Tuesday, June 30, 2026
#மேகாதாட்_காவேரி-3
———————————
கர்நாடகத்தில் தலைக் காவிரியில் உற்பத்தியாகும் காவிரி நீர் அதன் பிறப்பிடமான குடகில் இருந்து 320 கிலோமீட்டர் தூரம் கர்நாடகத்திற்குள் தான் பாய்கிறது!பிரதான காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் பல அணைகளை கட்டி வைத்து நீரை இதுவரை தேக்கி வைத்துள்ளது! இதனால் கர்நாடகம் நினைத்தால் தான் காவிரியில் தண்ணீர் விட முடியும் தமிழ்நாட்டில் மேட்டூரும் கல்லணையும் மட்டுமே காவிரியில் உள்ளன! ஆனால் கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் கபினி ஹேரங்கி ஹேமாவதி என பல அணைகள் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டு தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்தைக் கட்டுப்படுத்துகின்றன!
முன்பெல்லாம் தமிழகம் காவிரியில் தண்ணீர் விடச் சொல்லி கர்நாடகத்தைக் கெஞ்சும்! காவிரி தண்ணீரைப் பெற வழக்குகளுக்கு மேல் வழக்குகளைப் போட்டுத் தான் தமிழகம் காவிரி நீரை பெற்று வந்தது! உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் ஆணையம் , காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை முறைப்படுத்தும் குழு,போன்றவற்றை அமைத்த பின் இன்று நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம்! என்றாலும் காவேரியில் வெள்ளம் ஏற்பட்டு கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் தவிர கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடாது! ஜூன் ஜூலை மாதங்களில் தான் காவிரியின் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர் சாகுபடி நடக்கும்! இந்த நேரத்தில் காவிரித் தண்ணீர் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவை! காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தாலும் கூட கர்நாடகம் தானே தண்ணீர் திறந்து விடுவது என்பது அபூர்வம்! மேலாண்மை வாரியம் திறந்துவிடச் சொன்னால்தான் அது தண்ணீரை திறந்துவிடும் என்ற நிலை! சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கூறியும் கூட கர்நாடகம் திறந்து விட மறுக்கிறது!. இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளாக நான் எழுதியும் பேசியும் பொதுநல வழக்குகள் தொடுத்தும் வந்து கொண்டிருக்கிறேன் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.
ஆண்டுதோறும் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்ற விதிகள் எல்லாம் இருக்கின்றன இருந்தும் இதையெல்லாம் கர்நாடகம் மதிப்பதில்லை¡ ஆண்டுதோறும் கர்நாடகம் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்பது விதி நடப்பு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்¡ ஆனால் 1.64 டிஎம்சி தண்ணீர் தான் கிடைத்துள்ளது! 1.72 டிஎம்சி தண்ணீர் ஜூன் மாதத்தில் நிலுவையாக உள்ளது! இப்படியான நிலையில் கர்நாடகம் தண்ணீர் விடாமல் அத்தனை அணைகளையும் பூட்டி வைத்திருக்கிறது!
இத்தனைக்கும் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாமல் இல்லை! கிருஷ்ணராஜ சாகரில் 81.32 அடி தண்ணீரும் கபினியில் 33.69 அடி நீரும் ஹேரங்கியில் 94..38 அடி நீரும் ஹேமாவதியில் எண்பத்தி ஐந்து புள்ளி 99 அடி நீரும் உள்ளன! ஆனாலும் கர்நாடகம் தண்ணீரை திறந்து விடாமல் அடாவடியாக இருக்கிறது! மேலாண்மை வாரியத்திடம் தான் தமிழக அரசு மீண்டும் புகார் செய்ய வேண்டும்!! காவிரித் தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர் கருகுகிறது! இதில் ஒரு சங்கடமான பிரச்சனை என்னவெனில் காவிரி மேலாண்மை வாரியத்தைக் கர்நாடகா மதிப்பதில்லை! அது உத்தரவிட்டும் தண்ணீரைத் திறந்து விடாமல் கர்நாடகம் இதுவரை பிடிவாதமாக இருக்கிறது!அதனால் தமிழக அரசு மாற்று சட்டவிதிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளது! இது குறித்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தியை பார்த்து கன்னட முதல்வர் டி கே சிவக்குமாரைத் தண்ணீர் திறந்து விடும் படி அழுத்தம் தரச் சொல்லலாம்! ஆனால் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் எதுவும் செய்யாமல் வாயை பொத்திக் கொண்டிருக்கிறது!
தமிழக அரசியலில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சரிடம் முதல்வர் விஜய் பேசி ராகுலுக்கு அழுத்தம் தர முயற்சி செய்ய வேண்டும்! மயிலே மயிலே என்றால் கர்நாடகம் தண்ணீர் தராது! தொடர்ந்து கர்நாடக அரசு அணைகளைக் கட்டுவதை தடுப்பது தமிழக முதல்வரின் கடமை.!
ஏனெனில் காவிரித் தண்ணீரை நம்பியே தமிழகத்தில் ஈரோடு திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை போன்ற பல மாவட்டங்கள் இருக்கின்றன! குடி நீர் விவசாயம் இவற்றுக்கு காவிரித் தண்ணீர் முக்கியத் தேவையாக உள்ளது! தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்கள் முழுக்க முழுக்க காவிரி தண்ணீரைத்தான் விவசாயத்துக்கு எனநம்பி இருக்கின்றன.அவர்களின் வயிற்றில் அடிப்பது பெரும் பாவம்.
மத்திய அரசும் புதிய அணைகளைத் தொடர்ந்து கர்நாடகா அரசு கட்டுவதைத் தடை செய்துள்ளது! அண்டை மாநிலங்களின் உரிமைகளை மதிப்பது கர்நாடகவின் கடமை என நாம் நினைவூட்ட வேண்டிய நேரம் இது! கடந்த காலங்களைப் போல இதன் மீது அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது என்பதே
Subscribe to:
Post Comments (Atom)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment