#தென்பெண்ணை_ஆற்று_நீர் #உரிமையையும்_இழந்தது_தமிழகம்.
-------------------------------------
தென்பெண்ணையில் கர்நாடகா அணைக்கட்ட தடைகோரிய வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லையென உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனு தடை விதிக்க முன்வரவில்லை! தமிழக அரசு இதை தடை கோரிய மனுவை கடந்த 18.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யது தமிழ்நாடு அரசின் இடைக்கால மனுவை (I.A. No. 95384 of 2019)தள்ளுபடி!
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது ....
அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணை ஆற்று நீர் உரிமையையும் இழந்தது தமிழ்நாடு.
தென்பெண்ணையாறு கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் 1933இல் ஒப்பந்தமானது. இதை மீறி
தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயா ஆற்றின் குறுக்கே கர்நாடக – தமிழ்நாடு எல்லைக்கு அருகே 9 கிலோ மீட்டர் தொலைவில், யார்கோல் கிராமத்தில் 500 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் கொள்ளளவு கொண்ட 414 மீட்டர் நீள அணையை ஏறத்தாழ 87 கோடி ரூபாய் செலவில் கர்நாடக அரசு, கட்டி வருகிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் வரத்து தடுக்கப்படும்
கோலாறு மாவட்டம்,மல்லூர் பகுதியில் 160 குளங்களை நிரப்பும் வகையிலும், எல்லமல்லப்பா குளத்தில் 284 மில்லியன் கன அடி தண்ணீரைத் வரத்து வரும் வகையிலும், வரத்தூர் குளம் முதல் நரசப்பூர் குளம் வரை பல்வேறு குளங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வகையிலும் ஏறத்தாழ 8 அடி விட்டமுள்ள குழாய்களைப் பதித்து, மக் நீறேற்றிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் உறிஞ்ச கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
#தென்பெண்ணை
#ksrpost
14-11-2019.
https://www.facebook.com/100008390956876/posts/2555433964746277?d=n&sfns=mo
No comments:
Post a Comment