Uசென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதி,புரசவாக்கம், மில்லர் சாலையில் 1959-60-ல் கட்டப்பட்டது.1970-ல் பழைய விடுதியோடு தென் புறத்தில் புதிதாக விடுதியும் கட்டப்பட்டது. அந்த விடுதி தற்போது மூடப்பட்டு வேறு
காரணங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நான் சட்டக் கல்லூரியில் 1970களில் படிக்கும்போது சென்னை பிராட்வேயில் இருந்த மெட்ராஸ் யுனிவட்சிட்டி கிளப் (எம்.யூ.சி) தங்கிப் படித்தேன். சட்டக் கல்லூரி விடுதியில் நான் தங்கவில்லை.
1950 காலக்கட்டங்களில்எம்.யூ.சி தான் சட்டக் கல்லூரி விடுதியாக இருந்தது.
புரசவாக்கத்தில் உள்ள மாணவர் விடுதி என்னக் காரணத்திற்காக மூடப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் மாணவர்கள் தங்கிய விடுதி மூடுவது அங்கு தங்கிப் படித்த மாணவர்களுக்கு கவலையைத் தருகின்றது.
No comments:
Post a Comment