---------------------------
சமீபத்தில் மயிலை ராயர் உணவு விடுதிக்கு சென்றபொழுது பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் நினைவுகள் வந்தன. அவர் இந்த உணவு விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றதுண்டு. அப்போது கச்சேரி சாலையில் இருந்த்து. இப்போது அருகிலுள்ள ஆரண்டேல் தெருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் சென்னை உயர்நீதிமன்றம் மா. அனந்தநாராயணனின் தந்தை தான் அ. மாதவைய்யா. அன்றைய நெல்லை மாவட்ட பெருங்குளத்தைச் சேர்ந்தவர். தமிழறிஞர் பெ.நா. அப்புசுவாமியும் இவருடைய உறவினர்.
மாயவரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் தமிழ் புதினங்களுக்கு முன்னோடிகள். அ. மாதவைய்யாவின் பத்மாவதி சரித்திரம், பி. ஆர். ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என்பவையாகும்.
பேராசிரியர் அ. சீனிவாசராகவன், நீதிபதி மகாராஜன் ஆகிய இருவரும் இதைக் குறித்து விவாதித்த காட்சிகள் இன்றைக்கும் மனக் கண்ணில் இருக்கின்றது. நீதிபதி மகாராஜன் ஷேக்ஸ்பியரின் கிங் லியரை தமிழாக்கம் செய்தவர். சீனிவாசராகவன் நாணல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நட்த்தியவர். சாகித்திய அகாடமி விருதையும் பெற்றவர்.
இவரின் சொந்த ஊர் தஞ்சை திருவையாறு ஆனால் நெல்லையின் மைந்தர்.
#ksrpost
30-11-2019.