Tuesday, June 30, 2026

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,செய்தியாளர்கள் சந்திப்பில்

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,செய்தியாளர்கள் சந்திப்பில் ,தங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ராஜினாமா செய்து இடைத்தேர்தலை சந்தித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய தயார் என தூயசக்தி முதலமைச்சர் விஜய் கூறியதாக பகிரங்கப்படுத்தினார். கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் இந்த பேட்டி முக்கிய ஆவணமாக கருதப்படும். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி .தினகரன் தடுத்தும் அவரது பேச்சை மீறி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெக பக்கம் தாவினார்.இங்கே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியும் அக்கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் மறுத்து உள்ளனர். தலைமைக்கு அவ்வளவுதான் மரியாதை.தங்கள் பேச்சை கேட்க தங்களது MLAக்கள் தயாராக இல்லை என்பதை அறிந்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் என்பவர் பொதுக்குழுவிற்கே செல்லவில்லை. இதுதான இவர்களின் அரசியல் அக்கறை.
Quote
Polimer News
@polimernews
"தி.மு.க சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம்.." தி.மு.கவுடனான கூட்டணி குறித்து வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு #Vaiko | #MDMK | #DMK | #TVK | #PolimerNews

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC