக் கோவிலில் அக்கால கட்டிடக் கலை திட்டமிட்டு கட்டப்பட்டதாகும். கோவிலின் தெப்பத்திற்கு தொலைவிலிருந்து குளத்து தண்ணீர் வரும்படியாக கடந்த நூற்றாண்டில் துவகத்தில் எட்டயபுரம் அரசர் கட்டியுள்ளார்.  இந்தக் கோவில் எட்டயபுரம் சமஸ்தான நிர்வாகத்தில் அப்போது இருந்தது.

சமணர்கள் அங்கிருக்கும் மலையில் வடிவமைத்த வெட்டுவாங்கோவிலும் கீர்த்திக்குரியது.
அந்த நிமிர்ந்த மலையும், அதை ஒட்டி உள்ள கோவிலும் மனதிற்கு அமைதியை தரும் இடங்களாகும்.

அந்த கோவிலுள்ள முருகனுக்கு காவடி தூக்கிக் கொண்டு ஊத்துமலை ஜமீன்தார் மருதப்பர் வந்தபோதுதான் அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்தைப் பாடினார்.
சிந்துகள் பல வகையுண்டு. இதைப் பற்றி ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா? என்று தெரிந்துக் கொள்ள அக்கோவிலின் தேவஸ்தான அலுவலகத்திற்கு வருகின்றேன் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டு அங்கு சென்றேன்.

கழுகுமலையின் பட்டறை காராச்சேவு என்பது பிரபல்யம்.
அதையும் தேனீரையும் அறிந்து கொண்டு காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியாரை பற்றி விவாதிக்க முடிந்தது.
அதைக் குறித்தான செய்திகள்
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு வடக்கே ஆறு மைல் தொலைவிலுள்ள சென்னி குளம் கிராமத்தில் 1865-ம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாக பிறந்தவர் அண்ணாமலையார்.
இளம் வயதிலேயே தமிழால் ஈர்க்கப்பட்டவர் இலக்கியங்களை எல்லாம் கசடற கற்றார். அபாரமான நினைவாற்றல் கொண்டவர். இவரது ஆரம்பக் கல்வி சென்னிகுளத்தில் சிவகிரி சுப்பிரமணிய பிள்ளையின் திண்ணைப் பள்ளியில் தொடங்கியது. பின்னர், சேற்றூர் சமஸ்தான புலவர் ராமசாமி கவிராயரிடம் தமிழ்ப் பாடம் பயின்றார்.
மீனாட்சி சுந்தரக் கவிராயருடன் ஏற்பட்ட அறிமுகம் இவர் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் திருவாவடுதுறை ஆதீனத்தில் கல்வி கற்க இவர் சென்றது மீனாட்சி சுந்தரக் கவிராயரால்தான்.
அங்கு ஆதீனத் தலைவரான ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரை பற்றி ஒரு பாடலை இயற்றிப் பாடினார். அனைவரது பாராட்டுதலையும் பெற்றார். மகிழ்ந்த தேசிகர், அப்போது மடத்திலிருந்த தமிழ்த் தாத்தா என பின்னாளில் அன்போடு அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரிடம் உரிய வகையில் தமிழை அண்ணாலை ரெட்டி யாருக்கு கற்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி உவேசா. நன்னூலையும், மாயூரப் புராணத்தையும் ரெட்டியாருக்கு கற்றுக் கொடுத்தார். கூவலபுரம் மடத்திலிருந்த சுந்தர அடிகள், சமய இலக்கியங்களை கற்பித்தார்.
இப்படி கரைகண்ட வித்துவான்களிடம் தமிழ் பயின்றதாலோ என்னவோ அண்ணாமலை ரெட்டியாரிடம் தமிழ் விளையாடியது. சென்னிகுளம் சுந்தரப் பரதேசியார் மூலமே இவருக்கு ஊத்து மலை ஜமீன்தாரான மருதப்ப தேவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நெருங்கிய நட்பாகவும் வளர்ந்தது. விளைவு ஜமீனின் பிரதான அவைப் புலவராக மாறினார். மருதப்பர் மீது முந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றவும் செய்தார்.
ஊத்துமலை ஜமீனை தவிர வள்ளல் என போற்றப்பட்ட ராஜவல்லிபுரம் முத்துச்சாமிப் பிள்ளை, வெ.ப.சு. முதலியார் ஆகியோரிடமும் நல்ல நட்பினை கொண்டிருந்தார்.
ரெட்டியாரின் உடல்நலம் இளமையிலேயே குன்றியது. இதைக் கண்ட அவர் தந்தை உடனடியாக அவருக்கு குருவம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அப்போது அண்ணாமலை ரெட்டியாருக்கு வயது 24.இதன் பிறகு நெடுங்காலம் அவர் வாழவில்லை. 1891ல் தனது 26வது வயதில், தை அமாவாசை அன்று காலமானார்.
வாழ்ந்தது குறுகிய காலம்தான் என்றாலும் இவரது தமிழ் இன்றும் போற்றப்படுகிறது. குறிப்பாக காவடி சிந்துகள். இதன் சொல்லழகும் இசை அமைதியும் அலாதியானவை.
ஊத்துமலை ஜமீன்தார் கழுகுமலைக்கு காவடி எடுத்து ஒருமுறை சென்றார். அப்போது அவருக்கு சிரம பரிகாரமாக ரெட்டியாரால் பாடப்பெற்றவையே காவடிசிந்து.
இதற்கு ராக, தாள அமைப்புகளை உருவாக்கியவர் கிரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற உருத்திர காணிகை என்கிறார்கள்.
காவடிசிந்தின் முதல் பதிப்பு, ரெட்டியார் காலத்திலேயே அச்சில் வந்துவிட்டது. திருநெல்வேலி நெல்லையப்ப கவிராஜரின் அச்சுக் கூடத்தில் ஊத்துமலை ஜமீனின் பொருள் உதவியுடன் இது பதிக்கப்பட்டது.
எளிமை, இனிமை, பக்தி ஆகியவற்றைக் கொண்ட காவடிசிந்து.
திச்ரம், கண்டம், மிச்ரம் போன்ற நடைகளைப் பெற்றிருந்ததால் இசை வல்லுநர்கள் அனைவரும் இதை பாட ஆரம்பித்தார்கள்.
சொல்லப்போனால் காவடி சிந்தின் புகழ் பெருமளவு பரவியதே இசைக்குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியால்தான்!
ஐநா சபையில் அவருக்கு பாட வாய்ப்பு கிடைத்தபோது -
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிசிந்தை பாடி பெருமை சேர்த்தார்.
அந்தக் காலத்தில் புலவர்களது புலமையை சோதிக்க, ‘அண்ணாமலை ரெட்டியாரின் காவடிசிந்து மாதிரி உம்மால் பாட முடியுமா?’ என்று கேட்பார்களாம்!
ரெட்டியாரின் 22 காவடிசிந்துகளே அச்சாகி இருக்கின்றன என்றும் இன்னும் பல சிந்துகள் அச்சேறாமலேயே உள்ளன என்றும் கூறுகிறார்கள், 1928ல், தான் வெளியிட்ட சங்கீதக் கோவையில் அண்ணாமலை ரெட்டியாரால் இயற்றப்பட்ட காவடிசிந்தின் இசையழகை கே.வி. சீனிவாச அய்யங்கார் பாராட்டியிருக்கிறார்.
ஏட்டுப் பிரதிகளாக இருந்த காவடிசிந்தை கரிசல் எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெளியிட்டிருக்கிறார்.
‘யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புகளோடு செய்யுளை மிக விரைவில் இயற்ற வல்லவர். இவரது இயல்பான பேச்சில் சிலேடை மிளிரும். சித்திர கவிக்கு இவர் இணையற்றவர். காவடிசிந்து முறை ஏற்பட்டதே இவரால்தானே...’ என உ.வே.சாமிநாத அய்யர் பாராட்டியிருக்கிறார்.
இப்படி அனைவராலும் புகழப்பட்ட அண்ணாமலை ரெட்டியாரை தன் உள்ளங்கையில் வைத்து மருதப்பர் தாங்கினார். இவரை வரவழைப்பதற்காக ஜமீன் பல்லக்கை அனுப்புவார்.
அந்தளவுக்கு தமிழ் மீது பற்றுக் கொண்டவராக மருதப்ப தேவர் திகழ்ந்தார்.

#கழுகுமலை
#காவடி சிந்து
#அண்ணாமலைரெட்டியார்
#ஊற்றுமலை ஜமீன்தார்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017


Thursday, March 23, 2017

யுனெஸ்கோ கூரியர்:

யுனெஸ்கோ கூரியர்:
-----------------------
யூனஸ்கோ தமிழ் கூரியர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கவனிக்கப்பட்ட ஈர்க்கப்பட்ட ஏடாக இருந்தது. நஷ்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தமிழர்களுக்கு நாலாந்திர பத்திரிகையும், சினிமா பத்திரிகையும் தான் பிடிக்கும் அறிவு பூர்வமான பத்திரிகைகள் எப்போது தமிழர்களிடம் எடுப்படாமல் கடந்த காலத்தில் நஷ்டத்தில் தானே நிறுத்தப்பட்டது.
டெல்லியில் இருந்த வந்த கணையாழி, சி.சு. செல்லப்பா படைப்புகள் யாவும் தலையில் வைத்து சுமந்தும், கூவி விற்றும், தமிழர்கள் வாங்க மறுத்துவிட்டார்களே.
புலனாய்வு ஏடுகளில் இருந்து இன்றைக்கு வந்து தவறான செய்திகளை மக்களுக்கு விளக்கின்றன.
அதை தான் வேண்டி, விரும்பி படிக்கின்றனர்.

