Thursday, December 31, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு 2016 தித்திப்பாக மலர்ந்துள்ளது.  அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருநெல்வேலி இனிப்பு அல்வா போல வரும் நாள்கள் இருக்க வேண்டும்.


திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா பற்றிய குறிப்புகள்
 

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா


திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !
மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !
இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளிவந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது (பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும்!)
உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட, சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டியுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது.

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! (ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது) இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா - ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது !

ARTICLE 370

Article 370 is integral to J&K's accession. Without it there is no agreement. And what's the problem with the guarantees of Article 370? LK Advani has said several times, including to me, that he would like the autonomy guaranteed by Article 370 for all states. Local land ownership laws don't have anything to do with Article 370. Many Indian states and regions have similar laws. Only the ignorant keep making it an issue.
"Jammu and Kashmir's original accession, like all other princely states, was on three matters: defence, foreign affairs and communications. All the princely states were invited to send representatives to India's Constituent Assembly, which was formulating a Constitution for the whole of India. They were also encouraged to set up constituent assemblies for their own states.

Most states were unable to set up assemblies in time, but a few states did, in particular Saurashtra Union, Travancore-Cochin and Mysore. In May 1949, the rulers and chief ministers of all the states agreed to accept the Constitution of India as their own constitution. The states that did elect constituent assemblies suggested a few amendments which were accepted. The position of all the states (or unions of states) thus became equivalent to that of regular Indian provinces. In particular, this meant that the subjects available for legislation by the Central and State governments was uniform across India.

In the case of Kashmir, the representatives to the Constituent Assembly requested that only those provisions of the Indian Constitution that corresponded to the original Instrument of Accession should be applied to the State. Accordingly, the Article 370 was incorporated into the Indian Constitution, which stipulated that the other articles of the Constitution that gave powers to the Central Government would be applied to Jammu and Kashmir only with the concurrence of the State's constituent assembly.

This was a "temporary provision" in that its applicability was intended to last till the formulation and adoption of the State's constitution. However, the State's constituent assembly dissolved itself on 25 January 1957 without recommending either abrogation or amendment of the Article 370. Thus the Article has become a permanent feature of the Indian Constitution, as confirmed by various rulings of the Supreme Court of India and the High Court of Jammu and Kashmir, the latest of which was in October 2015."

கனவுப்பிரியனின் கனவு உலகம்

எங்களின் தெற்குச் சீமை நாற்றாங்காலில் துளிர்விட்டுள்ள,  அன்புக்குரிய கனவுப்பிரியனின் படைப்புகள் யாவும் கவனத்தை ஈர்க்கக்கூடியது. ஒரு படைப்பாளி இயற்கை, சமுதாயம், மக்கள் பிரச்சனைகளின் மீது அக்கறையும் ஆர்வமும் இருந்தால்தான் தன்னுடைய ஆக்கப்பணிகளில் வெற்றிபெற முடியும்.

கனவுப்பிரியன் அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர். பாரதியை ஆதர்சனப் புருசனாகக் கொண்டு, தன் பணிகளை இலக்கிய உலகிற்கு ஆற்றிவருகின்றார்.  முத்துக் குளிக்கும் தூத்துக்குடி நகரில் பிறந்து, சாதாரண நடுத்தர மக்களோடு பழகி, அவர்களுடைய பாடுகள், நிலைமைகளைக் கொண்டு தன்னுடைய படைப்புகளை மக்களிடமிருந்தே உருவாக்கி இருக்கின்றார்.

