Tuesday, June 30, 2026

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

 பிறந்த பூமியின் மண்வாசனை….

சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…



வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையால் பதனம் செய்து தன் கோபம் முழுவதையும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும்.

 வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையால் பதனம் செய்து தன் கோபம் முழுவதையும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும். யார் அவமானப்படுத்தினாா்கள், எப்போது அவமானப்படுத்தினாா்கள் என்பதை மறக்கவே கூடாது. அது பற்றி அடிக்கடி யோசிக்க ஏன் அவமானப்பட்டோம் என்பது தெரிய வரும். ஏன் அவமானப்பட்டோம் என்பது யோசிக்க தன் குறை நிறை தெளிவாகத் தெரியும். குறைகள் புரியும் போது, அதை நிறையாக்கி கொள்ளும் வழியும் தெரியும். குறைகளைந்து நிறையாக்கி கொள்ளும் வேலையைத்தான் ஒருவன் இடைவிடாமல் செய்ய வேண்டும். எந்நேரமும் புத்தி வேலை மீதே இருக்க, வேறு சுகங்களை மனம் தேடாது எந்நேரமும் வெற்று பாராட்டுகளை விரும்பாது என்ன செய்தால் ஜெயிக்கலாம் என்பதே இடைவிடாது சிந்தனையாக உறக்கத்திலும் அதே நினைவாக இருக்க வேண்டும்…..

“கிடைத்த சோபாவில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்.”

 “கிடைத்த சோபாவில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்.”

இன்றைக்கு த வெ க வின் கூட்டணியில் இருப்பவர்கள் அதில் சேர்ந்தவர்கள் தங்களை நியாயப்படுத்த ஆளாளுக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். அது குறித்து த வெ கவும் தனது நிலைப்பாட்டைச் சொல்கிறது. சரி அது அவர்களின் கூட்டணி தர்மம். சிபி ஐ சிபிஎம் போன்ற இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை யாரிடமும் காசு வாங்காமல் வேலை பார்ப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் ஏறக்குறைய மூன்று நான்கு முறை திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் செலவிற்கு திமுகவில் இருந்து பணம் வாங்கிப் பிறகு தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள். சிபிஎம் ஐப் பொறுத்த வரையில் அதனுடைய இலக்கிய பிரிவு என்று சொல்லுகிற த மு எ க ச ஆட்கள் தான் ஏறக்குறைய திமுக ஆட்சியை நடத்தினார்கள்.அவர்கள் தான் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையில் இலக்கிய அரசியல் பொருளாதார கருத்துக்கள் என்ற பெயரில் முட்டுக் கொடுத்தார்கள். புத்தக கண்காட்சிகள் புத்தகத் திருவிழாக்கள் இவர்களது புத்தகங்களை அரசு செலவில் அச்சிட்டுக்கொள்வது இவர்கள் சொல்பவர்களுக்கு விருது என்றெல்லாம் மேடைக்கு மேடை கொண்டாடினார்கள் விழா எடுத்தார்கள். இப்போது சிபிஎம் க்கு திமுக கசக்கிறதா? ஆடத் தெரியாமல் தெருக்கோணல் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் போல. கலைஞருக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன் ஸ்டாலினை நான் காப்பாற்றுவேன் துணையாக இருப்பேன் போர்வாளாக இருப்பேன் தோளாக இருப்பேன் அவருக்குப் பாதுகாவலனாக இருந்து வழிநடத்துவேன் என்று காஞ்சிபுரத்தில் பேசியவர் வைகோ! தொடர்ந்து திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என்று சொன்னால் இந்த தமிழ் தேசியம் பேசுபவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னார். அவர்கள் திராவிடத்தைகாலி செய்வதற்கே தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே ஏமாற்றுகிறார்கள் என்றும் சொன்னார். அதன் அடிப்படையில் திமுக அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆனால் இப்போது வந்து அதிமுகவும் திமுகவும் சேர்வது என்ன வகையில் நியாயம் என்று கேட்கிறார். திராவிடத்தை அழிப்பதற்காக வேலை செய்கிறார்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று சொன்னதெல்லாம் பம்மாத்தா? பதவி சுகமா? இப்படி எல்லாம் சொன்னவர் அதிமுக திமுக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அது எப்படி சரியாகும் என்று இப்போது வந்து கேட்கிறார்!. அப்போது ஒரு பேச்சு!இப்போது ஒரு பேச்சு! இது என்ன அரசியல் தார்மீகம் என்று தெரியவில்லை.! இவர் திமுக கூட்டணியில் நின்ற போது இரண்டு எம்எல்ஏக்கள் உதய சூரியன் சின்னத்தில் நின்றவர்கள் த வெ க வில் இணைய மறுத்து திரும்பவும் திமுகவிற்கே போய்விட்டார்கள். இவர் மட்டும் தவெகவில் சேர்ந்து கொண்டு குதிரை பேரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். குதிரைபேரம் பத்தாதா ஒட்டக பேரம் என்று ஒரு புதிய வார்த்தையை வேறு சொல்கிறார். ஒட்டகபேரம் என்று எங்கே இருக்கிறது? ஒட்டகம் மெதுவாக டல்லாக நடக்கும். ஆனால் ஹார்ஸ் பவர் என்கிற குதிரை பொதி சுமந்தாலும் மிக வேகமாகப் பாயும். ஆக அது வேறு இது வேறு! என்ன அர்த்தத்தில் நிருபர்களிடம் பேசுகிறார் விளங்கவில்லையே ? கேள்வி கேட்பவர்களிடம் அட மென்ட்டாக உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று பதட்டத்துடன் கோபிக்கிறார். என்ன கோபித்தாலும் நீங்கள் இந்த பேரத்தில் இருக்கிறீர்கள் என்று அவர்கள் எதிர்வினை செய்கிறார்கள். மதி முக வில் மிச்சமாகி த வெ க வில் இன்று வந்து இணைய இருக்கும் இரண்டு எம்எல்ஏ களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் மீண்டும் நிறுத்தினால் நானே வந்து பிரச்சாரம் செய்து அவர்களை ஜெயிக்க வைப்பேன் என்று விஜய் சொன்னதாகச் சொல்லுகிறார். ஏறக்குறைய மதிமுகவை இப்படித்தான் வைகோவே முடித்து வைத்துவிட்டார். இதன் மூலம் இன்னமும் அவரை நம்பிக் கொண்டிருக்கும் சிலருக்குப் பாடம் கிடைத்திருக்கும். பேச்சில் தெளிவும் சுத்தமான வாக்குறுதியும் அவரிடம் இல்லையே? கண்டபடி உளறிக்கொண்டு அல்லவா இருக்கிறார். வாசல் காவலுக்கு வேலை கேட்டு நிற்பது போல இருக்கிறது அவரது நிலைமை. இவர் இத்தனை நாள் எங்கிருந்தாராம் பத்திரிகையாளர்களைக் கேட்கிறார்! நீங்கள் திமுக சார்பில் பேசிக்கொண்டு வந்து என்னிடம் கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். நான் என்னும் அந்த மனப்பான்மை அவருக்கு கை வந்த அதிகாரம்! அந்தப் பித்தம் தெளியாமலே கண்டபடி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுகிறார். நேற்று வரை நாங்கள் எல்லாம் திமுக என்று சொன்னவர் இன்று திமுக கரப்சன் பார்ட்டி என்கிறார். நீங்கள் தேர்தலுக்கு பணம் வாங்கிவிட்டு அதை கரப்க்ஷன் என்று சொல்வது என்ன வகையான புத்திசாலித்தனம். எல்லாவற்றையும் மறைப்பதற்காக உளறிக் கொட்ட கூடாது. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் உங்களுடைய சுயநலமும் நோக்கமும் தெரிந்துதான்

இருக்கிறது. இப்படி ஆனதன் மூலம் நீங்கள் ஆரம்பித்த கட்சியைக் காவு கொடுக்கிறீர்கள்.

 இருக்கிறது. இப்படி ஆனதன் மூலம் நீங்கள் ஆரம்பித்த கட்சியைக் காவு கொடுக்கிறீர்கள்.

இனி உங்களை யார் தான் நம்பப் போகிறார்கள் வைகோ!? கூலிக்கு நாங்கள்! அறுவடைக்கு நீங்கள்!! என்கிற இந்தப் போக்கு இனிச்செல்லாது அதேபோல் ஐ யு எம் ல் இருந்து 60 ஆண்டுகளாகத் திமுகவை ஆதரித்து விட்டு இப்போது அதைத் தனியாக விட்டு விட்டுச் செல்வதில் என்ன நியாயம் இருக்கிறது!? திமுகவில் இருந்தபோது உங்களை தூக்கித்தான் பிடித்தார்கள் கிடைக்கும் வரை இருந்துவிட்டு இப்போது தவெகவை தூக்கிப் பிடிக்க போகிறீர்கள். த வெக நாளைக்கு இல்லை என்று ஆகிவிட்டால் வேறு கட்சிக்குப் போவீர்கள். அற்ற குளத்து அரு நீர்ப் பறவை என்பார்கள் சரியாகத்தான் இருக்கிறது. இவ்வளவு குழப்பமும் நிதானமின்மையும் அவரிடம் வெளிப்படுவது சரியானதாகத் தோன்றவில்லை. த வெ கவுடன் இணைவதற்கு எல்லோரும் தங்கள் கொள்கைப் பிடிப்புகள் தான் காரணம் என்று சொல்வதை நினைக்கும் போது சிரிப்பாய் தான் இருக்கிறது .! முட்டை விடும் கோழிக்கு தான் வலி தெரியும் பொரித்து சாப்பிடும் வைகோ அவர்களுக்கு என்ன தெரியும் . அகலக்கால் வைக்கும் வைகோ அவர்களுக்கு இது தரமான அடி

குதிரை பேரம்…

 .