கூரியர் போன்ற ஏடுகள் எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் தமிழர்கள் ஆகிய நாம் வாங்க மறுத்துவிட்டோமே என்ன செய்ய?

யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தவருமான மால்கம் ஆதிசேஷையா தான், யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழில் தொடங்கப்பட முக்கியக் காரணம். 1967 ஜூலை மாதம் தமிழில் தொடங்கப்படுவதை ஒட்டியே, இந்தியிலும் கூரியர் இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் , நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். யுனெஸ்கோ கூரியர் இதழ் ஆசிரியர்களின் முக்கியமான பணியைத் தாண்டி, இதழுக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் அளப்பரியது.
தமிழில் பல மொழிபெயர்ப்பு இதழ்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினையை யுனெஸ்கோ கூரியரும் எதிர்கொண்டது. நேரடியாக நம் மொழியில் வாசிக்கக்கூடிய அளவிலான எளிமையை, அதனால் எட்ட முடியவில்லை. இருந்தபோதும், வெளியான காலத்தில் அந்த இதழ் வெளியிட்ட கருத்துகள், பேசுபொருட்கள் அதன் சந்தாதாரர்களின் புரிதலைப் பல வகைகளில் மேம்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், பொது நூலகங்கள் அனைத்துக்கும் யுனெஸ்கோ கூரியர் சென்றுகொண்டிருந்தது.
தமிழ்ச் சிறப்பிதழ்
தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழை ‘தமிழரின் வாழும் பண்பாடு’ என்ற பெயரில் யுனெஸ்கோ கூரியர் மார்ச் 1984-ல் வெளியிட்டது. அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்த பிரெஞ்சு - தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ, ‘சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா), சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு சித்திரத்தை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.
நிரப்பப்படாத வெற்றிடம்
‘யுனெஸ்கோ கூரியர்’, நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி 2001-ல் நிறுத்தப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் wus ல் அந்த இதழின் அலுவலகம் இயங்கியது. அன்றைய தமிழக அரசு நினைத்திருந்தால், ‘யுனெஸ்கோ கூரியரின் தமிழ் பதிப்பு காப்பாற்றப்பட்டிருக்கலாம். 

யுனெஸ்கோ கூரியர் பழைய தமிழ் இதழ்கள் தனிச் சேகரிப்பிலும், சில நூலகங்களிலும் கிடைக்கலாம்.
நானும் இந்த இதழை  சில காலம் சேகரித்து பைண்ட் செய்துசேர்த்துவைத்துள்ளேன்.

தற்போதும் யுனெஸ்கோ கூரியர் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஐ.நா. அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அச்சு இதழாகவும், இணையத்தில் இலவசமாகவும் வெளியாகி வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தாண்டி, வாழும் இதழாக ‘யுனெஸ்கோ கூரியர்’ - தமிழ் ஏற்படுத்திய வெற்றிடம், இதுவரை இட்டு நிரப்பப்படாமலேயே இருக்கிறது.
#யுனெஸ்கோகூரியர்
#Unescocourier
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23/03/2017

Wednesday, March 22, 2017

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:
-------------------------------------
 டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீவு இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. பிரிட்டன்,அமெரிக்காவும் இங்கே ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கடுமையாக சோவியத் நாட்டின் ஆதரவுடன் எதிர்த்துதான் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மொரீஷஸுக்குச் சொந்தமான சாகோஸ் தீவுகளில் ஒன்றான டீகோ கார்சியா தீவை, அந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவுக்கு பிரிட்டன் குத்தகைக்குக் கொடுத்தது.
அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோ கார்கியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீஷ்ஸு நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்குமொரீஷ்ஸு உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக்காலம், சமீபத்தில் காலாவதியாகி விட்டது.
எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீஷ்ஸு அரசு, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது.

கொச்சியிலிருந்து 2 விசைப்படகுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 5ம்தேதி மீன்பிடிக்க சென்ற குமரி மற்றும் கேரளாவை சார்ந்த 32 மீனவர்களை எல்லை தாண்டியதற்காக பிரிட்டன் படையினர் கடந்த மார்ச் 2ம் தேதி கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியின் ஆட்சியாளர் ஜஸ்டீன் ஆன்டனிக்கு மார்ச் 7 அன்று அனுப்பிய கடிதத்தில், மீனவர்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதி எமது கடல் எல்லைக்குள் நுழைந்தமைக்காக எங்கள் ரோந்து படகினர் பிடித்தனர். பின்பு இவர்களை மார்ச் 2ம் தேதி எங்களிடம் ஒப்படைத்தனர். இவர்களை தற்போது எங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இங்குள்ள சட்டப்படி, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த காரணத்தால் ஒவ்வொரு விசைப்படகிலுமிருந்த சுமார் 9 டன் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் அனைவரும் மார்ச் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான போது இவர்களுக்கு 5909 பவுண்டு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4 லட்சத்து 73ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகையை மார்ச் 17க்குள் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். விசைப்படகு உரிமையாளர் ஜூடி ஆல்பர்ட் மனைவி சுஜா இந்த தொகையை வங்கி மூலம் செலுத்தியுள்ளார். இதனால் 32 மீனவர்களும் ஓரிரு நாளில் விடுவிக்கப்பட்டு தங்களது விசைப்படகுகளில் உடனே அங்கிருந்து புறப்படுவார்கள் என தெரிகிறது என்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி தெரிவித்தார்.
 #டீகோகார்சியா
#தமிழகமீனவர்கள்
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
22/03/2017

death penalty

death penalty 

The Law Commission report has been circulated to all state governments and union territories for seeking their views. 
The Law Commission has recommended that the death penalty be abolished for all crimes except those related to terrorism, Rajya Sabha was informed on Wednesday.

Minister of state for home Hansraj Ahir said the Law Commission in its 262nd report has recommended that the death penalty be abolished for all crimes other than terrorism related offences and waging war.

“As Criminal Law and Criminal Procedure are in the concurrent list of the 7th Schedule of the Constitution, the report has been circulated to all state governments and union territories for seeking their views,” he said replying a written question.

World Water Day

இந்தியாவில் ஆறு கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை 
World #Water Day – March 22

World Water Day has been observed since the year 1993 when the United Nations General Assembly declared 22 March as "World Day for Water”. Still surprisingly the World Water Day is not as popular as the Valentine Day! 

Clean water and access to food are some of the simplest things that we can take for granted each and every day. In places like Africa, these can be some of the hardest resources to attain if you live in a rural area. Slowly other continents too go the African way as far as access to clean water! In spite of all scientific developments in all areas we are still unable to solve water shortage.

The United States of America and the European countries certify that India is on the fast track of progress. Many rockets India lounged have reached the Moon and the Mars. Still India faces the basic problem. There is acute water shortage in many Indian states: Rajasthan, Gujarat, Madhya Pradesh, Uttar Pradesh, Maharashtra, Chhattisgarh, Andhra Pradesh and Tamil Nadu. 

The successive state governments should have tried to solve the water shortage issues in their respective states; there might be everything; but if there is no enough water all programs for progress are futile. Indians can survive without internet and Google but not without sufficient water. If there is a strong determination all problems can be solved; firstly, prioritise to resolve basis issues like clean water, sanitation, food, primary education for all citizens and then endeavour whatever other luxuries the country can afford to have.

In Kerala rains are plenty. Kerala faces severe water scarcity between February and mid-May every year. Every year during the summer, there is drinking water shortage. In spite of 44 rivers and world's largest water well density, per capita surface water and groundwater availability of the state is lower than that of arid regions of waterless states of India. Sadly there is no effective water storage management in the state.

In the United Arab Emirates clean drinking water is so plentiful through sea water desalination plants. The charges are nominal. There are propaganda programs on preservation of water; to avoid misuse of water. The water bills indicate if there the use is excessive. There are two main sources of water in the Emirate of Abu Dhabi: Desalinated seawater and groundwater. While groundwater is used for agriculture in Al Ain and Liwa, drinking water is provided almost entirely from desalinated seawater across the Emirate. 

1.8 billion People around the world don't have access to safe water and 2.4 billion lack access to adequate sanitation. Women and children spend more than 4 hours walking for water each day, and more than 840,000 people die each year from water-related diseases.

Since ages, people across different regions of India, have experienced either excess or scarce water due to varied rainfall and land topography. Yet, they have managed to irrigate their agricultural fields using localized water harvesting methods. Their traditional ways, though less popular, are still in use and efficient.

In India 83% of available fresh water is used for agriculture. Rainfall being the primary source of fresh water, the concept behind conserving water is to harvest it when it falls and wherever it falls. The importance of storing rainwater through different techniques can be understood by an example of the desert city of Jaisalmer in Rajasthan which is water self-sufficient despite experiencing meagre rainfall as against Cherrapunji, which is blessed with the highest rainfall in the world, but still faces water shortage due to lack of water conservation methods.

