Fishermen issue:
------------------
So far,more than 800 Tamil fishermen brutally killed by Sri Lankan Naval force. More than 9000 times gun shots on Tamil fishermen and 500 boats were wantedly damaged by fire.15000 fishermen from Tamil Nadu were detained by Sri Lankan Government from 1964, more than 1000 men got affected and became physically handicapped due to the shooting and torturing of Sri Lankan forces.
பிரிட்கோ(22வயது )என்ற மீனவர், இலங்கை அரசால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இன்னும் மூன்று பேர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். தமிழகம்கொதிநிலையில் இருப்பதை அறிந்து தமிழக அரசு அவசரமாக ரூ. 5 லட்சம் கொடுத்து மீனவர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறது.
கடந்த 30ஆண்டுகளில் 800 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 1,050 கி.மீ. நீளமுள்ள கடற்கரை ஆபத்து நிலையில் உள்ளது .
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்களைத் தாக்கியதற்காக ஓர் இலங்கை கேப்டனை கைது செய்து மண்டபம் சிறையில் அடைத்துவைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததும் விடுவித்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் இத்தாலி மாலுமிகளால் இரண்டு கேரள மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அந்தக் கப்பல் உடனடியாக கொச்சிக்கு கொண்டுபோகப்பட்டது. இத்தாலி மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இத்தாலி நாட்டு அமைச்சரை அழைத்துப் பேசினார். கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.
...........
1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
"உத்தரவு எண் : RCF 23 - 75/83"
இந்த உத்தரவுக்கு பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினர்.
#மீனவர்கள்
#tamilnadufishermen #srilankannavalforce
#ksrposts #ksradhakrishnanposts
K.S.Radhakrishnan
7/3/2017
No comments:
Post a Comment