குதிரை பேரம்… கழுதை பேரம்….. அது என்ன ஒட்டகம் பேரம்! ஒட்டகம் என்ன செய்தது⁉️

kIKI Tableconcept atheist tamilbharath REEL

 kIKI Tableconcept atheist tamilbharath REEL 

#TamilPoliticalNews

 #TamilPoliticalNews

#CMVijaySpeech KS Radhakrishnan Exclusive Interview | CM Vijay vs Udhayanidhi Stalin | TN Assembly 2026 | Political Analysis Tamil Nadu politics witnessed intense debates and dramatic developments during the latest Assembly session. In this exclusive interview, political analyst KS Radhakrishnan shares his views on CM Vijay's Assembly speech, the opposition's questions, Udhayanidhi Stalin's role as Opposition Leader, Assembly proceedings, Speaker JCD Prabhakaran's decisions, and the major political moments that grabbed attention. The interview explores several key developments and controversies that emerged from the Assembly session and their impact on Tamil Nadu politics. Key Topics Discussed:

#திருக்கழுக்குன்றம்

 #திருக்கழுக்குன்றம்




மாற்றி மாற்றி பேசுவது ,

 மாற்றி மாற்றி பேசுவது , புகழ்வது வசை பாடுவது வைகோவின் character

அந்தர்பல்டி அடிப்பதில் #வைகோ வல்லவர் facebook.com/share/v/1CdU6q

மசூதியாக மாற்றப்பட்டக் கோவில், மீண்டும் கோவிலாக புணரமைக்கப்பட்ட வரலாறு...

 மசூதியாக மாற்றப்பட்டக் கோவில், மீண்டும் கோவிலாக புணரமைக்கப்பட்ட வரலாறு...

மத நிறுவனங்களும் விஜயநகர ஆட்சியின் விரிவாக்கமும்.. 14-ஆம் நூற்றாண்டின் முதல் பாதி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற, சமூகக் குழப்பங்கள் நிறைந்த காலகட்டமாக இருந்தது; தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதிகார மையம் மதுரைக்கு மாறியது; பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர், ஆனால் அது குறுகிய காலமே நீடித்தது. ஒரு காலத்தில் பாண்டியர்களின் அதிகாரம் தமிழகம் முழுவதிலும் பரவி, ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மற்றும் நெல்லூர் வரை சென்றிருந்தது. இருப்பினும், உள்நாட்டுப் பூசல்கள், ஒற்றுமையின்மை, குறுநில மன்னர்களின் எழுச்சி மற்றும் வெளிநாட்டுத் தாக்குதல்கள் ஆகியவை ஒரு பண்டைய ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இந்த வெளிநாட்டுத் தாக்குதல் என்பது, தென்னிந்திய அரசியல் வானில் தோன்றிய புதிய இஸ்லாமிய சக்தியால் நிகழ்ந்தது. தேவகிரி யாதவர்கள், துவாரசமுத்திர ஹொய்சாளர்கள் மற்றும் வாரங்கல் காகதீயர்கள் எனத் தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய இந்து ராஜ்ஜியங்களையும் அச்சுறுத்திய இந்த புதிய சக்தி, தில்லி சுல்தான்களுடையதாகும். இது 1310-ல் அல்லாவுதீன் கில்ஜியால் அனுப்பப்பட்ட மல்லிக் காபூரால் தொடங்கியது. தேவகிரி மற்றும் துவாரசமுத்திரத்தைத் தாக்கி சூறையாடிய பிறகு, அவன் தமிழகத்திற்குள் புகுந்து பாண்டியர்களின் தலைநகரான மதுரை வரை சென்றான். காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், மதுரை ஆகிய இடங்களில் அவன் நிகழ்த்திய கொள்ளைகளும் நாசவேலைகளும், அவன் எடுத்துச் சென்ற அபரிமிதமான செல்வங்களும் அக்கால காலவரிசைப் பதிவுகள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. மல்லிக் காபூருக்குப் பிறகு, துக்ளக்குகளின் கீழ் 