Since ages, people across different regions of India, have experienced either excess or scarce water due to varied rainfall and land topography. Yet, they have managed to irrigate their agricultural fields using localized water harvesting methods!

India's water crisis is often attributed to lack of government planning, increased corporate privatization, industrial and human waste and governmental corruption. In addition, water scarcity in India is expected to worsen as the overall population is expected to increase to 1.6 billion by year 2050. On this World Water Day – March 22 let us stand up and take an oath loudly to preserve water for our future generations.
Thanks to P.Rajagopal

மினர்வா தியேட்டர்

மினர்வா தியேட்டர் :
----------------------
சென்னையில் மினர்வா தியேட்டர் பாரிமுனையில் உள்ள பிராட்வே பகுதியில் முக்கியமான பழைய திரையரங்கம்.
கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதே  குளிரூட்டப்பட்டதிரையரங்கமாக
திகழ்ந்தது.

இந்த திரையரங்கத்தில் ஆங்கில திரைப்படங்கள் தான் திரையிடப்படும். சென்னை நகரத்தில் முக்கிய பிரமுகர்கள் 1940-50களில் இந்த திரையரங்கிற்குதான் வருவது வாடிக்கை.
பேரறிஞர் அண்ணா,நாஞ்சிலாரை தி.மு.க பங்கெடுத்த 1957-முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினத் தொகுதியில் நாஞ்சிலாரை வேட்பாளராக அறிவிக்க விரும்பினார்.
இதற்கு நாஞ்சிலாரின் சம்மதத்தைப் பெற அவரை தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்த வேண்டிய நேரம்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கழக நிர்வாகிகளிடம் நாஞ்சிலார் வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார். அவரை பிராட்வே மினர்வா திரையரங்கிற்கு போனால் அங்குதான் இருப்பார்.
அங்கு போய் அழைத்து வாருங்கள் என்று சொன்னார். அண்ணா நினைத்தவாறு நாஞ்சிலாறும் மினர்வா தியேட்டரில் ஆங்கில படம் பார்த்துக்கொண்டிருந்தார்.
அழைக்க போனவர்களிடமும் நாஞ்சிலார் இருங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு போவோம் என்று அவர்களையும் இருக்க சொல்லி திரைப்படம் முடிந்தவுடன் தான் அண்ணாவை பார்க்க சென்றார் நாஞ்சிலார்.

இந்த தியேட்டரில் அரசியல் தலைவர்களான ஆர். வெங்கட்ராமன், சிற்றரசு, ஆசைதம்பி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், பத்மினி, போன்றவர்களும் இந்த திரையரங்கிற்கு வாடிக்கையாளர் ஆவார்கள்.

சென்னை பிராட்வேயில் சட்டக் கல்லூரி படிக்கும்போது நான் தங்கியிருந்த எம்.யு.சி. விடுதியிலிருந்து 2 நிமிடங்களில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். அற்புதமான இஞ்சி டீ அங்கு கிடைக்கும்
மினர்வா தியேட்டர் அருகில் பிரபாத் , பிராட்வே, எம்.ஜி.ஆருக்கு பிடித்த முருகன் தியேட்டர்களில் தமிழ்ப் படம் ஓடும்.
நல்லிரவு காட்சிகளுக்கு செல்ல வேண்டுமா இந்த தியேட்டருக்கு செல்வது வாடிக்கை.

மினர்வா தியேட்டர் போல சென்னை எழும்பூரில் பரசுராமன் நடத்திய மினர்வா டுட்டோரியல் கல்லூரியும் பிரபல்யம்.தரமான, பாட நூல் கைடுகளும் மினர்வா அப்போது வெளியிடும்.அதைத்தான் வாங்கி படிப்பதும் உண்டு.

