Tuesday, September 8, 2026

AUG 28


 

நேற்று மாலை லோக்பவன்யில்@ (கவர்னர் மாளிகையில்)

 நேற்று மாலை லோக்பவன்யில்@ (கவர்னர் மாளிகையில்) குடியரசுத் முன்னாள் துணைத் தலைவர் திரு வெங்கைய நாயுடு அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது!

அவரது சுயசரிதை நூல் ஏற்கனவே ஆங்கிலம் மூலத்தில் ஹிந்தி தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்த்து வந்திருக்கிறது. அந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்த பணி குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சில ஆலோசனைகளைச் சொன்னார்! கேட்டுக்கொண்டேன்! பிறகு அவர் குறித்த நினைவுகளை எல்லாம் நான் பகிர்ந்து கொண்டேன். எனது கல்லூரி நாட்களில் , இந்திரா காந்தி யின அவசரகாலத்தின்் போது சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் தனது திறமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த தென்ட்டி விஸ்வநாதம் அவர்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து உடன் சென்னை வந்தது பெருந்தலைவர் காமராஜரை கலைஞரை சந்திக்க பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே நீயூ ஆவடித் தெருவில் இருந்து அவர்களையெல்லாம் அழைத்து நான வந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் அடிக்கடி நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து படங்கள் பார்த்தது தமிழக அரசியல் சூழல்களைக் கவனத்தில் கொண்டது முதல் பிறகு பல்வேறு அரசியல் நிலைமைகள் வரை பேசிக் கொண்டிருந்தோம். #bjp #venkiahnaidu #thenativiswanatham #tamilnadupolitics #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost




AUG 28


 




AUG 28


 

இங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..

 இங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..அது நம் உயிருக்கும் மேலானவர்களிடம் கூட வெளிப்படுத்த முடியாத இருள் நிறைந்த பக்கங்களை கொண்டவையாக இருக்கிறது.. அதில் நல்லது கெட்டது எல்லாம் கலந்துதான் இருக்கும்.அதை எதற்காகவும் இங்கே யாரும் விட்டுத் தர முடியாது. ஏன் தெரியுமா? தீர்ப்பெழுதும் கண்களற்ற ஓர் உலகில் வாழவே நம் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது . ஏன் என்றால் நம்மால் அங்கு தான் விருப்பம் போல் செயல்பட முடியும்..

My Alma mater, #Madras_LawCollege https://facebook.com/share/r/1HLvgRgrZH/?mibextid=wwXIfr

 My Alma mater, #Madras_LawCollege

🏛️ 𝐆𝐫𝐚𝐧𝐝𝐞𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝟏𝟗𝟐𝟎𝐬: 𝐓𝐡𝐢𝐫𝐮𝐦𝐚𝐥𝐚𝐢 𝐍𝐚𝐲𝐚𝐤 𝐏𝐚𝐥𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐑𝐚𝐫𝐞 𝐅𝐫𝐞𝐧𝐜𝐡 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞𝐬

 🏛️ 𝐆𝐫𝐚𝐧𝐝𝐞𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝟏𝟗𝟐𝟎𝐬: 𝐓𝐡𝐢𝐫𝐮𝐦𝐚𝐥𝐚𝐢 𝐍𝐚𝐲𝐚𝐤 𝐏𝐚𝐥𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐑𝐚𝐫𝐞 𝐅𝐫𝐞𝐧𝐜𝐡 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞𝐬

சுமார் 1920-களில் #மதுரை_திருமலைநாயக்கர்அரண்மனையின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பைப் பதிவு செய்த ஒரு அரிய ஆவணம்! ஜி. லாகுவாக் (G. Lacouague) என்பவரால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தின் இந்தப் பக்கத்தில், "மதுரையின் முன்னாள் மகாராஜாக்களின் அரண்மனை" என்ற தலைப்பில் ஒரு பழமையான புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த நிழற்படம் அரண்மனையின் பிரம்மாண்டமான உள் முற்றம், அதன் உலகப் புகழ்பெற்ற மாபெரும் தூண்கள் மற்றும் இந்தோ-சாராசெனிக் பாணியிலான வளைவுகளைக் காட்டுகிறது. அரண்மனைப் படிகளில் மக்கள் அமர்ந்திருக்கும் இக்காட்சி, 1920-களில் இந்த வரலாற்றுச் சின்னம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிலும், சர்வதேச ஆவணங்களிலும் பதிவாகியுள்ளது என்பதை விளக்குகிறது. A remarkable archival document recording the 17th-century #ThirumalaiNayakkarPalace in #Madurai, Tamil Nadu, during the c. 1920s. This vintage book page, written in French by G. Lacouague, features a rare photograph titled "The palace of the former Maha Rajahs of Madurai". The image captures the palace's grand courtyard, showcasing its massive, smoothly plastered pillars, multi-foliated Indo-Saracenic arches, and classical architectural elements. On the steps, local residents rest amidst potted plants, providing a unique look at how this historic monument intersected with daily public life and international documentation during the 1920s. #Madurai #NayakDynasty #IndoSaracenic #tamilhistory #HistoricalPhotography



facebook.com/share/r/1NeMTAU9YD/?mibextid=wwXIfr

 facebook.com/share/r/1NeMTA

#தொகுதிகளைமறுவரையறை

 #தொகுதிகளைமறுவரையறை

——————————————— மக்கள் தொகையின் அடிப்படையில் தான் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன!மக்கள் தொகைக்கணக்கெடுப்பு என்பது கடைசியாக 2011 இல் நடந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆண்டில் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா தொற்று பரவலாக இருந்ததால் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை 2013 கணக்கு எடுப்பின் படி நாட்டின் மக்கள் தொகை சுமார் 123 கோடியாக இருந்தது.நியாயப்படிப் பார்த்தால் இப்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தான் தொகுதிகளை மறு வரையறை செய்ய முடியும்! மக்கள்த் தொகை கணக்கெடுப்பிற்கு பின் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்குப் பதிலாக இப்போதே ஏன் தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று கேட்கிறார்கள்! மத்திய அமைச்சர் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நடந்து வரும் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படாது என்றுதான் கூறியிருக்கிறார்! மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டுத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதும் ஒரு வழிமுறைதான்! கடந்த காலத்தில் நடந்த மக்கள்த் தொகை கணக்கெடுப்பின்படி 1952 ல் 404 தொகுதிகளாக இருந்த நாடாளுமன்ற இடங்கள் 1963ல் 542 இடங்களாக உயர்ந்தது! இன்று வரை இந்த 542 இடங்கள்தான் நாடாளுமன்றத் தொகுதிகளாக உள்ளன! குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடுமையாக அமல்படுத்திய தமிழ்நாடு கேரளம் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களின் தொகுதிகள் குறைய கூடும் என்று திமுக போன்ற கட்சிகள் கூறுகின்றன! கூடுதலோ குறைவோ அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நிலப்பரப்பில் உபி பெரிய மாநிலம் அதனால் அங்கு 80 எம்பிக்கள் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க த வெக அரசியல் ரீதியாகத் திமுகவை எதிர்க்கிறது!ஆனால் இந்த தொகுதி மறு வரையறை விஷயத்தில் மத்திய அரசை திமுக எதிர்ப்பது போல் ஆளுங்கட்சியான த வெக வும் எதிர்க்கிறது! அரசியலில் எதிர் முகமாக உள்ள இரண்டு கட்சிகளும் தொகுதி வரையறை விஷயத்தில் ஒத்த கருத்துகளைக் கொண்டிருக்கின்றன! பொதுவாக மத்திய அரசை அனுசரித்துப் போவோம் என்று ஜோசப் விஜய் கூறியிருந்தாலும் இந்த விஷயத்தில் திமுகவை போல் அவரும் அவரது கட்சியும் இதை எதிர்ப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது! விஜயின் பார்வையில் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்பது இப்படித்தான் போல! மறுவரையறை சம்பந்தமான மசோதா ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவில்லை! அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம்! ஆனால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் த வெ க முதலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன! விஜய் தலைமையிலான த வெ க அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது! தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்டால் அப்போது தமிழகத்திற்கு உள்ள 39 நாடாளுமன்ற இடங்களும் குறைக்கப்பட்டு தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திமுக மாதிரியான கட்சிகள் கூச்சல் போடுகின்றன! இந்த கூச்சலில் ஆளுங்கட்சியான தவெகவும் இணைந்து கோரஸ் பாடுவது எப்படி என்று தெரியவில்லை! ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க மாட்டார்கள் போல! ஒரு சட்டம் அல்லது ஒரு மசோதா தேசம் முழுக்க அமலுக்கு கொண்டுவரப்படும் பொழுது பொறுமையாக இருந்து அதனுடைய சாதக பாதகங்களை அலச வேண்டும்! வளைக்கு முன் கல்லெறியக் கூடாது! எல்லா மாநிலங்களின் நலன்களை கணக்கில் எடுப்பது தான் இறையாண்மை. இப்போது தவெக தொகுதிகள் எந்த வகையிலும் குறையக்கூடாது என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டு உள்ளது. #Delimitation #elections #tamilnadupolitics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan

India Today survey

 India Today survey

The August 2026 India Today-CVoter Mood of the Nation survey reveals the people's choices for the country's top job. The survey was conducted between July 1 and August 25, 2026, speaking directly to 25,184 people across all Lok Sabha constituencies and states. For a broader picture and long-term trends, responses from CVoter's regular tracker were also analysed, taking the total sample considered to 1,16,644 respondents.



#கேஎஸ்ஆர்போஸ்ட்

 #கேஎஸ்ஆர்போஸ்ட்

AUG 28