1314 மற்றும் 1323-ல் இரண்டு படையெடுப்புகள் நிகழ்ந்தன. இதன் விளைவாக, பாண்டிய நாடு 'மபர்' (Ma'bar) என்று அழைக்கப்பட்டு, துக்ளக் பேரரசின் 23 மாகாணங்களில் ஒன்றாக மதுரை ஆளுநரின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஜலாலுதீன் அஹ்சன் ஷா மதுரையின் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்னர், அவன் கிளர்ச்சி செய்து 1335-ல் மபர் சுல்தானானான்; இந்த சுல்தானகம் 1371 வரை நீடித்தது. சுல்தான்களின் இந்த ஆட்சிக்காலம் பயங்கரமான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை நிறைந்ததாக இருந்தது. மதுரையில் இருந்த மொராக்கோ நாட்டுப் பயணி இபின் பதூதா, சுல்தான் கியாசுதீனின் அட்டூழியங்களைப் பற்றி நேரில் கண்டறிந்த தகவல்களை நமக்குத் தந்துள்ளார். அவர் கூறுகிறார்: "இது ஒரு வெட்கக்கேடான நடைமுறை, வேறு எந்த மன்னரும் இதைச் செய்வதை நான் கண்டதில்லை. இதனால்தான் கடவுள் அவனது முடிவை விரைவுபடுத்தினார்". மதுரை சுல்தானின் அதிகாரம் எதிர்க்கப்படாமல் இருக்கவில்லை. ஹொய்சாள மன்னரான மூன்றாம் பல்லாளர் 1342-ல் கர்நாடகத்திலிருந்து ஒரு பெரும் படையைத் திரட்டி கண்ணனூர்-குப்பம் போரில் சுல்தானின் படைகளைத் தோற்கடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சுல்தானால் முறிக்கப்பட்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அவர் ஏமாற்றப்பட்டார். சுல்தான் இந்துப் படைகளை ஆச்சரியமாகத் தாக்கி அழித்தார். மூன்றாம் பல்லாளர் சிறைபிடிக்கப்பட்டு, மதுரைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்; அங்கு அவரது உடல் மிகவும் இழிவுபடுத்தும் வகையில் அரண்மனை வாயிலில் தொங்கவிடப்பட்டது. பல்லாளருக்கும் மதுரை சுல்தானுக்கும் இடையிலான போராட்டத்தைப் பற்றி இபின் பதூதா இவ்வாறு விவரிக்கிறார்: "கியாசுதீனின் அரசுக்கு அருகில், முக்கியமான இந்து மன்னர்களில் ஒருவரான பல்லாளதேவரின் ராஜ்ஜியம் இருந்தது. அவனது படையில் 1,00,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர், அவர்கள் முஸ்லிம் படையில் 6,000 வீரர்கள் மட்டுமே இருந்த மபர் நாட்டை வெல்ல விரும்பினர். குப்பம் மோதலில், பல்லாளதேவர் சுல்தானின் படைகளை முறியடித்தார், அவர்கள் தங்களின் தலைநகரான மதுரைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. பல்லாளர் அவர்களை மதுரைக்குத் திரும்பிச் செல்லச் சொன்னால், தான் தலைநகரை விட்டு விலகி இருப்பதாகக் கூறி அவர்களுக்குப் பாதுகாப்பான வழி தருவதாகக் கூறினார். எனவே, பல்லாளர் அவர்களுக்கு 14 நாட்கள் போர்நிறுத்தம் வழங்கினார். சுல்தானும் அவனது ஆட்களும் போர்நிறுத்தத்தை மதிக்காமல் கண்ணனூரில் இருந்த ஹொய்சாளப் படைகளைச் சூழ்ந்து கொண்டு ஆச்சரியமாகத் தாக்கினர். பல்லாளர் சிறைபிடிக்கப்பட்டார். அவன் அவனிடம் இருந்த அனைத்துச் செல்வங்களையும் பறித்துக்கொண்டான், பல்லாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டுத் தோலுரிக்கப்பட்டார். வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது தோல் மதுரை சுவரில் தொங்கவிடப்பட்டதை நான் நேரில் கண்டேன்". இதே காலகட்டத்தில், 1336-ல் விஜயநகர ராஜ்ஜியம் நிறுவப்பட்டது தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சுல்தானின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து நிலத்தை….2

3) உலப்பாடு (சித்தூர் மாவட்டம்) - அல்லானாதர் என்ற அறிஞரின் அறிவுரைப்படி, செல்வராய பெருமாள் கோயிலுக்குப் புதிய கல் விக்கிரகத்தை கம்பணர் அமைத்தார்.

 3) உலப்பாடு (சித்தூர் மாவட்டம்) - அல்லானாதர் என்ற அறிஞரின் அறிவுரைப்படி, செல்வராய பெருமாள் கோயிலுக்குப் புதிய கல் விக்கிரகத்தை கம்பணர் அமைத்தார்.

கம்பணரின் இந்த நேரடிக் கொடைகளைத் தவிர, சோமப்ப தண்டநாயக்கர் மற்றும் அவரது மகன் கந்தராகுலி-மாரய்ய நாயக்கர், ஆனெகொந்தி விட்டப்பர், கோபனாராயர், சாளுவ மங்கு போன்ற அவரது அதிகாரிகளால் செய்யப்பட்ட எண்ணற்ற ஒத்த கொடைகளும் காணப்படுகின்றன. இந்த அதிகாரிகள் அனைவரும் போரிலும் நிர்வாகத்திலும் மிகவும் திறமையானவர்களாக இருந்தனர்; குமார கம்பணருடன் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். உதாரணமாக, சோமப்பா ஒரு சமஸ்கிருத அறிஞர் ஆவார். கோலாரில் உள்ள ஒரு கல்வெட்டு அவரைப் பற்றிக் கூறும்போது: "கம்பணரின் அமைச்சர், பெருந்தன்மையானவர், பல நற்பண்புகள் கொண்டவர், பல கல்வித் துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர், அரசியலில் திறமையானவர்" என்று வர்ணிக்கிறது. தமிழகத்தின் பல கோயில்களைப் புனரமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் கந்தராகுலி நாயக்கரும் சமமான புகழ்பெற்றவர். சம்புவராயருக்கு எதிரான கம்பணரின் வெற்றிக்கு இவரே பொறுப்பாவார், அதற்காக அவருக்கு 'ஜீவிதா' (jivita) என்று ஒரு கிராமம் வழங்கப்பட்டது. கம்பணரின் அதிகாரிகளின் குணங்கள் மற்றும் சிறப்புகளைப் புகழ்ந்து பல கோயில் சுவர்களில் (வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில்) அழகிய தமிழ் கவிதைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனெகொந்தி விட்டப்பன் ஒரு பிராமண அதிகாரி. கோயில்களில் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குமார கம்பணர் அக்டோபர் 1374-ல் ராமேஸ்வரம் மற்றும் திருப்புல்லாணிக்குச் சென்றார். அவர் அதற்குப் பிறகு விரைவில் காலமடைந்திருக்க வேண்டும், ஏனெனில் அவரது மகன் ஜம்மண்ண உடையார் (Jammanna Udaiyar) 1374 டிசம்பரில் அவரது ஆன்மாவின் அமைதிக்காக ஒரு சந்தி (Sandhi) விழாவை ஏற்படுத்தினார். மதுரைத்தல-வரலாற்றின்படி, 1371 முதல் 1402 வரை, கம்பணர், அவரது மகன் எம்பணா (ஜொம்மணா) மற்றும் அவரது மருமகன் பிரகாச உடையார் ஆகியோர் 33 ஆண்டுகளாக மதுரையை ஆட்சி செய்தனர். அவர்களின் ஆட்சியின் போது, அனைத்து சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கும் நகைகள் மற்றும் தினசரி வழிபாட்டிற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்தனர். தமிழகத்தில் விஜயநகர ஆட்சி அதிகார மையப்படுத்துதலைக் கண்டது. முதலாம் புக்கர், இரண்டாம் ஹரிஹரர், இரண்டாம் புக்கர், முதலாம் மற்றும் இரண்டாம் தேவராயர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் அவர்களின் ஆட்சி பலப்படுத்தப்பட்டது; எந்தவிதமான கடுமையான அச்சுறுத்தல்களோ அல்லது கிளர்ச்சிகளோ ஏற்படவில்லை. தமிழகத்தின் விஜயநகர நிர்வாகத்தில் தைரியமாக வெளிப்படும் ஒரு உண்மை, அது மிகவும் மையப்படுத்தப்பட்டது என்பதாகும். பெரும்பாலான மகாமண்டலேஸ்வரர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் பேரரசர் இரண்டாம் ஹரிஹரரின் கட்டுப்பாட்டின் கீழ் கண்டிப்பாக இருந்தனர். வரிகளை வசூலித்தல், அவற்றை அனுப்புதல், கோயில்களுக்கு அறக்கட்டளைகளைப் பெறுதல் போன்ற கிராம சபைகளுக்குப் பதிலாக, மகாமண்டலேஸ்வரர், பிரதானிகள், தண்டநாயக்கர்கள் போன்றவர்கள் அந்த இடத்தைப் பிடித்ததைக் கேட்கிறோம். ஆங்காங்கே சபைகளின் செயல்பாடுகளின் தடயங்கள் இருந்தாலும், அவை தீவிரமாகச் செயல்படவில்லை மற்றும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே தொடர்ந்தன. இவ்வாறு, விஜயநகர ஆட்சியானது மிக முக்கியமான காலகட்டத்தில், சுல்தான்களின் தவறான ஆட்சியிலிருந்தும் குழப்பமான சூழ்நிலைகளிலிருந்தும் தமிழகத்தை விடுவித்து, அரசியல் ஸ்திரத்தன்மையை அறிமுகப்படுத்தியது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத நிறுவனங்கள் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, கொடைகளால் வளப்படுத்தப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், விஜயநகர ஆட்சிக் காலம் தமிழகத்தில் அரசியல், சமூக மற்றும் மத ஒழுங்கை மீண்டும் உயிர்ப்பிக்கவும், புத்துயிர் பெறவும் உதவியது. கண்ணனூர் பொசாலேசுவரமுடைய நாயனார் கோயில் கண்ணனூர் என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள தற்போதைய சமயபுரம் ஆகும். இது ஹொய்சாளர்களின் இரண்டாம் நிலைத் தலைநகராக இருந்தது. இது ஒரு கோட்டையையும் கோயிலையும் கொண்டிருந்தது. மூன்றாம் பல்லாளர் சுல்தானின் படைகளைத் தோற்கடித்தார், ஆனால் பின்னர் நம்பிக்கைத் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டார். அக்கோயில் மசூதியாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, கம்பணரின் கவனம் அந்த இடத்தின் பக்கம் திரும்பியது. ஜூன் 28, 1372 தேதியிட்ட ஒரு கல்வெட்டு, மதுரை சுல்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு குமார கம்பணரால் மசூதியாக மாற்றப்பட்ட கோயில் மீண்டும் புனிதப்படுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் இதுபோன்ற மதமாற்றம் மற்றும் மீண்டும் புனிதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #விஜயநகரஆட்சி #vijayanagarrule




2)விடுவிப்பதையும், குழப்பத்திலிருந்து அமைதியை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு,

2)விடுவிப்பதையும், குழப்பத்திலிருந்து அமைதியை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, புதிய ஆட்சியாளர்கள் தங்களின் வீரமிக்க தளபதி குமார கம்பணரைத் தமிழகத்திற்கு அனுப்பினர். இந்த மாபெரும் பணியில் அவர் பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அவரது போர்கள் வெறும் அரசியல் வெற்றிகளாக மட்டும் அமையாமல், முந்தைய தசாப்தங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்து சமயம் மற்றும் கோயில்களின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்தன. இப்பணியில் அவர் தனது பல துணிச்சலான அதிகாரிகள் மற்றும் தளபதிகளால் திறம்பட உதவப்பட்டார். புதிதாக எழுந்த விஜயநகர அதிகாரத்தின் நோக்கங்களை நிறைவேற்றத் தமிழகம் ஒரு சிறந்த களமாக அமைந்தது. இதைச் செய்த விஜயநகர பிரதிநிதிகளில் முதலாவதாகக் கம்பணராயர் இருந்தார். அவர் மதுரை மற்றும் ராமேஸ்வரம் நோக்கிய அணிவகுப்பின் போது பெற்ற தொடர்ச்சியான வெற்றிகள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட கோயில்களைப் புதுப்பித்தல் மற்றும் நிறுத்தப்பட்ட வழிபாடுகளை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றுக்கும் பல கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. அவர் கோயில் பணியாளர்களுக்கிடையிலான தகராறுகளைத் தீர்த்து வைத்தார், மேலும் நிலங்கள், நகைகள், வரி விலக்குகள் போன்ற வடிவில் பெருமளவில் அறக்கட்டளைகளைச் செய்தார். அவர் வட ஆற்காடு மாவட்டம் வழியாகத் தமிழகத்திற்குள் நுழைந்தார், வரும் வழியெங்கும் மக்களுக்கு நம்பிக்கையையும் உதவிகளையும் அளித்தார். அத்தகைய நற்பணிகளின் சில குறிப்பிடத்தக்க உதாரணங்கள் இங்கே: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் திருப்பணி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் திருமேனியை மீண்டும் பிரதிஷ்டை செய்தது அவர் செய்த மிக முக்கியமான செயல்களில் ஒன்றாகும். முஸ்லிம் தாக்குதல்களின் போது ஸ்ரீரங்கம் கோயில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 'கோயிலொழுகு' (Koyilolugu) கூற்றுப்படி, பல பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே கொல்லப்பட்டனர். ஸ்ரீரங்கநாதரின் அழகான உற்சவர் திருமேனி பாதுகாப்பிற்காக அகற்றப்பட்டு, பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, சில ஆண்டுகளாகத் திருமலையில் வைக்கப்பட்டிருந்தது. கம்பணரின் வெற்றிகரமான போருக்குப் பிறகுதான், அவரது அதிகாரியான செஞ்சியின் தலைவன் கோபனார்யாவால் (Gopanarya) அந்தத் திருமேனி திருமலையிலிருந்து கொண்டு வரப்பட்டு ஸ்ரீரங்கத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 'கோயிலொழுகு' மற்றும் 'பிரபன்னாம்ருதத்தில்' (Prapannamrutam) குறிப்பிடப்பட்டு, ஸ்ரீரங்கத்தில் 1371-ஆம் தேதியிட்ட ஒரு கல்வெட்டாலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்தக் கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது: — "அஞ்சனாத்ரியிலிருந்து (திருப்பதி) இறைவனைக் கொண்டு வந்து, அதன் இருண்ட சிகரங்களின் பிரபலம் உலகிற்கு ஒளியைத் தருகிறது, சிறிது காலம் செஞ்சியில் அவரை வணங்கி, துலுக்கர்களைக் கொன்று, புகழுக்குக் கண்ணாடியான கோபனாராயர், ரங்கநாதரை லட்சுமி மற்றும் பூமி தேவியுடன் அமர்த்தி, தாமரையிலிருந்து பிறந்த பிரம்மாவைப் போல தினசரி சிறந்த வழிபாட்டை நடத்தினார்"*. மதுரை 'மதுரைத்தல-வரலாற்றின்' (Maduraittala-varalaru) கூற்றுப்படி, மீனாட்சி அம்மன் கோயில் வழிபாடு இன்றி மூடப்பட்டிருந்தது; கம்பணரின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகுதான் பொது வழிபாட்டிற்காக அது திறக்கப்பட்டது. திருக்கலக்குடியில் உள்ள ஒரு கல்வெட்டு, "கம்பண உடையார் தனது தெற்குப் பிரச்சாரத்திற்கு வந்து துலுக்கர்களை அழித்து நாடு முழுவதும் ஒழுங்கான அரசாங்கத்தை நிறுவினார். அனைத்துக் கோயில்களிலும் வழிபாடு பழையபடி மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் ஆய்வு மற்றும் மேற்பார்வைக்காகப் பல நாயக்கர்களை நியமித்தார்" என்று கூறுகிறது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இந்த புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலிலும் வழிபாடு நிறுத்தப்பட்டிருந்தது; கம்பணர் தாராளமான மானியங்களை வழங்கி, அங்கு வழிபாட்டை மீண்டும் தொடங்கினார். வரி விலக்கு மற்றும் பிற கொடைகள் தான் சென்ற வழியில், அவர் பல கோயில்களுக்குச் சென்று பல சலுகைகளையும் கொடைகளையும் அறிவித்தார். அவை தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக: பொன்பத்தி (தஞ்சாவூர் மாவட்டம்) - விற்றிருந்த பெருமாள் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக வரி விலக்கு; திருப்பக்குழி (செங்கல்பட்டு மாவட்டம், 1365) - விஜயராகவப் பெருமாளுக்கு கம்பணர் வழங்கிய நகை; வேடல் (வட ஆற்காடு மாவட்டம்) - நெசவு, நெல், அறுவடை போன்றவற்றின் மீதான அனைத்து வரிகளுடன் கூடிய சிவபெருமானின் கோயிலுக்கு ஒரு கிராமம் வழங்கப்பட்டது; திருக்கோயிலூர் (தென்னாற்காடு மாவட்டம், 1362) - வரி விலக்கு அளிக்கப்பட்ட கொடை; திருவடிகை (தென்னாற்காடு மாவட்டம், 1370) - வழிபாட்டிற்கான வரி விலக்கு அளிக்கப்பட்ட கிராமம்; திருவாமத்தூர் (தென்னாற்காடு மாவட்டம்) - கோயிலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட கிராமம்;…3

JUNE 29


 

பிரச்சினைகள் என்பது உலக வாழ்க்கையில் ஓர் அங்கம்..

 பிரச்சினைகள் என்பது உலக வாழ்க்கையில் ஓர் அங்கம்.. பிரச்சினைகள் இல்லாதவருக்கு தினசரி வாழ்க்கை நெடும்பாலைவனம்.. ஒவ்வோரு மணித்துளியும் மெல்ல நகர்வதாய் ஒரு நினைப்பு வரும்.. பிரச்சினைகள் வந்த பிறகோ நீண்ட நிதானமான அமைதிக்கு மனம் ஏங்கும்.. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் எந்த சுவராஸ்யமும் இல்லை.. இருக்கவும் இருக்காது..

JUNE 28


 

JUNE 28


 

⁉️

 ⁉️


#சூரியனைக்கண்டுநாய்கள்குலைக்கின்றன

 #சூரியனைக்கண்டுநாய்கள்குலைக்கின்றன

—————————————————— இரண்டாயிரத்துக்குப் பிறகு பிறந்த பயல்கள் சிலர் ! தவறாக நினைக்க வேண்டாம் அவர்களை அப்படித்தான் அழைக்க வேண்டி இருக்கிறது! இவர்களுக்கு என்ன அரசியல் வரலாறு தெரியும் அவ்வப்போது நடந்த சூழல்கள் குறித்த சிரமங்களில் உடனிருந்து அதைக் கடும் மன உளைச்சலோடு எதிர்கொண்டவர்களின் நிலைமையெல்லாம் தெரியுமா? நான் எலரையும் மதிப்பவன். எந்த விபரமும் தெரியாமல் விசுவாசப் புத்திகளை மட்டுமே வைத்துக் கொண்டு எனக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்களை நான் இப்படித்தான் அழைக்க முடியும். இன்றைக்கு வந்து எதையெதையோ பேசுகிறார்கள்! பின்னூட்டம் போடுகிறார்கள்! 1980 இல் இருந்து வைகோவுக்கும் எனக்குமான அரசியல் தொடர்பு - உறவு குறித்து யார் பேச முடியும்! யாருக்கு அந்த உண்மை எல்லாம் தெரியும்? அவருக்கு என்னைத்தெரிந்ந அவரை எனக்கும் தெரிந்த காலமெல்லாம் இருந்தது ! பிரபாகரன் தமிழ்நாட்டில் என்னோடு இருந்த போது அவருக்கு நான் தான் வைகோவை அறிமுகப்படுத்தி வைத்தேன். அதற்கு அப்புறம் தான் ஈழ பிரச்சனைகள் குறித்து அவர் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டார்.அதில் எனது பங்கும் பெரும்பான்மையாக இருக்கிறது! வைகோ இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் சென்ற போது அதற்கு முன்பாக வைகோவிற்கும் பழ.நெடுமாறனுக்கும் எந்தத் தொடர்பும் நட்பும் இல்லாத சமயத்தில் என்னால் அவரது உதவிகளின் மூலம் சகதி மிகுந்த single preferences வாக்குகளைப் பெற்று ராஜ்யசபா போனார். அதில் நான் கடும் முயற்சி எடுத்து அதன் பின்னணியில் இருந்தேன்.அந்த தேர்தலில் ஆற்காடு வீராச்சாமியும் திமுக சார்பில் போட்டியிட்டார். அதன் பிறகு 1996 இல் மதிமுக தேர்தலில் தோற்றபோது எல்லோரும் ஓடிப் போய் விட்டார்கள்! ஆனாலும் அலுவலகத்தைத்திறந்து தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தவன் நான் தான்! இதையெல்லாம் மறுக்க முடியாது! தான் விரும்பிப் படிக்கும் பைபிள் மீது சத்தியமாக அதை எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கும் உங்கள் வைகோவை கேட்டால் இதையெல்லாம் சொல்வார்! 2001 இல் வைகோவுக்கு எதிராக விமர்சனம் வைத்து பல ரகசியங்களை எனது கைபேசியில் கலைஞருக்கு நான் அனுப்பிவிட்டேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதில் கிஞ்சித்தும் என் தாய் மீது சத்தியமாக உண்மையில்லை. நான பெருமாளை வணங்குகிறவன். அந்த தர்மத்தின் அடிப்படையில் சொல்கிறேன்!இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. இந்த மோசமான அரசியலின் பல்வேறு சூழல் காரணமாக அதை உண்மை போல சிலர் சொல்லலாம்!