மினர்வா தியேட்டர் தற்போது கலையிழந்து பாட்சா தியேட்டர் என்ற பெயரில் இயங்குகின்றது.
ஒரு காலத்தில் விதவிதமான கார்களில் வந்து சென்னை வாசிகள் வந்து படம் பார்த்த தியேட்டர் இப்போது குடவுமினர்வா தியேட்டர் பாரிமுனையில் உள்ள பிராட்வே பகுதியில் முக்கியமான பழைய திரையரங்கம்.
கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதே  குளிரூட்டப்பட்ட திரையரங்கமா திகழ்ந்தது.
இந்த திரையரங்கத்தில் ஆங்கில திரைப்படங்கள் தான் திரையிடப்படும். சென்னை நகரத்தில் முக்கிய பிரமுகர்கள் 1940-50களில் இந்த திரையரங்கிற்குதான் வருவது வாடிக்கை.
பேரறிஞர் அண்ணா நாஞ்சிலாரை தி.மு.க பங்கெடுத்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினத் தொகுதியில் நாஞ்சிலாரை வேட்பாளராக அறிவிக்க விரும்பினார்.
இதற்கு நாஞ்சிலாரின் சம்மதத்தைப் பெற அவரை தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்த வேண்டிய நேரம்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கழக நிர்வாகிகளிடம் நாஞ்சிலார் வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார். அவரை பிராட்வே மினர்வா திரையரங்கிற்கு போனால் அங்குதான் இருப்பார்.
அங்கு போய் அழைத்து வாருங்கள் என்று சொன்னார். அண்ணா நினைத்தவாறு நாஞ்சிலாறும் மினர்வா தியேட்டரில் ஆங்கில படம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அழைக்க போனவர்களிடமும் நாஞ்சிலார் இருங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு போவோம் என்று அவர்களையும் இருக்க சொல்லி திரைப்படம் முடிந்தவுடன் தான் அண்ணாவை பார்க்க சென்றார் நாஞ்சிலார்.
இந்த தியேட்டரில் அரசியல் தலைவர்களான ஆர். வெங்கட்ராமன், சிற்றரசு, ஆசைதம்பி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், பத்மினி, போன்றவர்களும் இந்த திரையரங்கிற்கு வாடிக்கையாளர் ஆவார்கள்.
சென்னை பிராட்வேயில் சட்டக் கல்லூரி படிக்கும்போது நான் தங்கியிருந்த எம்.யு.சி. விடுதியிலிருந்து 2 நிமிடங்களில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். அற்புதமான இஞ்சி டீ அங்கு கிடைக்கும்
மினர்வா தியேட்டர் அருகில் பிரம்மா, பிராட்வே, எம்.ஜி.ஆருக்கு பிடித்த முருகன் தியேட்டர்களில் தமிழ்ப் படம் ஓடும்.
நல்லிரவு காட்சிகளுக்கு செல்ல வேண்டுமா இந்த தியேட்டருக்கு செல்வது வாடிக்கை.
மினர்வா தியேட்டர் போல சென்னை எழும்பூரில் பரசுராமன் நடத்திய மினர்வா டுட்டோரியல் கல்லூரியும் பிரபல்யம்.
தரமான, பாட நூல் கைடுகளும் மினர்வா அப்போது வெளியிடும் அதைத்தான் வாங்கி படிப்பதும் உண்டு.
மினர்வா தியேட்டர் தற்போது கலையிழந்து பாட்சா தியேட்டர் என்ற பெயரில் இயங்குகின்றது.
ஒரு காலத்தில் விதவிதமான கார்களில் வந்து சென்னை வாசிகள் வந்து படம் பார்த்த தியேட்டர் இப்போது குடோன் போல் மாறிவிட்டது.
#மினர்வாதியேட்டர்
#பாரிமுனை
#பிராட்வே 
#Chennai 
#சென்னை

#KSRPOSTING

#KSRADHAKRISHNAN_POSTING

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

20/03/2017


Tuesday, March 21, 2017

RSS

மாறுபட்ட கொள்ளகை ஆனால்
அவரகளின் போக்கில் கடின உழைப்பு ;
உள்ளபடி ஒத்து கொள்ளவேண்டும் .

உபியில RSS உழைத்தான் வெற்றியை அறுவடை செய்தான் ..

இன்று தமிழ் மண்ணான கோவையில் தமிழகம் முழுவதுமாக சுமார் 5000 கிராமங்களுக்கு RSS அமைப்பை உருவாக்க 1200முழு நேர உறுப்பினர்களுக்கு பயிற்சி நடக்கின்றன .

உபி மட்டுமல்ல தமிழகத்தில் எப்படி கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டம் அவர்களிடம் உண்டு ...  
அதற்கு உதாரனம்  கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பார்த்தோம் ..
பாராளுமன்ற தேர்தலிலும் பார்த்தோம்.... அவ்வளவு ஏன் தற்போது நடந்த உபி_தேர்தலிலும் பார்த்தோம் ....... 

வீதிக்கு வந்தால் மட்டுமே நீதி கிடைக்கும்.... 
வலைதளம் என்பது நாம் செய்யும் களப்பணியை உலகறியச் செய்யும் ஊடகமே தவிர.   

அதுவே களப்பணி அல்ல .......... 
நாம்........??
படம்:தற்போது கோவையில் நடைபெற்று வரும் RSSன் முழுநேர ஊழியர் களுக்கான பயிச்சி முகாம்..........

