Tuesday, November 26, 2019

*Indian Constitution - 70* *இந்திய அரசியலமைப்பு சாசன நாள்.*

Indian Constitution - 70
இந்திய அரசியலமைப்பு சாசன நாள்.
----------------------
இந்திய அரசியலமைப்பு சாசன நாள். நமது அரசியலமைப்பு சாசனத்தில் முகப்பு (Preamble) 25 பகுதிகள் (Parts), 448 பிரிவுகள் (Articles), 12 அட்டவணைகள் (Schedule) அடங்கிய உலகத்திலேயே நீண்ட பெரிய அரசியல் சட்டமாகும். நமது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights), சட்டத்தின் ஆட்சி (Rule of Law), கூட்டாட்சித் தத்துவம் (Fedaralism) போன்ற அடிப்படைக் கூறுகளை (Basic Structures) திருத்த முடியாது என்று கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றோடு 40 ஆண்டுகள் முடிவடைகிறது. அரசியல் சாசனம்  இயற்றப்பட்டு 70 ஆண்டுகளும், மைல்கல்லான இந்த தீர்ப்பு வழங்கி 40 ஆண்டுகளும் முடிவடைந்துள்ளன.

அரசியல் சாசன மூலப்பிரதி கடந்த 1999 நவம்பர் 26 ஆம் தேதி அதேபோல அச்சிட்டு 50 ஆண்டு நிறைவு விழா இந்திய நாடாளுமன்றத்தில் மறைந்த வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை 20 ஆண்டுகளுக்கு முன் அடியேனும் கலந்து கொண்டு பார்த்ததும் உண்டு. அன்று வெளியான அரசியல் சாசன மூலப்பிரதியும் கையில் கிடைத்தது. அதில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மு.சி.வீரபாகு இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் தமிழில் தனது கையெழுத்திட்டுள்ளது ஒரு மகிழ்ச்சியான செய்தி. 












வரிசையாக பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் போன்றவர்களின் கையொப்பங்கள் எல்லாம் அந்த பட்டியலில் இருந்தது.




-கே எஸ் இராதாகிருஷ்ணன்
26.11.2019
#ksrpost




#இந்தியஅரசியல்சாசனம்70
#constitution70

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...