எனது வேண்டுகோள்!
கர்நாடக அரசு ஜூன் மாதத்திற்கு உரிய ஒதுக்கீட்டு அளவான 9.19 டிஎம் சி மற்றும் ஜூலை மாதத்திற்கு உரிய ஒதுக்கீட்டு அளவான 31.24 டி எம் சி தண்ணீரை தமிழக -கர்நாடக எல்லையான பில்லு குண்டுலுவில் தமிழகத்திற்கெனத் திறந்து விடப்படும். மேகாதாட் அணையால் தமிழ்நாட்டிற்குள் காவிரி நீர் நுழையும் பிலிகுண்டுலுவிலிருந்து 4.5 கி.மீ.முன்பாகவே ஆற்றை மறிக்கும் வகையில் ..9,000 ஏக்கர் பரப்பு..ரூ.14,000 கோடியில் 67.16 டிஎம்சி கொள்ளளவு.. காவிரி ஆறு இருபுறமும் பிரம்மாண்டமான பாறை மலைகளுக்கு இடையே ஒரு குறுகிய, மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாய்கிறது. ஆடுகள் கூட இந்த மலையின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குத் தாண்டிவிடலாம் என்பதால் தான் இதற்கு "மேகதாது" (ஆட்டின் தாண்டுதல்) என்று பெயர். இந்த அணை கட்டப்பட்டு 67 டிஎம்சி தண்ணீர் தேங்கும்போது, சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவுள்ள அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும்..இதில் பெரும்பகுதி ""காவிரி வனவிலங்கு சரணாலயமும்"" அதை ஒட்டியுள்ள அடர்ந்த காப்புக்காடுகள் Reserve forest ஆகும். ஒரு ஏக்கர் அடர்ந்த காட்டில், முதிர்ந்த பெரிய,நடுத்தர மரங்கள் மற்றும் வளர்ந்து வரும் மரக்கன்றுகள் என அனைத்தும் தோராயமாக 100 முதல் 200 மரங்கள் வரை இருக்கும்.தோராயமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மரங்கள் வெட்டப்படவோ அல்லது நீரில் மூழ்கடிக்கப்படவோ வாய்ப்பு... தண்ணீரை உறிஞ்சி, காற்றில் ஈரப்பதமாக மாற்றி, 20 லட்சம் மரங்களை நீங்கள் வேரோடு சாய்த்தால், அங்கே மேகங்கள் எப்படி வரும்? மழை எங்கிருந்து பெய்யும்? நீங்கள் 9,000 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட்டையும், கம்பியையும் கொண்டு பிரம்மாண்டமாக ஒரு கான்கிரீட் சுவரைக் கட்டிவிடலாம். ஆனால், அந்த அணைக்குள் வந்து தேங்குவதற்குத் தண்ணீர் எங்கே ? 20 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில்:அந்தப் பிராந்தியத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும். பூமியின் வெப்பம் கிடுகிடுவென உயரும். மேகங்கள் மழையாகப் பொழியாமல் கர்நாடகாவைத் தாண்டி ஓடிவிடும்... #CauveryDelta #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment