தாமிரபரணி குறித்த எனது கருத்து இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்து உள்ளது.
-------------------------------------
தாமிரபரணியில் தண்ணீர் இல்லையென்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை மூடியிருக்கிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெப்சி கோக் நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. என்னே அறிவு, என்னே நீதி!
இது குறித்த எனது கருத்து இன்றைய (3/3/17)தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்து உள்ளது..
குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை நீக்கம்: சமூகப் பார்வையுடன் நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும்.
- திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து
பெப்ஸி, கோக் குளிர்பான நிறு வனங்களுக்கு தாமிரபரணியி லிருந்து தண்ணீர் எடுக்க விதிக் கப்பட்டிருந்த தடையை நீக்கியது டன் இதுதொடர்பான 2 பொது நலன் வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித் துள்ளது. மேற்கண்ட குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள லாம் என்ற தீர்ப்பு தென்மாவட்ட மக்கள் மத்தியில் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
குளிர்பான ஆலைகளுக்கு எதிராக பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்தரங்குகள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தியவர் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு 1000 லிட்டர் தண்ணீர் ரூ.37.50 என்ற விலைக்கு அரசே வழங்க ஒப்பந்தம் போட்டிருப்பதையும், அதை நீதிமன்றம் சரி என்று ஏற்றுக் கொண்டிருப்பதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்தியாவின் நீராதார துறை (Central Water Commission) அறிக்கைப்படி, பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரிநீர் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் இல்லை. தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே(Water guage) கிடையாது. எந்த இடத்தில் ஓடும் நீரை உபரி நீர் என்கிறார்கள். அப்படியே உபரி நீர் இருந்தாலும், அதை எப்படி ஒரு தனியார் நிறுவ னம் எடுக்க முடியும்? தண்ணீர் என்பது ஒரு அடிப்படை வளம். அது விற்பனை பண்டம் அல்ல. அங்குள்ள மக்களுக்கு விவசாயத் துக்கு தண்ணீர் இல்லை. குடிக் கவே தண்ணீர் இல்லை. அங்கு சாக்கடைதான் ஓடுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது. தண்ணீர் பிரச்சினையில் சட்டப் பார்வை மட்டு மின்றி, சமூக பார்வையுடன் நீதி மன்றம் அணுகியிருக்க வேண்டும்.
பெப்ஸி, கோக் நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே வியாபார தடை உள்ளிட்ட பிரச்சினைகள் கிளப்பப் படுவதாக புகார் கூறுகின்றனரே?
காளிமார்க், பொவன்டோ உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு நிறுவனங் களான பெப்ஸி, கோக் ஆகிய வற்றை தடை செய்ய முயற்சி எடுப்பதாக வாதிடப்படுகிறது. நான் அதற்குள் செல்ல விரும்ப வில்லை. இப்போது வெளி வந்துள்ள தீர்ப்பு தாமிரபரணி தண்ணீர் பிரச்சினைதான். மற்ற நிறுவனங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை.
ஒரு பொருளுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால், அரசு அல்லது நீதிமன்றம்தான் தடை விதிக்க வேண்டும். மக்களே சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்ற எதிர்த்தரப்பு வாதம் குறித்து உங்கள் கருத்து?
கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்திருப்பது வியாபாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு. தாமிரபரணி தண்ணீரை எடுக்க அனுமதி அளித்திருப்பது தவறு என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.
............................
தாமிரபரணியில்:
கி.பி., 1365 முதல் 1731 காலகட்டத்திலும், பின், பிரிட்டிஷ் ஆட்சியிலும் தாமிரபரணியை ஒட்டி எட்டு அணைகள், அதனுடன் இணைந்த, 11 கால்வாய்கள், 283 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த, 70 ஆண்டுகளில், பாசன வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தாமிரபரணியின் உபரி நீரை, கடலில் கலக்காமல் தடுத்து, பூகோள சூழ்நிலைக்கு ஏற்ப குளங்கள், கண் மாய் களுக்கு நீர் செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றவில்லை. இதில் நீதிமன்றம் வருத்தத்தை தெரிவிக்கிறது.
தாமிரபரணி நீரை மொத்தம் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?
தாமிரபரணியில் நீர் எடுப்பது அரசு நிறுவனமான சிப்காட்.
ஒரு நாளைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு - 136 லட்சம் லிட்டர்.
இந்த நீரை சிப்காட் 27 கம்பெனிகளுக்கு பிரித்து கொடுக்கிறது.
2015 - 2016 வருட கணக்குப்படி அதிகமான தாமிரபரணி நீரை உபயோகப்படுத்தியது ATC Tyres என்ற நிறுவனம் தான். இவர்கள் ஒரு நாளைக்கு 9.3 லட்சம் லிட்டர் நீரை பயன்படுத்தியுள்ளார்கள்.
பெப்சி ஒரு நாளைக்கு 1.1 லட்சம் லிட்டர் நீரும்,கோக் ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் நீரும் பயன்படுத்தியுள்ளன.
Ramco, Wolkem, Cal Mic, Globe Radio, Nova Carbons. VLS Enterprises, Bhuvi Care மற்றும் Pabros Spices ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை விட அதிகமாக பயன்படுத்தியுள்ளன.
சேர்வலாறு,மணிமுத்தாறு,
கடனாஆறு,பச்சையாறு,சிற்றாறு,
பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு,
சோம்பனாறு,கௌதலையாறு,
உள்ளாறு,பாம்பனாறு,
காரையாறு,நம்பியாறு,
கோதையாறு,கோம்பையாறு,
குண்டாறு என இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள்
நாளை தாமிரபரணி வரலாறு குறித்து பதிவு செய்கிறேன்......
#பெப்ஸி, #கோக்
#தாமிரபரணி
#tirunelveli
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03.03.2017
No comments:
Post a Comment