காமம்தான் ஆரம்பத்திலிருந்து இன்றளவும் உலகத்தை ஆட்சி செய்யும் சக்தியாக இருக்கிறது. கூடல் என்பது மனிதர்க்குக்கான விதிமுறை மட்டுமல்லாது உலகின் சகல உயிர்களுக்கும் இயல்பாக இருக்கிறது. மிருகம், பறவை, தாவரம்,மனிதன் என்று இடையறாது எதுவோ எதனுடனோ கூடல் கொண்டிருக்கிறது.இவ்வுலகின் அடையாளம் கூடல். கூடலின் ஆதாரம் காமம். காமமே இவ்வுலகை ஆளுகிறது. ஆளுவது எதுவோ அதைப் புரிந்து கொள்ள மறுத்தால் ஆளுபவர்க்கும், ஆளுமைக்கு ஆட்படுவர்க்கும் பெரிய மோதல் ஏற்பட்டுவிடும். வாழ்க்கை நிம்மதியற்று போகும். எதைப் பிரியமாய் வரவேற்க வேண்டுமோ அதை வெறுக்க அது பல்வேறு ரூபத்தில் தாக்கி அடிமைப்படுத்தும். தன் மீது நம்பிக்கை இல்லாதவரே காமத்தை வெறுத்து இழிவு படுத்தி வெளியே பேசியும், உள்ளே மிக விரும்பி இரட்டை வாழ்க்கை வாழ்வார்கள். இது நேராதிருக்க காமம் என்ன என்பதை இளம் வயதிலேயே புரிய வைக்க வேண்டும். இந்த உணர்வுகள் நல்ல குழந்தைகள் பெறுவதன் பொருட்டே என்று விளக்க வேண்டும். காமம் அனுபவிக்க அமைதி தேவை. அமைதி என்பது பயமற்று இருத்தல்.. எப்போது பயம் போகும். எதுவும் முறையாக இருந்தால்.,கணவன், மனைவி இடையேதான் இது சாத்தியம். காமத்தை நன்கு அனுபவிக்க உண்மையான பிரியம், பரஸ்பர அக்கறை உதவி செய்யும். காமமே இவ்வுலகை ஆளுகிறது. எது ஆளுகிறதோ அதை அறிவதே நல்லது. வாழ்வில் வெற்றி பெற வேண்டும்மெனில் காமம் பற்றி தெளிவோடு இருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment