Tuesday, September 8, 2026
#இந்தியகார்ப்பரேட்உலகின் ‘# ‘#சிம்பிள்வெடிங்..!’
‘#சிம்பிள்வெடிங்..!’
ஒரு மிடில் கிளாஸ் கல்யாணம் என்றாலே இன்னைக்கு பிரீ-வெட்டிங் ஷூட், ட்ரோன் கேமரா, பல லட்சம் வாடகையில் மண்டபம் என ஊரைக் கூட்டி பந்தா காட்டினால்தான் பலருக்கும் தூக்கமே வருகிறது.
உலகப் பணக்காரர்கள் வீட்டு விசேஷம் என்றால் கேட்கவே வேண்டாம்; பல நூறு கோடிகளைத் தண்ணீராக இறைப்பார்கள்.
ஆனால், இந்தியாவின் இரு பெரும் பாரம்பரியத் தொழில் சாம்ராஜ்யங்கள் சம்பந்தம் கலக்கும் போது என்ன நடந்திருக்கும்?
மாப்பிள்ளை யாருன்னா டாடா குழுமத்தின் ‘ஸ்டார் பஜார்’ பிசினஸை வெற்றிகரமாக நடத்தும் நெவில் டாடா (தற்போதைய டாடா டிரஸ்ட் தலைவர் நோவல் டாடாவின் ஒரே மகன்). பொண்ணு யாருன்னு கேக்குறீங்களா 130 ஆண்டு பாரம்பரிய கிர்லோஸ்கர் குழுமத்தின் ஒற்றை வாரிசான மானசி கிர்லோஸ்கர் (தற்போதைய டொயோட்டா கிர்லோஸ்கரின் துணைத் தலைவி).
இவர்கள் நினைத்திருந்தால், உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு தனித் தீவையே வாடகைக்கு எடுத்து, உலகமே வாய் பிளக்கும்படி பிரம்மாண்டமாக கல்யாணம் பண்ணியிருக்க முடியும்.
ஆனால்,
2019-ஆம் ஆண்டு, தெற்கு மும்பையில் உள்ள டாடாவின் வீட்டில், எந்த ஆடம்பரமும் இன்றி மிக மிக எளிமையாக ஒரு பதிவுத் திருமணம் (Civil Ceremony) செய்துகொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஊடகங்களின் கேமரா வெளிச்சம் இல்லை, பிரம்மாண்ட செட்டுகள் இல்லை. மறைந்த இந்தியத் தொழில்துறையின் பிதாமகன் ரத்தன் டாடா நேரில் வந்து இந்த இளம் தம்பதியை அமைதியாக வாழ்த்திவிட்டுச் சென்றார்.
ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், இவர்களின் கவனம் முழுவதும் அடுத்தகட்ட பிசினஸிலும், சமூக சேவையிலும்தான் (மானசி நடத்தும் 'Caring with Colour' தொண்டு நிறுவனம்) இருக்கிறதே தவிர, ஊருக்குப் பந்தா காட்டுவதில் இல்லை.
உண்மையான பணக்காரர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் எளிமையில்தான் காட்டுவார்கள்; ஆடம்பரத்தில் அல்ல. ஆடம்பரம் என்பது பெரும்பாலும் புதிதாகப் பணம் பார்த்தவர்களின் மனநலப் பிரச்சினை என்பதை டாடா - கிர்லோஸ்கர் குடும்பம் நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
#simplewedding
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment