Monday, November 4, 2019

மானிடம்,உறவுகள் -சில சிந்தனைகள்



———————————————— 

தனிமை என்பது வேதனையான சுகம் . அதை பழகி வாடிக்கையக்குவது
போல் எளிதான, கடினமான காரியம் ஏதாவது உண்டா? 
******
உறவு, கோட்பாடு, சிந்தனை என்று பல விஷயங்களின் மூலம் மகிழ்ச்சியை நாம் தேடுகிறோம். அப்போது உறவு, கோட்பாடு, சிந்தனை ஆகியவையே    முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது, மகிழ்ச்சி அல்ல. பிறவற்றின் மூலம் மகிழ்ச்சியைத் தேடும்போது போது, அந்த  மகிழ்ச்சியைவிட அவ் விஷயங்களே  அதிமுக்கியத்துவம் பெற்று விடுகின்றன. இப்படி சொல்லும் பொழுது பிரச்சனை எளிது போல தெரிகிறது, பிரச்சனை எளிதே.

சொத்துக்களில், குடும்பத்தில், பெயரில் நாம் மகிழ்ச்சியை தேடுகிறோம்;  சொத்து குடும்பம் கருத்து  ஆகியவை முக்கியத்துவம் பெறும்போது மகிழ்ச்சியை தேட ஒரு உபாயம் தேவைப்படுகிறது என்றாகிறது. அப்போது உபாயமே குறிக்கோளை அழித்துவிடுகிறது. மகிழ்ச்சியை, கைகள் அல்லது மனது உண்டாக்கிய ஒன்றின் மூலமோ அல்லது வேறு ஒன்றின் மூலமாகவோ பெற முடியுமா? 

விடயங்கள் , உறவுகள், கருத்துக்கள் ஆகியன எல்லாம் நிலையற்றவை என ஊடுருவி காணமுடிகிறது. அவைகளால் மகிழ்ச்சியற்ற நிலைமைக்கு தள்ளப்படுகிறோம். பொருட்கள் நிலையற்றவை , சிறிது சிறிதாக  அழிந்து போய்விடும். மரணம் வரை  உறவுகளிடையே தொடர்ந்து பூசல்கள் இருந்த வண்ணம் உள்ளது. கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் நிலையற்றவை. அவை நீடித்திருப்பதில்லை. அவற்றில் மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறோம், அதே சமயம் அவற்றின் நிலையாமையை உணர்வதில்லை. ஆகையால், துன்பம் நம்மை உற்ற துணை போல தொடர்கிறது. இதிலிருந்து மீண்டு வருவது மற்றொரு பிரச்சனை ஆகிறது. 

மகிழ்ச்சியின் தன்மையை கண்டறிய வேண்டுமெனில், தன்னறிவு எனும் நதி யைப் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும். தன்னறிவு என்பதற்கு முடிவேது? நதிக்கு மூலம் உள்ளதா என்ன?  ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு நீர்த்துளியும் சேர்ந்தே நதி ஆகிறது. மூலமான ஓர் இடத்தில்  மகிழ்ச்சி உள்ளது என்று தவறாக எண்ணிக் கொள்கிறோம். தன்னறிவு எனும் நதியிலே, நீங்கள் இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சி உள்ளதென அறிவீர்கள்.

No comments:

Post a Comment

2023-2024