*#கோவில்பட்டி_சிவகாசி_சாத்தூர் பகுதி #தீப்பெட்டி_தொழில் பிரச்சினைகள்*
————————————————
1989,91 வி.பி.சிங் மற்றும் 92 நரசிம்மராவ் காலத்தில் இருந்து தீராத பிரச்சினையாக இருந்தது. துவக்கத்திலிருந்தே நான் இந்த பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். நரசிம்மராவ் காலத்திலும் அமைச்சர்களை பார்த்தாயிற்று. பிறகு வைகோ தலைமையில் 96 இல் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து சில கோரிக்கைகள் வைத்து அது நிறைவேறியது.
பிறகு 1998 இல் மத்திய அரசியில் பிரதமர்வாஜ்பாயையும் உள்த்துறை அமைச்சர் அத்வானியையும் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவையும் பார்த்தோம்.
இன்னும் இந்தப் பிரச்சினைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை. நேற்றும் கோவில்பட்டி பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக செய்திகள் வருகின்றன. இந்தப் பிரதிநிதிகள் டெல்லிக்கு அலைந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நெருக்கடி தீர்ந்தபாடில்லை.
அழைத்துச் செல்கின்ற பொறுப்பாளர்கள் தான் மாறுகிறார்களே ஒழிய பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. பிரச்சினைகளை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். தேர்தல் மூலம் பொறுப்புக்கு வந்தவர்கள் மட்டும்தான் இதை கவனிக்க உரியவர்களாக இருக்கிறார்கள். பிரச்சனைகள் அப்படியே உள்ளன.
கே எஸ் இராதாகிருஷ்ணன்
16.11.2019
#ksrpostings
#ksradhakrishnanposts
#கோவில்பட்டி
#தீப்பெட்டி_தொழில்
No comments:
Post a Comment