அனைத்து முறைகேடுகளுக்கும் எதிராகப் பாரதிய ஜனதா தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்.
த வெ க ஆட்சியில் நடைபெற்ற முக்கிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள். இதுவரை பதிவானதில் பாலியல் வன்கொடுமைகள் -100க்கும் மேல்! கொலைகள்-55க்கும் மேல்! போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் -65க்கும் மேல்! 25 5 2026 தூத்துக்குடியில் 20 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர் சில காமுகர்கள். 25 5 2026 சென்னை அம்பத்தூரில் மின்சார வாரிய ஊழியர் ஒருவர் ரீடிங் எடுக்க வந்துள்ளதாகக் கூறி வீட்டில் தனியாக இருந்த ஒன்பது வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 27.5.2026 கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10 வயதுசிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. 28 5 2026 சென்னை வேளச்சேரியில் காலையில் டீ குடிக்கச் சென்ற 61 வயது மூதாட்டியை இரண்டு நபர்கள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்! 31 5 2026 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை நான்கு சிறார்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்! 03 06 2026 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் 17 வயது மாணவியை மூன்று பேர் கும்பல் காரில் கடத்திச் சென்றனர்!. 04 06 2026 மானாமதுரையில் 11ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு ஊர்க்காவல் படை வீரர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 13 6 2026 காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சனை குறித்துப் புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாகப் பேசி தலைமைக் காவலரே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கொடூரம் நடந்திருக்கிறது! 13 6 2026 சிவகங்கை பெண் காவலரிடம் மூன்று பேர் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்கள்!. 13 6 2026 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பட்டப்பகலில் மானபங்கம் செய்யப்பட்டதாக 18 வயது இளம் பெண் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார்.! 14 6 2026 தூத்துக்குடி மாவட்டம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு மதப்போதகரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 13 6 2026 திருவள்ளூரில் மூன்று வயது குழந்தைக்குப் பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். அத்துடன் இந்த ஒரு மாதத்தில் ஆளும் வர்க்கத்தின் வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்த வகையில்! 25 5 2026 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு த வெ க வைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. 29 5 2026 மதுராந்தம் அருகே மூதாட்டி ஒருவரைக் கொன்று த வெ க கிளைப் பொறுப்பாளர் ஒருவர் நகை பறித்துள்ளார். 01 06 2026 ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணை ஏமாற்றி த வே கா நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்! பின்னர் இது குறித்து எம்எல்ஏ சரவணனிடம் முறையிட்டபோது மேலிடத்தில் பேசி வேலை வாங்கித் தருகிறேன்! சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம்! என்று கூறியதாகப் புகார் எழுந்தது . 09 06 2026 வண்டலூரில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகள் மூன்று பேரை த வெ க நிர்வாகி மகன் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது! 12 6 2026 சென்னை ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த த வே க வின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி கைது செய்யப்பட்டார். 12 6 2026 சேலத்தில் வறுமையில் வாடும் 50க்கும் மேற்பட்ட பெண்களைக் குறி வைத்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டி பிரமுகர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது! 15 06 2026 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆடையின்றி நின்று பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி லோகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் பிடித்துத் தரும அடி கொடுத்துள்ளார்கள். இப்படியாக இந்தப் புதிய ஆட்சியில் தொடர்ந்து வரும் சம்பவங்கள் எந்தவித ஒழுங்கும் அச்சமும் இன்றி மனம் போன போக்கில் தொகுதி வாரியாக நடந்து வருகிறது.விஜய் நடிகராக இருந்தபோது அவர் நடித்த திரைப்படங்களில் காட்டிய வன்முறைகளுக்கு இந்த இளைஞர் பட்டாளம் தன்னை அறியாமல் பலியாகி வருவதும் தங்களை ஹீரோக்களாக ஹீரோயின்களாக நினைத்துக் கொள்வதும் அதனால் ஏற்படும் ஆர்வக்கோளாறுகளை முறைப்படுத்தாமல் மாநிலமெங்கும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுமாக இருக்கும் இந்த அரசைக் கண்டித்து தொடர்ந்து அறப்போராட்டங்களை மாநில பாஜக கையில் எடுக்கும் என்பதை மக்கள் மன்றத்தில் முன்வைக்கிறது.. #tvk #josephvijay #தமிழகத்தில்பாலியல் #tamilnadulawandorder #tamilnadupoltics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment