#தவேக_திமுகவின்கார்பன்காப்பிதானே!
பெரியார் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு அறநிலையத்துறை அமைச்சராக இருப்பது என்ன வகையில் நியாயம்? இது முதல்வர் ஜோசப் விஜய்க்குத் தெரியாதா? எனக்குத் தெரிந்தவரை திராவிட அரசியலில் தினகரன் கேபி கந்தசாமி பி டி ஆர் பழனிவேல் ராஜன் ஆகிய இருவரும் தான் பெரியாரின் வழியிலான திமுகவில் இருந்தாலும் இந்து தர்மங்களைப் பற்றிய நிலைப்பாட்டோடு அதன் காரணகாரியங்கள் குறித்த அறிவோடு இருந்தவர்கள் எனலாம்.குறிப்பாகச் சொன்னால் இந்து பக்தர்களாகவே இருந்தார்கள்! இப்படியானவர்கள் இருந்த இடத்தில் தான் இன்றைக்கு இந்த விஜய் ஆட்சியில் ஒன்றுமே புரியாத வெறுமனே பதவி கிடைத்த ஆர்வக்கோளாறில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக்கொண்டு இந்து மத விரோத போக்கினையும் கடைப்பிடிக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராகி இருக்கிறார்.வெட்கக்கேடு! ஒரு பக்கம் விஜய் பெரியார் வழியில் நடப்பவன் என்று சொல்லிக்கொண்டு போக்கில்; அற நிலை துறை அமைச்சர் பெரியார் புத்தகத்தை முதல் அமைச்சரிடம் கொடுப்பது இன்னொரு பக்கம் இப்படி உதவாக்கரை பேச்சுகளைப் பேசுவது! இதையெல்லாம் விஜய் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லையே! எதற்ககு இந்த இரட்டை நிலைப்பாடு! மறுக்கிறோம் என்றால் மறுக்கிறோம் என்று சொல்ல வேண்டியது தானே! அந்த வகையில் தவேக திமுக அரசின் கார்பன் காப்பி தானே! பழைய மொந்தையில் புதிய கள்! வேறு என்ன சொல்ல? #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment