Tuesday, June 30, 2026
#நெருக்கடிநிலை #emergency
25-6-1975 அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை கொடூரமான முறையில் யாரும் எதிர்பாராத வண்ணம் அறிவிக்கப்பட்டது.MISA மூலம் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிசா கால ஒடுக்குமுறைகள் இந்திய அரசியல் வரலாற்றின் மீது ஒரு நீண்ட கறையாக பெரும் துயரமாக இன்றளவும் இருக்கிறது.எந்தவித விசாரணையுமின்றி, காரணங்களைச் சொல்லாமலும், பிணையில் வெளிவர முடியாத வகையிலும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜனநாயகக் குரல்களும், மக்களின் போராட்டங்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டன. அதிகார வர்க்கம் தங்களது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயல்படத் தொடங்கியது.
அந்த மோசமான காலத்தில் அமைதிப்புரட்சி ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றப் போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் கிருபளானி, மொரார்ஜி தேசாய், ஜன சங்கம் தலைவர்கள் வாஜ்பாய், எல் கே அத்வானி, நானாஜி தேஷ்முக், முரளி மனோகர் ஜோஷி, விஜயராஜ சிந்தியா
அதேபோல ஸ்தாபனக் காங்கிரசைச் சேர்ந்த சிக்கந்தர் பக்த் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராஜமாதா ஜெய்ப்பூர் ராணி காயத்ரி தேவி,போன்ற பலரும் கைது செய்யப்பட்டனர். எதோச்சதிகார முறையில் நீதிமன்றத்தின் அனைத்து அரசியல் அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. மனித அடிப்படை உரிமைகள் அழித்தொழிக்கப்பட்டது . குடும்பக் கட்டுப்பாடு என்கிற பெயரில் சித்திரவதைக்கு உள்ளான பல இந்திய முஸ்லிம்கள் காவு கொடுக்கப்பட்டனர். தில்லியில் உள்ள துர்க்மான் கேட்டில் உள்ள பல முஸ்லிம்களின் வீடுகள் சஞ்சய் காந்தியால் இடிக்கப்பட்டதும் நடந்தது. குடும்ப கட்டுப்பாடு என கொடுமைகள் இந்திய முஸ்லிம்களின் தலைவர் டெல்லி இமாம் அன்று காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்தார். அதை ஒட்டி ஆனந்த மார்க்கம் பஜ்ரங்கதள் ஆர்எஸ்எஸ் மற்றும் நக்சல்கள் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமான சீரழிவுகளும் நடந்த கொடுங்கோலான அறிவிப்பை அன்றைய அரசு செய்த நாள்தான் இன்று! அதன் பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய மிசா ஒடுக்கு முறைகள் நடந்து இன்றோடு ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது. அதன் விளைவுகளை அந்தக் கருப்பு நாட்களை நினைவு கூறும் முகமாக சென்னையில தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் மேலிடப் பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி {எக்ஸ் எம் எல் சி} தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கலந்து கொண்டோம். அத்தகைய எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 60 பேருக்கும் மேலாக வந்திருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அன்றைக்கு நடந்த பல்வேறு வன்கொடுமைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சாட்சியங்கள் அதனால் எதிர்காலமே இல்லாமல் போனவர்கள் போன்றவர்களை எல்லாம் இந்த நிகழ்வில் மறு நினைவாக்கி இந்தக் கலந்துரையாடல் சற்றே வேதனையாகத் தான் நடந்தது!
காலமும் சம்பவங்களும் துயரங்களும் கடந்து போயிருந்தாலும் அந்த கொடுங்காலத்தில் எத்தனை உயிர்கள் எத்தனை தலைவர்கள் சிறையிலும் வீட்டிலும் அடைக்கப்பட்டு கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார்கள் என்பதை இந்த நாட்டுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தத்தான் வேண்டும். அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் அந்தக் கடமையைச் சிறப்பாகவே செய்தது.
#emergency
#நெருக்கடிநிலை
#அவசரநிலை
#அவசரநிலையின்50ம்ஆண்டு
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-6-2026
Subscribe to:
Post Comments (Atom)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment