Wednesday, September 16, 2026

#Modi_tamil #tirukural #BRICS

 #Modi_tamil #tirukural #BRICS

————————————- டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் முடிந்து இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் டெல்லிக்கு வர இருக்கிறார்கள். ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்ட ரஷ்ய அதிபர் புடினிடம் நமது பிரதமர் மோடி அவர்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்து அவரை வரவேற்றார். திருவள்ளுவரின் உருவப்படம் பொறித்த முகப்புடன் திருக்குறள் எனும் வார்த்தையைச் சொல்லி இது எங்கள் நாட்டின் மிகச்சிறந்த நீதி நூல் என்று பெருமைப்படுகிறார் மோடி! அப்படிச் செல்லும் இடங்களில் எல்லாம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையும் தமிழ் மொழியின் சிறப்பையும் பேசி வரும் மோடி அவர்களின் தமிழ் பற்று அல்லது தமிழர்கள் குறித்த அவரது சிந்தனை வளர்ச்சி எவ்வளவு தூரம் அவருக்குள் நிறைந்து இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்கே தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்து தங்கள் சுய லாபத்திற்காக மொழியை பயன்படுத்தி சுரண்டிக் கொழுத்தவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? எதுவும் இல்லை! தமிழில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை ஒருபோதும் இங்கு அது மதிப்பைப் பெற முடியாது என்று சொல்லிப் பல விதமான மொழிப் பாசிசத்தின் கீழே மக்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்! ஆனால் வடநாட்டில் எங்கோ குஜராத்தில் பிறந்த மோடி அவர்கள் தமிழையும் தமிழ் மொழியையும் எங்களுடைய இந்திய தேசத்தின் பெருமைமிக்கக் கலாச்சார நாகரிகங்களைக் கொண்டது என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகிறார்! மட்டுமல்லாமல் வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதிக்கான இருக்கை ஒன்றையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்! தமிழ் மொழியின் தொன்மை மீதும் சங்க இலக்கியங்கள் குறித்த மதிப்பும் அவருக்கு உண்டு! இன்றைக்கு அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டை மோடி அவர்கள் தன் முயற்சியால் கூட்டி இருப்பது இந்தியராகிய நமக்கு பெருமை தரும் விஷயம்! சீனா ரஷ்யா வளைகுடா நாடுகள் எகிப்து சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலநாட்டுத் தலைவர்களும் இன்றைக்கு டெல்லிக்கு வருகை தருகிறார்கள். இந்த நேரத்தில் காந்தாரி பொறாமையால் தன் வயிற்றில் அம்மிக் குழவியைக் கொண்டு குத்திக் கொண்டது போல ப சிதம்பரம் இந்த பிரிக்ஸ் மாநாட்டால் என்ன பயன் இந்தப் பயன் அந்தப் பயன் என்று பேசிக்கொண்டு வாயில் அடித்துக் கொண்டு அங்காலாய்க்கிறார். பெரிய புத்திசாலி போல நினைத்துக் கொண்டு அவர் பேசிவந்த காலமெல்லாம் மலையேறி விட்டது! அவரால் தமிழ்நாட்டுக்கு ஒரு பலனும் இதுவரை இல்லை! வைகோவும் பா சிதம்பரமும் நாடாளுமன்றத்தின் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் எல்லாம் அவர்கள் நடத்தையால் படு கேவலமாக சீரழிந்து விட்டது! உலக நாடுகளுடன் நல் உறவுகளை பரிவர்த்தனை மதிப்புகளை வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளைச் சீர்படுத்தவும் பன்னாட்டு அரசியல் அமைப்புகளுக்கு அப்பால் நல்லுறவுகளைப் பேணிக்கொள்வதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு சர்வதேச சூழல் அமைப்பை இணக்கமாக ஏற்படுத்தித் தருவதன் மூலம் பெரும் வல்லரசு நாடுகளில் இருந்து அவற்றின் அதிகாரத்திலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பதையும் உள்ளடக்கித் தான் இந்த பிரிக்ஸ் மாநாடு நடத்தப்படுகிறது!. இந்த பிரிக்ஸ் மாநாடு 2001 முதல் துவங்கி; காங்கிரஸ் ஆட்சியில் காலத்தில் இருந்தது தானே!! ப சிதம்பரம் புத்தி ஏன் இப்படி வேலை செய்கிறது! காங்கிரஸ் நடத்தி இருந்தால் நல்லது! பாஜக நடத்தினால் கெட்டது! என்ன விதமான சார்பு நிலைப் புத்தி என்று தெரியவில்லை! ப சிதம்பரம் என்ன யோக்கியரா? காங்கிரஸ் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி! தோல்வியுற்றால் வக்கீல் தொழிலைப் பார்க்க போய்விடுவார்!? இவர் கட்சிக்கும் நாட்டுக்கும் என்ன பண்ணி இருக்கிறார் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் ஈழத் தமிழர்களை அடித்தது தான் இவருடைய வரலாற்றுச்செயல்! All roads lead to Rome என்பதற்கு இணங்க உலகின் பன்னாட்டுத் தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கப் போகிறார்கள்! இதை பாஜக தலைமையிலான மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக பல இணக்கமான நல்ல முடிவுகளுக்கான துவக்கமாகவும் ஆரம்பித்து இருக்கிறது. மோடி தன்னுடைய ராஜ்ய பரிபாலனத்தில் மேலும் ஒரு புதிய மகுடத்தைச் சூட்டுகிறார். சர்வதேச நாடுகளுடன் நல்லுறவையும் மதிப்பையும் மரியாதையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் தான் அந்த பிரிக்ஸ் மாநாடு இந்திய தேசத்தின் தலைமை பீடமான டெல்லியில் கூடுகிறது!தேசப்பற்றும் அதன் எதிர்காலம் குறித்த நல்லெண்ணம் உள்ளவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய எதையாவது பேசிக்கொண்டு குட்டையைக் குழப்பக் கூடாது!

No comments:

Post a Comment

SEP 12