Saturday, March 4, 2017

மேலவை தேர்தல்:

மேலவை தேர்தல்:
----------------
நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கும், சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கும், வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் தொகையை வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலவை தேர்தலுக்கு இம்மாதிரி செலவுத் தொகை எல்லாம் கிடையாது.
தமிழகத்தில் மேலவை கிடையாது. 
புண்ணியவான் எம்.ஜி.ஆர். அதை நடிகை நிர்மலாவிற்காக முடக்கிக் கெடுத்தார்.
தமிழகத்தில் மேலவை முடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தி.மு.க. ஆட்சியில் மூன்று தடவை மேலவை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் பயனில்லாம் போய்விட்டது.
இதுக் குறித்து 2000ல் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் நான் தொடுத்தேன். (WPno4399/2000)
தற்போது சில மாநிலங்களில் மேலவை தேர்தல்கள் நடக்கிறது. மேலவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் செலவை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க இருக்கின்றது.
கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் வகையில், மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்க, வேட்பாளர்களின் செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அவற்றை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, பீகார், உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கான போன்ற மாநிலங்களில் சட்டமேலவையும் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாலும், அடுத்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டப்பேரவை பிரநிதிகளாலும், 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்த மாநிலத்தில் உள்ள பட்டதாரிகளாலும், இன்னொரு 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களாலும், மீதமுள்ள உறுப்பனிர்கள் ஆளுநராலும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தற்போது மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக் கணக்கில் உச்சவரம்பு இல்லை. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மேலவை உறுப்பினர்களின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பில், பாதி தொகையை மேலவை உறுப்பினர்களின் தேர்தல் செலவுக்கு உச்சவரம்பாக நிர்ணயிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சகம், இது தொடர்பாக மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மேலவைகளின் கருத்துக்களை கேட்க வேண்டுமென கூறியுள்ளது.
#மேலவை
#தேர்தல்
#KSRadhaKrishnanpost 
#Ksrpost 
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
04.03.2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...