ஞானபீட விருது-தொடர்ந்து தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
-------------------------
ஞானபீட 55 ஆவது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் மொழியில் ஞானபீட விருது யாருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. நா. பார்த்தசாரதிக்கு கொடுக்கும் முன்னரே அவர் இறந்து விட்டார். இந்தமுறை விருதை கிராவுக்கு(97) வழங்கி இருக்கலாமே.
இதுவரை தெலுங்கு 3 முறை, கன்னடம் 8 முறை, வங்கம் 6 முறை, மலையாளம் 5 முறை, இந்தி 11 முறை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு
ஆறாவது முறையாக மலையாள மொழிக்கு ஞானபீடம் வழங்கப்பட்டுள்ளது. அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (93) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது ரூபாய் 11 லட்சம் பரிசுத் தொகை கொண்டது.
ஏனோ தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே
வருவது வேதனையளிக்கிறது.
கே எஸ் இராதாகிருஷ்ணன்
30 11 2019
#KSRposts
#KSRadhakrishnanposts
#jnanapith
#ஞானபீடம்
#தமிழ்
#கிரா
No comments:
Post a Comment