ஆனால் அதில் உண்மை இல்லை! பொய் சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது பொழுது போக்காக இருக்கலாம்! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்கிற நிலைதான்.. ஆனால் வைகோ எம்பி ஆவதற்கும் நான் உழைத்த உழைப்பை இவர்களெல்லாம் செய்திருப்பார்களா? அறிந்திருப்பார்களா! அதற்கெல்லாம் எந்தக் கைமாறையும் வைகோ எனக்குச் செய்யவில்லை. அந்த எண்ணமும் அவருக்கு இல்லை.இதை அவர் வாசிக்கும் பைபிளின் மீது சத்தியமாகக் கேட்டால் அவர் ஆமாம் என்று தான் சொல்லுவார்.. அவருடன் சிலர் வந்திருக்கலாம். அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது! நலன் பெறுவதற்காக வந்தவர்கள்.!நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் என்னை மிகவும் பாழ்படுத்தி நிர்மூலமாக்கி விட்டார். அரசியலில் நான்வளர வேண்டிய சரியான பிராயத்தில் அவர் முடிவு எடுக்கத் தெரியாமல் அந்தக் கட்சிக்குப் போனது இந்த கட்சிக்குப் போனது இடைவெளிகளில் லாபி செய்வது என்ற வகையில் அவர் உருவாக்கிய அனைத்தும் இன்று வீணாகப் போய்விட்டது. இதைக் கலைஞரே என்னிடம் சொன்னார். நான் மீண்டும் திமுகவிற்கு போய் சேர்ந்த போது வைகோ பேச ஆரம்பித்து விட்டார். தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நான் பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பேன் என்று கலைஞரிடம் தான் சத்தியம் செய்ததாக எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்! அந்த ஜகஜாலம் எல்லாம் நமக்கு வராது! வைகோ அன்று : தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என புதுச கிளம்பிட்டாங்க …… திராவிடத்தை காப்பாத்த எல்லா பிரச்சினையும் மறந்து, திமுக, அதிமுக இனி ஒன்றுபட்டு( Unity) நிற்கவேண்டும். வைகோ இன்று : சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி அமைப்பதற்காக திமுக ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. உண்மையில் அத்தகைய நிலைபாடு இருந்திருந்தால், அது மிகப் பெரிய அரசியல் மோசடியாக ( political fraud) இருந்திருக்கும். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், அது வைகோ வால் மட்டுமே முடியும். இவரைப் போல வா? நான் எந்தக் கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அங்கு நலன்களை அனுபவித்து விட்டுப் பிறகு முதுகில் குத்தி விட்டு வெவ்வேறு இடங்களுக்கு தாவிக் கொண்டிருந்தேனா! இல்லை அந்தக் கட்சியிலிருந்து ஏதாவது ஆதாயம் பெற்று தந்திரமாக ஒதுக்கிக் கொண்டேனா? சென்னையில் இருந்த சொத்துக்களை எல்லாம் குறிப்பாக இசிஆரில் இருந்த ஐந்து ஏக்கர் நிலம் அண்ணா நகரில் வீடு

5….

 5….

களிமண்கள் நிறைந்த பிரதேசத்தில் கவிழ்க்கப்பட்ட ரதமாக செல்வாக்கு குப்புறக் கிடக்க... ஏன் எங்கள் ராஜதந்திரம் என்ற பட்டத்து யானை இந்தக் களிமண்கள் நிறைந்த பூமியில் அடி சறுக்கியது என்று அரசனும் தளபதியும் யோசித்து கை பிசைந்தபடி நிற்க... facebook.com/share/p/1GAPL7 #dmk #mdmk #vaiko #மதிமுக #வைகோ #tamilnadupolitics #தமிழகரசியல் #கேஎஸ்ஆர்போஸ்ட #ksrpost



பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…