Monday, June 29, 2026

பூமியின் வெப்பம் கிடுகிடுவென உயரும்.

மேகங்கள் மழையாகப் பொழியாமல் கர்நாடகாவைத் தாண்டி ஓடிவிடும்...

இதன் விளைவாக, மேகேதாட்டு பகுதிக்கு அருகிலிருக்கும் உங்களின் பெருமைமிகு ""பெங்களூரு நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் பாலைவனமாக மாறும்."" தமிழ்நாட்டுக்காரன் கஷ்டப்பட வேண்டும் என்று நீங்கள் வெட்டிய குழிக்குள், முதலில் விழப்போவது கர்நாடக மக்கள் தான்! இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி, "வனவிலங்குகளின் நன்மைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே" சரணாலய எல்லைக்குள் மாற்றங்களைச் செய்ய முடியும். வணிக ரீதியான அல்லது குடிநீர் திட்டங்களுக்காக காடுகளை அழிப்பதை வாரியம் மிகக் கடுமையாகவே அணுகும்...நம் சட்டங்கள் அவ்வளவு எளிதாக அனுமதி வழங்கிவிடாது. அன்பு கர்நாடக மக்களே...காவிரி வனவிலங்கு சரணாலயம் என்பது ஆசிய யானைகளின் புகலிடம். 13,000 ஏக்கர் காடுகள் நீரில் மூழ்கினால், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான யானைகளும் வனவிலங்குகளும் வாழ்விடத்தை இழந்து, உங்களின் கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும்... காடுகளை அழித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குப் போய்விடும். பெய்யும் அரைகுறை மழையும் மண்ணை அரித்துக்கொண்டு போய்விடுமே தவிர, உங்களின் கிணறுகளில் தண்ணீர் ஊறாது. அரசியல்வாதிகள் இன்று இருப்பார்கள், நாளை தோற்றுப் போவார்கள். ஆனால், இயற்கையை அழித்தால் அதை மீண்டும் உருவாக்க யாராலும் முடியாது.. டி.கே.சிவக்குமார் அவர்களே, உங்களின் மேகேதாட்டு பிடிவாதம் என்பது தமிழ்நாட்டிற்கு வைக்கும் செக் அல்ல; அது கர்நாடகாவின் தலையிலேயே நீங்களே இறக்கிக் கொள்ளும் இடி! தமிழ்நாடு தனது மாற்று நீர் மேலாண்மைத் திட்டங்களாலும், கடல்நீரைச் சுத்திகரிப்பதன் மூலமும், சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெற வேண்டும். டி.கே.சிவக்குமார் அவர்களே, நதிகள் என்பவை இயற்கையின் வற்றாத கொடை; அவை எந்தவொரு தனிப்பட்ட மாநிலத்தின் அரசியல்வாதிக்கும் சொந்தமான சொத்து அல்ல. "மேகாதாட்வைக் கட்டியே தீருவோம், தமிழ்நாட்டைப் பசியிலும் பட்டினியிலும் தள்ளுவோம்" என்று நீங்கள் சவால் விட்டால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு என்றோ தயாராகிவிட்டது. நீங்கள் தண்ணீரைத் தடுத்து எங்களை வறட்சியில் வீழ்த்தலாம் என்று கணக்கு போட்டால், அது உங்களின் அப்பட்டமான அறியாமை! வீடு கட்டுவதற்காகக் கூரையைப் பிடுங்கி விறகாக்கும்" உங்களின் பேராசைக்கு, 20 லட்சம் மரங்களின் சாபமும், கோடி மக்களின் பசிப் பிணியும் உங்களின் அரசியல் வரலாற்றை ஒருபோதும் மன்னிக்காது சிவக்குமார் அவர்களே! தமிழக விவசாயப் பெருங்குடி மக்களே, நெஞ்சை நிமிர்த்துங்கள்! நம் தலைக்கு மேலே பெய்யும் மழையையும், நம் எல்லையோரம் இருக்கும் பிரம்மாண்டக் கடலையும், நம் தமிழர்களின் தற்சார்பு அறிவியலையும் கொண்டு இந்த மண்ணை நாம் செழிக்க வைப்போம்! "பாலைவனமான இஸ்ரேலில்" சாத்தியப்படும் பொழுது நமக்கு முடியாதா!!??முன்னெடுப்போம். #megathathu #KarnatakaPolitics #TNPolitics #காவிரி #ராசிமணல் #rasimanal #CauveryWaterDispute



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC