Tuesday, September 22, 2026

#காவரிப்பிரச்சினையில் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் அதை அவர் கையாண்ட விதம் குறித்து இப்பொழுது வி ஐ டி கோ விஸ்வநாதன் குறிப்பிட்டுக் கூறுகிறார்!

 #காவரிப்பிரச்சினையில் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் அதை அவர் கையாண்ட விதம் குறித்து இப்பொழுது வி ஐ டி கோ விஸ்வநாதன் குறிப்பிட்டுக் கூறுகிறார்! 1980ல் டெல்டா மாவட்டங்களில் பெரும் தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்ட போது எம்ஜிஆர் திடீரெனக் கோயம்புத்தூரில் இருந்து கர்நாடக முதல்வர் ஆர் குண்டூராவின் பெங்களூர் இல்லத்திற்கு நேரில் சென்றார்! அவரிடம் தமிழக விவசாயிகளின் துயரத்தைக் கூறினார் எம்.ஜி.ஆர்! அதன் அடிப்படையில் நிலைமையை உணர்ந்த குண்டுராவ் அவர்கள் உடனடியாக நீரைத் திறந்து விடச் சம்மதித்தார். 1986 இல் சம்பாப் பயிருக்கு கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டபோது எம்ஜிஆர் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவை முதலில் பெங்களூருக்கு அனுப்பிப் பின்னர் தானே நேரில் சென்று கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ணஹெக்டேவைச் சந்தித்தார்! அப்போது அவருக்கு ஹெக்டே ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுக்க எம்ஜிஆருக்கு விக்கல் ஏற்பட்டது! அது சென்னையின் தாகத்தைப் பிரதிபலிப்பதாக எம்ஜிஆர் குறிப்பிட்ட உடனே 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட்டார்! மாநிலங்களுக்கான சுமுகமான உறவைப் பேணும் வகையில் 1986 ல் கர்நாடகாவின் வறட்சி நிவாரண நிதிக்கு தமிழகத்தின் சார்பில் எம்ஜிஆர் ரூபாய் 15 லட்சம் வழங்கினார்! பிறகு காவிரி நீர் ஆணையம் அமைக்க கோரிக்கையும் அளித்தார்! அது அமைந்ததால் தான் இன்று தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சனை பெருமளவு வெடிக்காமல் இருக்கிறது! இதைத்தான் கோ விஸ்வநாதன் இன்றைய ஆட்சி முறைகளை விமர்சிக்கும் போது குறிப்பிடுகிறார். தானாடா விட்டாலும் தன்சதை ஆடும் என்கிற உண்மைக்கு ஏற்ப மக்களின் தாகத்தையும் விவசாயிகளின் கண்ணீரையும் உணர்ந்த எம்ஜிஆர் அது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரில் சென்று இதனைச் செய்து முடித்தார்.

கடந்து போன ஆட்சியாளர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக் கெல்லாம் அது ஒரு தகுந்த பாடமாக இருந்திருக்க வேண்டும்!அதை இப்போதெல்லாம் யார் உணர்ந்து செய்கிறார்கள்!? மனிதாபிமான எண்ணங்கள் இருப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால்தான் அது சிறப்பாக அமையும் என்பதற்கு அக்காலத்தில் எம்ஜிஆர் எடுத்த அந்த நடவடிக்கை வரலாற்றில் மிக முக்கியமானது. நான் அறிந்த வகையில் காவிரிப் பிரச்சனையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தண்ணீரைப் பெற்று தந்தவர் எம்ஜிஆர் மட்டும்தான்.! ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் குதிரை பேரங்கள் நடந்து கொண்டிருக்கிற இந்த நிலையில் இந்தத் தமிழ்மாநில நலன்களைக் குறித்து இவர்களுக்கு யோசிக்க நேரம் இருக்கிறதா!? கோபுரத்தில் அமர்ந்து விட்ட குப்பைகள்! #CauveryWater #காவேரி #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!