அன்புடை நெஞ்சங்களுக்கு வணக்கம்.
நேற்று நடந்த நிகழ்வு ஒன்றை எனது முகநூலில் பதிவு செய்தேன். அந்த பதிவினை தொடர்ந்து வெளிநாடு வாழ் நண்பர்களும், ஈழத்து மண்ணில் இருந்து சில நண்பர்களும் , உள்ளூர் நண்பர்களும் என்னை தொடர்பு
" இப்படியும் நடந்ததா?" என வாஞ்சையுடன் விசாரித்தார்கள். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் அந்த கசந்த நிகழ்வு அது ஏற்படுத்தியக் காயமும் நேற்று நடந்த நிகழ்வின் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.
அன்புடன் விசாரித்த அன்பு நண்பர்கள் பலர் எனது பணிகளை நினைவூட்டியும் , தேசிய நதினீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கு, கண்ணகி கோவிலில் தமிழரின் உரிமை நிலைநாட்டல், மேலவை அமைக்கும் வழக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கூடன்குளம் முதல் ஆலங்குளம் சிமண்ட் தொழிற்சாலை வரை தொடந்த வழக்குகள்,
சிறை கைதிகளுக்கு வாக்குரிமை, வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் பகுதி மக்களை கர்னாடக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தது என இதுபோன்ற பல வழக்குகளை பட்டியலிட்டும், இன்னும் சிலரோ நான் எழுதிய நூல்களில் அட்டைப்படங்களை பதிவு செய்து அத்துடன் கருத்துக்களையும் பதிவு செய்தது மனக்காயங்களுக்கு அருமருந்தாக அமைந்தது. உலகம் அன்பால் நிரப்பப்பட்டு உள்ளதாகவே இருப்பதை நினைவுபடுத்தியது.
அன்பும் பண்பும் நிறைந்த நெஞ்சங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தகுதியே தடை என்று இருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதையும் மீறி களப்பணிக்கு அளப்பரிய மரியாதை உண்டு என பலரும் நினைவூட்டினர். எங்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து எத்தனையோ அமைச்சர்கள் வந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம். ஆனால் எளிமையின் அடையாளம் காமராசர் அமைச்சரவையில் பணி புரிந்த மஜித் அவர்கள் தான் பலருக்கும் போற்றத்தக்க வகையில் நினைவிற்கு வருபவர்.
எந்த பொறுப்பிற்கும் வராத என்னை, விமான நிலையமாகட்டும், ரயில் நிலையமாகட்டும், பிற பிரயாணங்களாகட்டும் என்னை சந்திக்கும் பலரும் கேட்பது , " என்ன கே.எஸ்.ஆர் இன்னுமா உங்க ட்ர்ன் வரவில்லை ?" என்பது தான்.
அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது ," நமக்கு கிடைக்கும் பொறுப்புகளுக்கு தடை ஏற்படுத்தி விடலாம் ஆனாலும் எனது பணிகளை தடுத்து விட முடியாது".
அன்பு பரவிக் கிடக்கும் இவ்வுலகில் நல்லவைகளை மட்டும் செய்து அதன் வழி அன்பை பெற்று இவ்வுலகில் பரவிக் கிடப்பேன்.
#ksrpost
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2017
No comments:
Post a Comment