Tuesday, June 30, 2026

#சூரியனைக்கண்டுநாய்கள்குலைக்கின்றன

 #சூரியனைக்கண்டுநாய்கள்குலைக்கின்றன

—————————————————— இரண்டாயிரத்துக்குப் பிறகு பிறந்த பயல்கள் சிலர் ! தவறாக நினைக்க வேண்டாம் அவர்களை அப்படித்தான் அழைக்க வேண்டி இருக்கிறது! இவர்களுக்கு என்ன அரசியல் வரலாறு தெரியும் அவ்வப்போது நடந்த சூழல்கள் குறித்த சிரமங்களில் உடனிருந்து அதைக் கடும் மன உளைச்சலோடு எதிர்கொண்டவர்களின் நிலைமையெல்லாம் தெரியுமா? நான் எலரையும் மதிப்பவன். எந்த விபரமும் தெரியாமல் விசுவாசப் புத்திகளை மட்டுமே வைத்துக் கொண்டு எனக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்களை நான் இப்படித்தான் அழைக்க முடியும். இன்றைக்கு வந்து எதையெதையோ பேசுகிறார்கள்! பின்னூட்டம் போடுகிறார்கள்! 1980 இல் இருந்து வைகோவுக்கும் எனக்குமான அரசியல் தொடர்பு - உறவு குறித்து யார் பேச முடியும்! யாருக்கு அந்த உண்மை எல்லாம் தெரியும்? அவருக்கு என்னைத்தெரிந்ந அவரை எனக்கும் தெரிந்த காலமெல்லாம் இருந்தது ! பிரபாகரன் தமிழ்நாட்டில் என்னோடு இருந்த போது அவருக்கு நான் தான் வைகோவை அறிமுகப்படுத்தி வைத்தேன். அதற்கு அப்புறம் தான் ஈழ பிரச்சனைகள் குறித்து அவர் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டார்.அதில் எனது பங்கும் பெரும்பான்மையாக இருக்கிறது! வைகோ இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் சென்ற போது அதற்கு முன்பாக வைகோவிற்கும் பழ.நெடுமாறனுக்கும் எந்தத் தொடர்பும் நட்பும் இல்லாத சமயத்தில் என்னால் அவரது உதவிகளின் மூலம் சகதி மிகுந்த single preferences வாக்குகளைப் பெற்று ராஜ்யசபா போனார். அதில் நான் கடும் முயற்சி எடுத்து அதன் பின்னணியில் இருந்தேன்.அந்த தேர்தலில் ஆற்காடு வீராச்சாமியும் திமுக சார்பில் போட்டியிட்டார். அதன் பிறகு 1996 இல் மதிமுக தேர்தலில் தோற்றபோது எல்லோரும் ஓடிப் போய் விட்டார்கள்! ஆனாலும் அலுவலகத்தைத்திறந்து தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தவன் நான் தான்! இதையெல்லாம் மறுக்க முடியாது! தான் விரும்பிப் படிக்கும் பைபிள் மீது சத்தியமாக அதை எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கும் உங்கள் வைகோவை கேட்டால் இதையெல்லாம் சொல்வார்! 2001 இல் வைகோவுக்கு எதிராக விமர்சனம் வைத்து பல ரகசியங்களை எனது கைபேசியில் கலைஞருக்கு நான் அனுப்பிவிட்டேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதில் கிஞ்சித்தும் என் தாய் மீது சத்தியமாக உண்மையில்லை. நான பெருமாளை வணங்குகிறவன். அந்த தர்மத்தின் அடிப்படையில் சொல்கிறேன்!இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. இந்த மோசமான அரசியலின் பல்வேறு சூழல் காரணமாக அதை உண்மை போல சிலர் சொல்லலாம்!ஆனால் அதில் உண்மை இல்லை! பொய் சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது பொழுது போக்காக இருக்கலாம்! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்கிற நிலைதான்.. ஆனால் வைகோ எம்பி ஆவதற்கும் நான் உழைத்த உழைப்பை இவர்களெல்லாம் செய்திருப்பார்களா? அறிந்திருப்பார்களா! அதற்கெல்லாம் எந்தக் கைமாறையும் வைகோ எனக்குச் செய்யவில்லை. அந்த எண்ணமும் அவருக்கு இல்லை.இதை அவர் வாசிக்கும் பைபிளின் மீது சத்தியமாகக் கேட்டால் அவர் ஆமாம் என்று தான் சொல்லுவார்.. அவருடன் சிலர் வந்திருக்கலாம். அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது! நலன் பெறுவதற்காக வந்தவர்கள்.!நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் என்னை மிகவும் பாழ்படுத்தி நிர்மூலமாக்கி விட்டார். அரசியலில் நான்வளர வேண்டிய சரியான பிராயத்தில் அவர் முடிவு எடுக்கத் தெரியாமல் அந்தக் கட்சிக்குப் போனது இந்த கட்சிக்குப் போனது இடைவெளிகளில் லாபி செய்வது என்ற வகையில் அவர் உருவாக்கிய அனைத்தும் இன்று வீணாகப் போய்விட்டது. இதைக் கலைஞரே என்னிடம் சொன்னார். நான் மீண்டும் திமுகவிற்கு போய் சேர்ந்த போது வைகோ பேச ஆரம்பித்து விட்டார். தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நான் பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பேன் என்று கலைஞரிடம் தான் சத்தியம் செய்ததாக எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்! அந்த ஜகஜாலம் எல்லாம் நமக்கு வராது! வைகோ அன்று : தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என புதுச கிளம்பிட்டாங்க …… திராவிடத்தை காப்பாத்த எல்லா பிரச்சினையும் மறந்து, திமுக, அதிமுக இனி ஒன்றுபட்டு( Unity) நிற்கவேண்டும். வைகோ இன்று : சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி அமைப்பதற்காக திமுக ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. உண்மையில் அத்தகைய நிலைபாடு இருந்திருந்தால், அது மிகப் பெரிய அரசியல் மோசடியாக ( political fraud) இருந்திருக்கும். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், அது வைகோ வால் மட்டுமே முடியும். இவரைப் போல வா? நான் எந்தக் கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அங்கு நலன்களை அனுபவித்து விட்டுப் பிறகு முதுகில் குத்தி விட்டு வெவ்வேறு இடங்களுக்கு தாவிக் கொண்டிருந்தேனா! இல்லை அந்தக் கட்சியிலிருந்து ஏதாவது ஆதாயம் பெற்று தந்திரமாக ஒதுக்கிக் கொண்டேனா? சென்னையில் இருந்த சொத்துக்களை எல்லாம் குறிப்பாக இசிஆரில் இருந்த ஐந்து ஏக்கர் நிலம் அண்ணா நகரில் வீடு

No comments:

Post a Comment

JULY 19