-Abu

India-Pakistanborder

Fencing of  280 kilometres of the India Pakistan border complete.
The balance of 168 kilometer stretch is to be covered by technological means as the site conditions are not conducive for fencing because of water logging.
#IndiaPakistanborder



சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதி

Uசென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதி,புரசவாக்கம், மில்லர் சாலையில் 1959-60-ல் கட்டப்பட்டது.1970-ல் பழைய விடுதியோடு தென் புறத்தில் புதிதாக விடுதியும் கட்டப்பட்டது. அந்த விடுதி தற்போது மூடப்பட்டு வேறு
காரணங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

நான் சட்டக் கல்லூரியில்  1970களில் படிக்கும்போது சென்னை பிராட்வேயில் இருந்த மெட்ராஸ் யுனிவட்சிட்டி கிளப் (எம்.யூ.சி) தங்கிப் படித்தேன். சட்டக் கல்லூரி விடுதியில் நான் தங்கவில்லை.
1950 காலக்கட்டங்களில்எம்.யூ.சி தான் சட்டக் கல்லூரி விடுதியாக இருந்தது.

புரசவாக்கத்தில் உள்ள மாணவர் விடுதி என்னக் காரணத்திற்காக மூடப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் மாணவர்கள் தங்கிய விடுதி மூடுவது அங்கு தங்கிப் படித்த மாணவர்களுக்கு கவலையைத் தருகின்றது.



Sunday, March 19, 2017

Rare photo-Indian History

Rare photo-Indian History
...........................................
Shri Satyanarian Sinha, Dr. Rajendra Prasad, Sardar Vallabhbhai Patel, Deputy Prime Minister of India,  Acharya Kriplani and Miss Maniben Patel at the party held by the Hon ble Deputy Prime Minister on October 17, 1949

Saturday, March 18, 2017

முக்கிய தமிழக நதிகள்:

மாவட்ட வாரியாக முக்கிய தமிழக நதிகள்:
-----------------------------------
1. கடலூர் மாவட்டம்
​நதிகள்  : தென்பெண்ணை, கெடிலம்
2. விழுப்புரம் மாவட்டம்
​நதிகள் : கோமுகி
3. காஞ்சிபுரம் மாவட்டம்
​நதிகள் : அடையாறு, செய்யாறு, பாலாறு
4. திருவண்ணாமலை மாவட்டம்
நதிகள் : தென்பெண்ணை, செய்யாறு
5. திருவள்ளூர் மாவட்டம்
​நதிகள் : கூவம், கொஸ்தலையாறு, ஆரணியாறு
6. கரூர் மாவட்டம்
​நதிகள் : அமராவதி  
7. திருச்சி மாவட்டம்
​நதிகள் : காவிரி, கொள்ளிடம்
8. பெரம்பலூர் மாவட்டம்
​நதிகள் : கொள்ளிடம்
9. தஞ்சாவூர் மாவட்டம்
​நதிகள் : வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி
10. சிவகங்கை மாவட்டம்
​நதிகள் : வைகையாறு
11. திருவாரூர் மாவட்டம்
​நதிகள் : பாமணியாறு, குடமுருட்டி
12. நாகப்பட்டினம் மாவட்டம்
​நதிகள் : வெண்ணாறு, காவிரி
13. தூத்துக்குடி மாவட்டம்
​நதிகள் : ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி
14. தேனி மாவட்டம்
​நதிகள் :  வைகையாறு
15. கோயம்புத்தூர் மாவட்டம்
​நதிகள் : சிறுவாணி, அமராவதி
16. திருநெல்வேலி மாவட்டம்
​நதிகள் : தாமிரபரணி, மணிமுத்தாறு, அடவிநயனார்,ராமாநதி, உள்ளாறு, செண்பகவல்லி, கடனாநதி. கொடுமுடியாறு, பச்சையாறு, நம்பியாறு, கருமேனியாறு
17. மதுரை மாவட்டம்  
​நதிகள் : பெரியாறு, வைகையாறு,கிருதுமால் நதி
18. திண்டுக்கல் மாவட்டம்
​நதிகள் : பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி
19. கன்னியாகுமரி மாவட்டம்
​நதிகள் : கோதையாறு, பறளியாறு, பழையாறு
20. இராமநாதபுரம் மாவட்டம்
​நதிகள் : குண்டாறு, வைகை
21. தருமபுரி மாவட்டம்
​நதிகள் : தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி
22. சேலம் மாவட்டம்
​நதிகள் : வசிட்டாநதி, காவிரி
23. விருதுநகர் மாவட்டம்
​நதிகள் : கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு
24. நாமக்கல் மாவட்டம்
​நதிகள் : உப்பாறு, நெய்யல், காவிரி
25. ஈரோடு மாவட்டம்
​நதிகள் : பவானி, காவிரி
இந்த தீரங்களை, சரியாக பராமரிக்காமல் அங்குள்ள மணலையும் அள்ளி, இயற்கையின் அருடகொடை நாசப்படுத்திவிட்டோம். சிறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் கூட காணாமல் போய்விட்டது.

தமிழக நீர்நிலைகள்:
--------------------
நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றனர்.

மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.

இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன நாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் அரசுகளால் தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம். இன்றைக்கு நாம் ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்கார்ர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். தாது மணல் ஆற்று மணல் யார் வீட்டு சொத்து மாதிரி மலை முழுங்கி மகாதேவர்கள் அள்ளிச் செல்வதை மக்கள் சக்தி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஏனென்றால் ஓட்டுக்குப் பணம் வாங்கி விட்டோமே….வெற்றிப் பெற்றவர்களெல்லாம் மணல் கொள்ளைக்கார்ர்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் தானே காசை வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்?

#தமிழகநதிகள்

#தமிழக_நீர்நிலைகள்

#ஆறுகள்_குளங்கள்

#ஏரிகள்

#KSRPOSTING

#KSRADHAKRISHNAN_POSTING

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

18/03/2017

Sucheta Kriplani

Indian History 

Sucheta Kriplani, Professor of Constitutional History at BHU.  She was the chief minister of UP from 1963-67. Born at Ambala, Punjab, studied at the Panjab University.  Participated in the Quit India Movement. Elected to the Constituent Assembly of India. She was the one who sang the Vande Mataram in the Constituent Assembly on the  14th-15th August 1947, as a prelude to Nehru giving his famous mid-night speech welcoming India's independence. Sucheta Kriplani defeated the Congress candidate in the elections of 1952. In the next election she was re-elected from the same constituency but, this time on the Congress ticket. Minister of Labour, Industry and Community Development in the UP government from 1960 to 1963. Became Chief Minister of UP from 1963 to 1967. The first woman chief minister of India.

Friday, March 17, 2017

பட்ஜெட்

தமிழக நிதியமைச்சர் நேற்றைக்கு சட்டமன்றத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு முன்பு குற்றவாளியான மறைந்த ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நிதிநிலையறிக்கையை வைத்து வணங்கியுள்ளார்.பட்ஜெட் ரகசிய சட்டமன்றத்தில் வைக்கும் ஆவணம் 
இது ஜனநாயகத்திற்கும், நாடாளுமன்ற ஆட்சி முறைக்கும் முரணான வெட்கக்கேடான செயலாகும்.

சசிகலா உள்ளிட்டவர்களின் பெயரைச் சொல்லி பட்ஜெட்டை வாசித்தார் நிதியமைச்சர் . "தனித்துவம் மிக்கவராகவும் நம் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் மாமனிதராகவும் விளங்கி பாசத்திற்கு உறைவிடமாக திகழும் புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து அவரது மதிநுட்பமிக்க தலைமையின் கீழ் நாமும் பணியாற்றி.." என துவங்கியது பட்ஜெட்.

இம்மாதிரி இந்தியாவிலும், உலகத்திலும் எங்கும் நடந்தது கிடையாது.
நியாயமற்ற நடைமுறைகளை நியாயப்படுத்துவது ஏற்க முடியாத காரியமாகும்.
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை பண்டிதர் நேரு அமைச்சரவையில் கோவையில் பிறந்த ஆர். கே. சண்முகசெட்டியார் என்ற தமிழன் தாக்கல் செய்த பட்ஜெட்டை இன்றைக்கும் உலகம் பாராட்டுகின்றது.
அதே தமிழகத்தில் இந்த கேடுக்கெட்ட செயல் நடந்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆர். கே. சண்முகசெட்டியார் தாக்கல் செய்த பட்ஜெட்டை குறித்து OPEN ஆங்கில வார ஏட்டில் வந்த செய்தி கட்டுரையின் தொடர்ப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
அதில்,இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போதைவரை ஒவ்வொரு நிதியமைச்சரும் எப்படி தங்கள் பட்ஜெட்  உரையைத் துவங்கினார்கள், எவ்வளவு நேரம் வாசித்தார்கள் என சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த பத்தி. பலரும் இலக்கியத்திலிருந்து வரிகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.
#பட்ஜெட்
#சண்முகசெட்டியார்
#Ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17.03.2017
---------------------
THE PRESENTATION OF the Budget is a day of spectacle and tradition. It begins with cameramen and journalists pursuing a man with a leather briefcase as though he might trip and spill its content. It is a route everyone knows well, from his residence to the North Block office by 9 am, through the Rashtrapati Bhavan for a quick sit-down with the President, and finally to Parliament House sometime before 11 am, where on the hallowed steps of the institution, he will pose for pictures. Meanwhile, industrialists and analysts elsewhere would have gathered around a screen as though watching a marquee match unfold. Here, they spend all morning in speculation over the contents of the briefcase, and, once revealed, engage in lengthy exegetical performances.READ MORE

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...