Saturday, June 27, 2026

#முதல்வர்ஜோசப்விஜய்ஆட்சியில்சட்டஒழுங்குபிரச்சினை

 #முதல்வர்ஜோசப்விஜய்ஆட்சியில்சட்டஒழுங்குபிரச்சினை

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒரு கொ*லை நடந்தாலே அதிர்ச்சி தரும்.. ஆனால் இப்போதோ தினம் 2-3 கொலைகள், 10-12 பலாத்காரம் என்று நிலைமை கைமீறிக்கொண்டு இருக்கிறது. முதல்வர் விஜய்யின் தவெக அரசால் இதை கட்டுப்படுத்தவோ.. கடுமையான தண்டனைகளை கொடுக்கவோ முடியவில்லை. இந்த நிலையில்தான் விஜய் உள்துறை பொறுப்பை கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்போதைய அமைச்சரவைக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாகத் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரங்கேறிய அடுத்தடுத்த குற்றச்சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. சென்னையின் வணிக மையமான தி.நகரில் நடைபெற்ற 96 சவரன் கொள்ளை, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டியில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொ*டூர ப*லாத்கார வ*ன்முறைகள் எனத் தொடரும் கு*ற்றங்களால் எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. நெருக்கடியில் முதலமைச்சர் விஜய்: தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், காவல்துறை மற்றும் உள்துறையைத் தன் வசம் வைத்துள்ளார். எனினும், ஆட்சி மாற்றத்தின் தொடக்கக் காலத்திலேயே கட்டுக்கடங்காமல் எழும் இந்த சட்டஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை… ஆனால் இந்த ஜோசப் விஜய் அரசுக்கு அக்கறை இல்லை "புதிய ஆட்சியும் கட்டுப்படுத்த இயலாத வன்முறை மற்றும் கலாச்சாரச் சீர்கேடுகளும்" த வெ க வின் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மிக மோசமான முறையில் பாலியல்க் குற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான கொலைகளும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வருவது மிகுந்த கவலைக்குரியதும் எச்சரிக்கை செய்ய வேண்டியதுமாக இருக்கிறது. ஏறக்குறைய சட்ட ஒழுங்கு என்பது அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கை மீறிச் சென்று விட்டதையே இது காட்டுகிறது. இவற்றை மக்கள் முன்பு கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களது தலைமையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஒரு கண்டனக் கூட்டம் இன்று காலை நடந்தது. பெருவாரியாகப் பாரதிய ஜனதாக் கட்சி ஊழியர்களும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களும் பொதுமக்களுமாகக் கலந்துகொண்டு நாட்டில் நடக்கும் இத்தகையை கேடுகளுக்கு எதிராக ஒருமித்த குரலில் தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார்கள். அது ஒரு எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டமாக நிகழ்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த அனைத்து வன்முறைகளும் பாலியல் கொடுங்கோன்மைகளும் எந்தெந்த ஊரில் எங்கு நடந்தது என்பதற்கான பட்டியலும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் குற்றம் என்பது போல இந்த ஆட்சியில் மாநிலமெங்கும் மிக மோசமான சூழல் நிலவுகிறது. ஓட்டு போட்டவர்களோ மௌனித்து என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கிறார்கள்!. இந்த அரசு ஒரு மோசமான துவக்கத்தில் இருக்கிறது! எங்கு பார்த்தாலும் மின்தடை ஒரு புறம்! சட்டம் குடிமையியல் அரசு என்பது குறித்து தெரியாத புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மறுபுறம்! என மிகுந்த குழப்பத்தில் இந்த ஆட்சி நீடிப்பது சரியானது தானா என்கிற ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை இதுவரை முதல்வரால் நிறைவேற்ற முடியவில்லை! அதற்குப் பதிலாக பற்றாக்குறை அதிகக் கடன் என்பவற்றை காரணம் காட்டி கண் துடைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கே வைத்து பெண்களுக்கு 2500 மாணவர்களுக்கு 4000 பெண்களுக்கு 5000 கொடுப்பதாகச் சொன்னவர்கள் அந்த இடத்திலேயே தலைமறைவாகி விட்டார்கள். போக ஆறு சிலிண்டர்கள் இலவசம் மகளிர் உதவித்தொகை முதியோர் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா! சொல்லிவிட்டாரே ஒழிய இதற்கெல்லாம் முதல்வர் வாயைத் திறப்பதில்லை! கூறுகெட்ட மாடு 100 கட்டுப் புல்லு தின்ன கதையாக இருக்கிறது! எதுவும் நடக்கவில்லை எல்லாம் வெறும் அறிவிப்பாக இருக்கிறது! தினமும் நடிகைகளைச் சந்திக்கிறார்!! இந்தப் பாலியல் குற்றங்கள் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை! சட்ட ஒழுங்கை முறைப்படுத்தவோ அனைத்து குற்றங்களளையும் இரும்பு கரம் கொண்டு அடக்கவோ நேரம் இருப்பதில்லை. முதல்வரைத் தவிர பலரும் அதிகாரம் உள்ளவர்களாகத் தென்படுகிறார்கள்!!இதையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் அல்லாமல் இவர்களது ஆட்சியில் நடக்கும்…

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...