Monday, June 29, 2026

*#மேகாதாட்அணை- #ராசிமணல்*-1

 *#மேகாதாட்அணை- #ராசிமணல்*-1

மேகாதாட் அணை *தமிழ்நாட்டிற்குள் காவிரி நீர் நுழையும் பிலிகுண்டுலுவிலிருந்து 4.5 கி.மீ.முன்பாகவே ஆற்றை மறிக்கும் வகையில்*...*9,000 ஏக்​கர் பரப்​பு... ரூ.14,000 கோடியில் 67.16 டிஎம்சி கொள்​ளளவு*... காவிரி ஆறு இருபுறமும் பிரம்மாண்டமான பாறை மலைகளுக்கு இடையே ஒரு குறுகிய, மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாய்கிறது*. ஆடுகள் கூட இந்த மலையின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குத் தாண்டிவிடலாம் என்பதால் தான் இதற்கு "மேகாதாட்" (ஆடு தாண்டி ) என்று பெயர்... கடைமடை பகுதியான தமிழகம், புதுவை, கேரளா அனுமதி அவசியம் தேவை. இந்த அனுமதி இல்லாமல் மேகேதாட் அணை யை கட்டமுடியாதுTamil Nadu seeks a tribunal on the Mekedatu project as it is “inadmissible” and “impermissible” The Tamil Nadu government argues that the project, proposed by Karnataka, is beyond the scope of the 2007 final award of the Cauvery Water Disputes Tribunal and the Supreme Court’s judgment of 2018- (hindu T. Ramakrishnan) இதன் மாற்று; *ராசிமணல்* (Rasimanal) என்பது காவிரியின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் அணை கட்டுவதற்காக 1961-ல் முன்மொழியப்பட்ட ஒரு திட்டமாகும். இது கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு மாற்றாக, உபரி நீரைத் தேக்க தமிழக விவசாயிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.ராசிமணல் அணை திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:காமராஜர் திட்டம்: இந்த அணைத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கே. காமராஜரால் முன்மொழியப்பட்டது.பயன்கள்: மேகதாது அணைக்கு மாற்றாக ராசிமணலில் அணை கட்டினால், இரு மாநில விவசாயிகளின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.கோரிக்கை: தற்போதைய காலகட்டத்தில், மேகதாது விவகாரத்திற்கு மாற்றாக தமிழக சட்டப்பேரவையிலும் ராசிமணல் அணையை வலியுறுத்தி கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த அணை கட்டப்பட்டு 67 டிஎம்சி தண்ணீர் தேங்கும்போது, சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவுள்ள அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும்..இதில் பெரும்பகுதி ""காவிரி வனவிலங்கு சரணாலயமும்"" அதை ஒட்டியுள்ள அடர்ந்த காப்புக்காடுகள் Reserve forest ஆகும். ​ஒரு ஏக்கர் அடர்ந்த காட்டில், முதிர்ந்த பெரிய,நடுத்தர மரங்கள் மற்றும் வளர்ந்து வரும் மரக்கன்றுகள் என அனைத்தும் தோராயமாக 100 முதல் 200 மரங்கள் வரை இருக்கும்.தோராயமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மரங்கள் வெட்டப்படவோ அல்லது நீரில் மூழ்கடிக்கப்படவோ வாய்ப்பு... ஒரு காடு அழியும்போது அவற்றுடன் சேர்ந்து...​லட்சக்கணக்கான சிறு தாவரங்கள்: புதர்கள், மூலிகைகள், கொடிகள் மற்றும் சிறு செடிகள் அழியும்... காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே உள்ள சில அபூர்வ வகை மரங்கள், ராட்சத அணில்கள் மற்றும் ஆசிய யானைகளின் வலசைப் பாதைகள் முற்றிலும் அழியும்... கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களே, மேகேதாட்டு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரைக் கெடுக்க வேண்டும் என்ற வெறி, இன்று உங்களின் சொந்த மாநிலத்தின் கண்ணையே குத்தத் துடிக்கிறது. தமிழ்நாட்டைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, கர்நாடகாவின் ஒட்டுமொத்தக் குடிநீர் ஆதாரத்திற்கும், பருவநிலைக்கும் நீங்களே கொள்ளி வைக்கத் துணிகிறீர்கள். 13,000 ஏக்கர் அடர்ந்த காடுகளை அழித்து, சுமார் 20 லட்சம் மரங்களை வெட்டிவிட்டு அணை கட்டப் போகிறீர்களாமே...தங்க முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் எல்லா முட்டைகளையும் எடுக்க நினைத்து வாத்தின் வயிற்றையே கிழிக்கும்...!!?? பாடுகின்ற பாமரனுக்கும், கர்நாடகாவில் வாழும் சாமானிய மக்களுக்கும் புரியும் படியாக ஒரு எளிய உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இது. காடுகளை அழித்துவிட்டு அணை கட்ட நினைப்பது, உயிரைக் கொன்றுவிட்டு உடலுக்கு ஆடை தைக்க நினைக்கும் பேதைமை... மரங்கள் என்பவை வெறும் நிழல் தரும் குச்சிகள் அல்ல; அவை பூமியின் அடிவயிற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, காற்றில் ஈரப்பதமாக மாற்றி, வானத்தில் மிதக்கும் மேகங்களை "இங்கே வா... இங்கே வா..." என்று காந்தம் போல இழுத்து வந்து மழையாகப் பொழிய வைக்கும் ''இயற்கையின் உந்துபொறிகள்"" அந்த 20 லட்சம் மரங்களை நீங்கள் வேரோடு சாய்த்தால், அங்கே மேகங்கள் எப்படி வரும்? மழை எங்கிருந்து பெய்யும்? நீங்கள் 9,000 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட்டையும், கம்பியையும் கொண்டு பிரம்மாண்டமாக ஒரு கான்கிரீட் சுவரைக் கட்டிவிடலாம். ஆனால், அந்த அணைக்குள் வந்து தேங்குவதற்குத் தண்ணீர் எங்கே ? மழை பெய்வதற்கான ஆதாரமான மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு, காலிப் பாத்திரத்தைப் போன்ற ஒரு வெற்று அணையை அங்கே கட்டி என்ன செய்யப் போகிறீர்கள்? 20 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில்: அந்தப் பிராந்தியத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும்.

No comments:

Post a Comment

Pyramids of Meroe, Sudan

  Pyramids of Meroe, Sudan