குறிப்பாகத் தூத்துக்குடி, நெல்லை, தூத்துக்குடி, காயல்பட்டிண இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, ஆழமாகச் சிந்தித்து, சமுதாய அவலங்களையும் நிகழ்வுகளையும் தன் படைப்புத் திறனில் உருவாக்கியிருக்கின்றார். தூத்துக்குடி தெருக்களில் இளம் வயதில் அலைந்தபோது கண்டகாட்சிகள், அவ்வட்டாரத்தில் பயணிக்கும்போது அவரை ஈர்த்த செய்திகளும் நிகழ்வுகளின் பாதிப்புகளே அவரது படைப்புகள். அந்தப் படைப்புகளின் தொகுப்பாக இந்த கூழாங்கற்கள் சிறுகதைத் தொகுதி வெளியாகின்றது.  இப்படைப்பில் கனவுப்பிரியனின் நெல்லை, தூத்துக்குடி வட்டார மக்களின் பாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் லாவகமாகத் தன்கதைகளில் எடுத்துச் சென்றிருக்கிறார். 

கனவுப்பிரியன் அவருடைய சகா கார்த்திக் புகழேந்தி மூலம் அறிவேன். எப்படி கார்த்திக் புகழேந்தி கடந்த ஓராண்டுகளுக்கு முன்னால் இலக்கிய உலகின் வாசனையே இல்லாமல் வியாபாரஉலகத்திலிருந்து வியப்படையும் வகையில் தன் எழுத்துகளால் மின்னுகின்றாரோ அதேப்போல கனவுப்பிரியனும் வளைகுடா நாட்டில் தன்னுடைய பணிகளுக்கு மத்தியில் ஓய்வு நேரங்களில் அறையிலிருக்கும்போதுத ன்னுடைய மடிக்கணினி மூலமாகத் தன்னுடைய கதைகளை உருவாக்கியிருக்கிறார் இந்த ஏகலைவன்.

எப்படி திருவனந்தபுரம் சாலைத் தெரு மளிகைக் கடையில் அமர்ந்து கொண்டு ஆ.மாதவன் தன்னுடைய இலக்கியப் படைப்புகளைப் படைத்தாரோ அதுபோல கனவுப்பிரியனும் படைப்புலகில் பேரும் புகழும் பெறவேண்டும்.
கி.ரா என்னிடம் பேசும்போது,  “கனவுப்பிரியனின் இரண்டு கதைகளைப் படிச்சேன். பரவாயில்லை தொடர்ந்து எழுதலாம் இந்ததம்பி” என்றார்.  இதே கருத்தைத்தான் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நண்பர். சாத்தூர். லெட்சுமண பெருமாள் எழுத்தைக் குறித்து பெருமைபட பேசிய கிராவின் குரல் கனவுப்பிரியனைப் பற்றிச் சொல்லும் போதும் ஒலித்தது.


வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறைகளையும், அவர்களது மகிழ்ச்சியான விசயங்களையும் கதைகளாகப் படைத்துள்ளார். கரிசல் இலக்கியத்தில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராவினுடைய கரிசல் காட்டுக்க டிதாசிகளையும், கதைகளையும் படித்து தன் கதையம்சத்தை உருவாக்கியவர்.  கிராவைத் தன் பிதாமகனாக நேசிப்பவர்.

எங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணித் தண்ணீரைக் குடித்தவர்களுக்கும், கரிசல் மண்ணின் சவருத் தண்ணீர் குடித்தவர்களுக்கும் இலக்கியம் தண்ணிபட்டபாடு. தமிழகத்தில்எந்தமாவட்ட்த்துக்கும், எந்தவட்டாரத்துக்கும்இல்லாதபெருமைஎங்களுக்குஉண்டு. 
சாகித்ய அகாதமி விருதுகளை அதிகமாகத் தட்டிச்சென்றவர்களே நாங்கள்தான். ரா.பி.சேதுப்பிள்ளை,  ஆ.சீனிவாசராகவன், பி. ஸ்ரீ ஆச்சார்யா தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வள்ளிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தோப்பில் முகம்மதுமீரான், பூமணி, சு. சமுத்திரம், ஜோ டி குருஸ், ருத்ர துளசிதாஸ் இன்னும் சொல்லப் போனால் கரிசல் இலக்கியத்தை கொண்டாடும் மேலாண்மை பொன்னுச்சாமிஎன இந்தியாவிலே எங்கும் தென்படாத அளவில் தெற்குச் சீமையில் இராஜவல்லிபுரம் கிராமத்தில் ராபி.சேதுப்பிள்ளையும் வள்ளிக்கண்ணனும், குக்கிராமமான இடைச்செவலில் கு.அழகிரிசாமியும், அவரது தோழர் கி.ராஜநாராயணனும் சாகித்ய விருதினைப் பெற்றது எந்த மாவட்டத்துக்காவது, எந்த மாநிலத்துக்காவது சிறப்புகள் உண்டா?
பாரதி, வ.ஊ.சி மட்டுமில்லாமல், திரிகூடராசப்பக் கவிராயர், வீரமா முனிவர், ராபர்ட் கார்டுவெல், ஜி.யு.போப். வ.வே.சு.ஐயர், ரெய்னீஸ் ஐயர், உமறுப்புலவர், சுப்பிரமணிய சிவா, காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், ரசிகமணி. டி.கே.சி., ஆ.மாதவைய்யா, காசுப்பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதி, பெ.நா.அப்புசாமி, வெள்ளேகால் சுப்பிரமணிய முதலியார், மு.சு. பூரணலிங்கம் பிள்ளை, இ.மு.சுப்பிரமணியம் பிள்ளை, பண்டிதமணி. ஜெகவீரபாண்டியனார், திரிகூட சுந்தரம் பிள்ளை, டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், கி. பட்சிராஜன், .சி.பால்நாடார், தேவநேய பாவணார், பாஸ்கரத் தொண்டைமான்,  ச.வே.சுப்பிரமணியம், பா.ரா.சுப்பிரமணியம், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, என்று சொல்லிக் கொண்டே போகின்ற நீண்டபட்டியலான தமிழறிஞர்கள்…

உதயசங்கர், சுயம்புலிங்கம், சூரங்குடிமுத்தானந்தம், தேவதேவன், தேவதச்சன், சமயவேல், கிருஷி, நாறும்பூநாதன், போன்ற பல இன்றைய படைப்பாளிகளும் நீண்ட வரிசையில் கம்பீரமாக தமிழ் கூறும் நல்லுலகின் முன்நிற்கின்றனர்.

கலைகளின் வேர்களாகத் திகழ்ந்த ஆபிரஹாம் பண்டிதர், எஸ்.ஜி,கிட்டப்பா, விஸ்வநாததாஸ், காருக்குறிச்சி அருணாச்சலம் என இலக்கியம் கலைகளைகளை வென்றெடுத்த எங்களுடைய நிமிரவைக்கும் நெல்லைக்கு ஈடாக எந்த மண்ணும் கிடையாது. இது எங்கள் பெருமையும் செருக்கும் .
அது மட்டுமா தினத்தந்தியைத் துவக்கிய சி.பா.ஆதித்தனார், தினமணி ஆசிரியராக இருந்தடி. எஸ்.சொக்கலிங்கம், ஏன்.என்.சிவராமன், தினகரனைத் துவக்கிய கே.பி.கந்தசாமி, தினமலர் நிறுவனர் டி.வி.ராம்சுப்பையர், பிரபல பத்திரிகைகளில் ஆசிரியர்களாகத் திகழ்ந்த, திகழும் தினமலர் கிருஷ்ணமூர்த்தி, தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார், மாலன், தினமணி வைத்தியநாதன், சுதாங்கன் என எழுத்து, இதழியல் கலை, திரைப்படத் துறை
எங்கள் மண்ணின் எழுத்தாளர்கள் எப்படி மருத்துவத் துறையில் தனித்தனியாகச் சிறப்பு மருத்துவர்கள் இருப்பதைப் போல விவசாயிகளின் பாடுகளைச் சொல்லுவார்கள்; அல்லப்படும் தொழிலாளர்களின் கவலைகளைச் சொல்வார்கள்; கடலோரத்து மீனவச் சகோதரர்களுடைய கடும் உழைப்பைச் சுட்டிக் காட்டுவார்கள்;  நாட்டுப்புறவியல் எழுத்துக்கு எங்கள் கழனியூரானுடைய படைப்புகளே சாட்சியங்கள்; தலித்து மக்களின் இலக்கியங்களைப் பறைசாட்சும் பூமணி; மேற்கே பொதிய மலையின் தென்றலையும், குற்றாலச் சாரலையும் சொல்கின்ற படைப்புகள், திறனாய்வில் சிறப்புபெற்ற தி.க.சியின் எழுத்துகள்; தமிழர் பகுத்த ஐவகை நிலங்களின் வாழ்வியலை இலக்கியப் படைப்புகளாகக் கொண்டு வந்தவர்கள் எங்கள் நெல்லை மண்ணின் படைப்பாளிகள்.

இன்றைக்கு அந்த வகையில் தாமிரபரணித் தீராவாசத்தில் மழையடித்தும், நெல் மணிகளைப் பாவி, நாற்றாங்காலுக்கு நாள் குறிப்பது போல புதுப்புதுப் படைப்பாளிகள் தன்னகத் திறமைகளோடு புதுவரவாக வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், மாதவராஜ், சங்கரங்கோவில் செவக்காட்டு மண்ணைச் சொல்கின்ற கலப்பை ராமசாமி என்றைக்கும் சாகித்ய அகாடமி விருது பெறுவதில் நெல்லை மண் முதலிடத்தில்தான் இருக்கும். அதற்குத்தான் கனவுப்பிரியன் போன்ற இளம் படைப்பாளிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் பணி சிறக்க வாழ்த்துகள்.

சென்னை.        வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
29-10-2015.        இணை-ஆசிரியர்,  கதைசொல்லி
            பொதிகை-பொருநை-கரிசல்

Tuesday, December 29, 2015

தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூராரும், காயிதே மில்லத்தும்

1950, 1960 தமிழக அரசியலைக் குறித்து குறிப்புகளை தேடும்போது ஒன்று மனதில் பட்டது. பொது வாழ்க்கையில் தூய்மையோடு, நேர்மையான, எளிமையான தலைவராக இருந்த ஓமந்தூரார், சென்னை ராஜதானி பிரதமர் பதவியிலிருந்து (அன்றைக்கு முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) அவரே மன வேதனையோடு விலகினாரே? விவசாயிகளின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் அவர் தங்கியிருந்த கூவம் இல்லத்திலிருந்தே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, வாலாஜா சாலையில் உள்ள தர்பார் ஓட்டல் (இன்றைய அண்ணா சிலைக்கு எதிரில் - எல்லீஸ் சாலை துவக்கத்தில்) அருகே இருந்த வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வடலூர் வள்ளலார் இல்லத்தை நோக்கி சென்றுவிட்டாரே? நேர்மையான ஓமந்தூரார் அன்றைய பிரதமர் பதவியில் இருக்க முடியாமல், அன்றைக்கு மொட்டை கடிதாசி எழுதி அன்றைய பிரதமர் நேருவிடம் கோள் மூட்டிய விஷயங்களை எல்லாம் படிக்கும்போது வேதனை அளிக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த சூழலுக்கு யார் காரணம்? என்பதை தமிழக மக்களுக்கு தெரியவேண்டும்.

அதேபோல கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அற்புதமான மனிதநேய தலைவர்.

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற துணையாக இருந்தார்.

கேரள மஞ்சேரி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டபோதும், வெறும் வேட்பாளர் மனுவை மட்டும்தான் தாக்கல் செய்வார். பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறுவார். தமிழகத்தில் பிறந்து கேரள மண்ணில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் இல்லை. திருநெல்வேலி பேட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்.

நானே கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே பஸ்ஸுக்காக காத்திருந்ததை பார்த்துள்ளேன். நீண்ட இஸ்லாமிய தொப்பி வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் யாரையும் சந்திக்கும்போது அன்பாக பேசுவார்.

தேர்தலுக்கு மக்களிடம் வேஷம்போட்டு வாக்கு கேட்காமல், வெற்றி பெற்றவுடன் தொகுதியிலேயே இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பணியை செய்வார். இப்படி ஒரு மாமனிதரை யாராவது பார்த்ததுண்டா?

ஓமந்தூராருக்கு ஏற்பட்ட அந்த வேதனை இன்று வரை வெளிவரவில்லை. அது மட்டுமல்ல ஓமந்தூராரை யாரென்று கேட்டால் இன்றைக்கு பலருக்கு தெரியவில்லை. சினிமாவில் நடித்த ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், விஜயகாந்தையும், கொண்டாடுகின்ற மக்கள் தியாக சீலர்களை நினைத்துப் பார்க்காமல் இருப்பதுதான் இன்றைக்கு புரையோடிய அரசியல் நிலை.

மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு நோய் நொடி என்றால் யார் நல்ல மருத்துவர் என்று விசாரித்து அவரை பார்ப்பது போல, அதைவிட முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாடு. நாட்டை ஆட்சி செய்து பரிபாரம் செய்யவேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டாமா?

எத்தனை பேர் ஓமந்தூராரையும், காயிதே மில்லத் உடைய அணுகுமுறைகளை அறிந்துள்ளார்கள்? அப்படிப்பட்ட தலைவர்களை நாம் கொண்டாட வேண்டாமா? மக்கள்தான் இறையாண்மை. அந்த இறையாண்மையை பொருத்தமானவர்களிடம் வழங்க வேண்டும். இறையாண்மை ஒன்றும் கேளிக்கை, வேடிக்கை பொருள் அல்ல.

ஓமந்தூரார் பதவி விலகிய காரணம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு யார் பொறுப்பாளிகள் என்பதை அறிய வேண்டும். அன்றைக்கே மொட்டை கடிதாசி வந்துவிட்டது தமிழக அரசியலில்.

Julius Caesar

"Let me have men about me that are fat;
Sleek-headed men and such as sleep o' nights;
Yond' Cassius has a lean and hungry look;
He thinks too much: such men are dangerous."
- Julius Caesar from "The Tragedy of Julius Caesar" (1.2.192)

Fatafat Jayalaxmi

Jayalakshmi Reddy, whose popular screen name Fatafat Jayalakshmi (also Phataphat Jayalaxmi) (1958–1980) was a Teluguactress who was also popular in Tamil films. In Malayalam movies she was known as Supriya.

She made her debut in 1972 in A. Vincent's Malayalam movie Theerthayathra with screen name Supriya, followed by Ithu Manushyano? in 1973. In 1974 she made her Tamil debut in K Balachander’s film Aval Oru Thodar Kathai credited as Jayalakshmi. She became a household name with her popular dialogue ‘Fatafat’ (meaning quickly) in the movie. Her notable films include Aval Oru Thodar Kathai, Anthuleni Katha, Aarilirunthu Arubathu Varai and Mullum Malarum. She had co-starred with top actors like Rajinikanth, Kamal Haasan, Krishna, NTR and Chiranjeevi.

அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்....

கடந்த நவம்பர் 26ம் தேதி அரசியல் அமைப்பு சட்ட நாள் அன்று, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அவர்கள் பேசும்போது நாட்டு நலனுக்காக நூற்றுக்கும் அதிகமான திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தியுள்ளோம் என்ற இன்றைக்கு அவருடைய முழுப் பேச்சை படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அவருடைய மாமியார் இந்திரா காந்தி அவர்கள் அவசர காலத்தில் கொண்டு வந்த 42வது அரசியலமைப்பு திருத்தம் நியாயம்தானா? அந்த திருத்தத்தினால் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சி எல்லாம் குழி தோண்டி புதைக்கப்பட்டதே.

மற்றொரு திருத்தம், 39வது திருத்தம் என்ன சொன்னது? இதன்படி தேர்தல் தாவா மனுக்கள் எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியாது என்று திருத்தப்பட்டதை தவறு என்று நீதிமன்றம் குறிப்பிட்டதே? இந்திரா காந்தி அவர்கள் ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என்று ராஜநாராயணன் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராவுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்ததினால் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவசர அவசரமாக 17 மாநில சட்டமன்றங்களிலும் 1975 ஆகஸ்ட் 9ம் தேதி ஒரே நாளில் சனிக்கிழமை அன்று விடுமுறை நாள் என்றெல்லாம் பார்க்காமல் இந்திரா காந்திக்காக அவசர அவசரமாக சட்டம் கொண்டுவரப்பட்டதே? இது சோனியா காந்திக்கு தெரியாதா?

42வது திருத்தத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அவசியம் இல்லை என்று கூட சட்டத் திருத்தத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதே? இப்படி அபத்தமான திருத்தங்களையும், ஜனநாயகத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டதே? இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியாதா? இது ஜனநாயகமா? இதில் என்ன மக்கள் நலன் உள்ளது?

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாம் மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜனநாயக பூக் காட்டில் இவையெல்லாம் களைகளாக அன்றைக்குத் தெரிந்ததே? இன்றைக்கு சோனியா இதை நியாயப்படுத்தி பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
 
 


கடனாளியாக தமிழ்நாடு - இதிலிருந்து மீள முடியுமா?


இந்தியாவில் பல மாநிலங்களில் இன்றைக்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியமும் மற்றும் ஓய்வு ஊதியமும் வழங்க முடியாமல் தவிக்கின்றன. அந்த நிலைமை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொருளாதார நிபுணர்கள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ. 2,11,483 கோடியாகும். தனி நபர் கடன் சுமை ரூ.28,778. வட்டி உயர்வு மட்டும் ரூ.3,000 கோடி உள்ளது. இப்படி நிலைமை சென்றால் தமிழக அரசு திவாலாகும்.

பாண்டிச்சேரி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைமை வந்தபோது மத்திய அரசிடம் சிறப்பு நிதியை பெற்று கரையேறியது. அதேபோல பீகார் அரசும் இதை நிலையில் உள்ளது. கடன் ஒரு பக்கம், வளர்ச்சி திட்டங்கள் இல்லை. வெறும் அறிவிப்புகள்தான் உள்ளன.

இப்படியான தமிழக அரசின் அந்தரங்கங்கள் மக்கள் மன்றத்திற்கு தெரியவில்லையே? எப்படி எதிர்காலம் அமையுமோ என்பது கேள்விக்குறி தான்.

ராஜ்ய சபாவா? கிளப்பா? - மணீஷ் திவாரி

கடந்த 26.12.2015 டெக்கான் க்ரானிக்கல் ஏட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தைப் பற்றி எழுதிய பத்தியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வியாபாரிகளும், கார்ப்பரேட் கம்பெனியைச் சேர்ந்தவர்களும் வந்துவிட்டனர். ராஜ்ய சபா ஒரு கிளப் ஆகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு யார் காரணம்? தகுதியானவர்கள் ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்படுவதில்லை. எப்படி மருத்துவக்கல்லூரியில் பணத்தைக் கட்டி, படிக்க இடத்தை பெறுகிறார்களோ, அதேபோல பணத்தை வாரி இறைத்து மல்லையா, தமிழகத்தை சேர்ந்த மறைந்த எம்.ஏ.எம்.இராமசாமி போன்ற மக்கள் பணி இல்லாமலேயே அந்த பதவியை விலைக்கு வாங்கி விடுகின்றனர். தகுதியே தடையாக இருப்பதால் நல்லவர்களோ, வல்லவர்களோ, ஆற்றலாளர்களோ அந்த அவைக்கு இப்போது செல்வது கடினமாகிவிட்டது. கற்றவர்கள், ஆற்றலாளர்கள் செல்லவேண்டிய அவை, பணக்காரர்கள் செல்கின்ற கேளிக்கை அவையாக மாறிவிட்டது. இந்த புரையோடிய நிலையை மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதையெல்லாம் மனதளவில் பார்த்து வேடிக்கை பொருளாகிவிட்டது. ராஜ்ய சபாவிற்கு செல்வது கடமையாற்றவோ, பொறுப்பை செய்யவோ அல்ல. தன்னுடைய பெயருக்குப் பின் M.P. என்ற அசோக சின்னம் பொறித்த லட்டர் பேட் வேண்டும்.

இப்படியும் வேடிக்கைக் காட்சிகள் அரசியல் களத்தில் நடக்கின்றது.

மானமிகு படைப்பாளி ஆ. மாதவன்

மிகத் தாமதமாக மூத்த படைப்பாளி ஆ. மாதவன் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.  ஒரு முறை 1983 காலகட்டங்களில் ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இது குறித்தான ஒரு கூட்ட நிகழ்வில் கலந்துகொள்ள சென்றேன். அப்போது கி.ரா. வும் திருவனந்தபுரம் வந்திருந்தார். நகுலனை சந்தித்துவிட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் எதிர்முனையில் உள்ள சாலைத் தெருவிலுள்ள அவருடைய கடையில் சந்தித்தோம். 

கி.ரா. மீது அன்பையும் பாசத்தையும் கொண்டிருந்ததை அப்போது பார்க்க முடிந்தது.  திராவிட இயக்க இதழ்களைப் படித்து தமிழ் மீது பற்று ஏற்பட்டு அந்த தூண்டுதலில் எழுதத் துவங்கினார்.  இன்றைக்கு தமிழ் படைப்புலகத்தில் மூத்த நாவல் ஆசிரியராகவும், சிறுகதை ஆசிரியராகவும், தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரையாளராகவும் திகழ்கின்றார். மானிட வாழ்க்கையில் யதார்த்தத்தை எளிதாக தன்னுடைய படைப்பில் சொல்வார்.  அன்றாடம் சந்திக்கும், தட்டுப்படும் மனிதர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக தன்னுடைய கதைகளில் படைப்பார்.  அவருடைய மொழி நடையில் இடதுசாரி பார்வையுடைய அரவணைப்பும் இருக்கும். அன்றாட திருவனந்தபுர வாழ்க்கைதான் இவருடைய படைப்புலகம்.  தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பண்பாட்டு செறிவை இவருடைய படைப்பில் காணலாம். 

இந்த சூழலில்தான் கடைத்தெரு கதைகளை அவர் படைத்தார். அந்தத் தெருவில் யாரிடம் கேட்டாலும் அவரை முக்கியமான மரியாதைக்குரிய ஆளுமை என்று தெரியவந்தது. அவருக்கு சொந்த ஊர் செங்கோட்டை.  அவருடைய தகப்பனார் பேருந்தில் நடத்துனராக இருந்தார்.  அப்போது செங்கோட்டை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்தது.  மலையாள வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் ஒரு பாத்திரக் கடையில் வேலையில் சேர்ந்து அப்போதுதான் பல்வேறு மொழிகளில் வெளிவந்த குறிப்பாக ரஷ்ய, ஆங்கில, பிரெஞ்சு இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்தார். அதே சமயத்தில் தமிழை சிறுக சிறுக படித்து தொடக்கத்தில் கழுமரம் என்ற படைப்பை படைத்தார்.  கடைத்தெருவின் கதைசொல்லி என்று அவரை அழைப்பதுண்டு. கிட்டத்தட்ட 1953லிருந்து எழுத ஆரம்பித்து 82 வயதில்தான் சாகித்ய அகாதமிக்கு அவருடைய முகவரி தெரிந்துள்ளதோ என்பது வேதனையான விசயம்.  எந்த அரசியல் சார்பு இல்லாமலும் மென்மையாக அமைதியாக தனித்தன்மையோடு தன்னுடைய வணிகத்தை செய்துகொண்டு 62 ஆண்டுகள் தன் இலக்கிய பணிகளை செய்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இலக்கியச் சுவடுகளாக வெளிவந்து அதற்குத்தான் தற்போது சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தகழி, கேசவ் தேவ் போன்றவர்களுடைய படைப்புகளை படிக்க முற்பட்டு இலக்கியத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.  சிறுவர்களுடைய சஞ்சிகைகளையும் படித்து தேவன், லட்சுமி போன்றோருடைய தமிழ் படைப்புகளை படிக்கத் துவங்கினார்.  புதுமைப்பித்தன் குடும்பமும், இவருடைய குடும்பமும் நட்பில் இருந்தது.  கவிக்குயில் என்ற இதழை நடத்திய திருவனந்தபுரத்து எஸ்.சிதம்பரம், புதுமைப்பித்தனுக்கும், தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமியையும் நண்பர்களாக கொண்ட சிதம்பரத்துக்கும் இவருக்கும் நட்பு இருந்தது.

இதனால் இவர் இலக்கிய வட்டத்துக்கு வந்து ரகுநாதன், அழகிரிசாமி, நா.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்ற ஆளுமைகளோடு ஆ. மாதவனுக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது அரு. ராமநாதன் நடத்திவந்த காதல் என்ற மாத இதழ் இளைஞர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தது.  அந்த இதழில் ஆ. மாதவனும் எழுதினார்.  அதே காலகட்டத்தில் ந.பா.வின் தீபம் இதழிலும் 1966ல் கடைத்தெரு கதைகளின் முதல் கதையாக பாச்சி என்ற சிறுகதை வந்தது.  தி.க.சி. ஆசிரியராக இருந்த தாமரையிலும் தொடர்ந்து எழுதினார். 

40 பக்கங்களுக்கு மேலாக வந்த எட்டாவது நாள் என்ற குறுநாவல் தாமரையின் சிறப்பிதழில் வெளிவந்தது.  அதன்பிறகு காளை குறுநாவலும் மற்ற கதைகளும் தொடர்ந்து தீபம், கணையாழி, தாமரை போன்ற ஏடுகளில் வெளிவந்தன.

மலையாள வட்டார பழக்க வழக்கங்களோடு, அங்கு வாழும் தமிழர்களுடைய ஏற்ற, இறக்க வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு நிகர் இவர்தான்.  புனலும் மணலும் என்ற நாவல் உருப்பெற்ற பிறகுதான் இவரை பலர் திரும்பிப் பார்த்தனர்.  ஆரம்பக்கட்டத்தில் சிறுகதைகளை எழுதி, படிப்படியாக 1960 காலகட்டத்தில் நாவல்களை எழுத ஆரம்பித்தார்.  இவருடைய கதைகளில் அமைதியான நையாண்டியும், கேலியும் இருக்கும். 

இவருக்கென்று ஒரு தனிப் பாணியை வளர்த்துக்கொண்டு இலக்கியத் தளத்தில் அறுபது ஆண்டுகளாக ஓர் ஆளுமையாக திகழ்வது சாதாரண விஷயம் இல்லை.  அக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி., கல்லூரியில் பட்டங்கள் பெற்றவர் கூட இலக்கியப் படைப்பாளியாக வேண்டும் என்று முயற்சித்து வெற்றி பெறவில்லை. பள்ளிக்கே ஒதுங்காத கி.ரா. வும், பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத ஆ. மாதவனும் தமிழ் இலக்கியத் தளத்தில் பிதாமகன்களாக திகழ்வது ஒரு அதிசயமான நிகழ்வுதான் என்று பார்க்கவேண்டும்.

திருவனந்தபுரம் நகரத்தில் ஜன நெருக்கடியான சாலைத் தெருவில் கடை வைத்துக்கொண்டு வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு சிந்தித்து கதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல.  1974ல் வெளிவந்த கடைத்தெரு கதைகள் சாலைத் தெருவில் நடமாடும் மலையாள தமிழ் மக்களின் சாதாரண மக்களுடைய அன்றாட வாழ்க்கையை சொல்கின்றது. புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து, தூவானம் படைப்புகளையெல்லாம் படிக்க ஆரம்பித்தால் அதை முடித்துவிட்டுதான் வேறு காரியங்களில் ஈடுபட மனம் செல்லும்.  புனலும் மணலும், என்ற படைப்பு திருவனந்தபுரம் நகரத்தில் ஓடும் கரமனை ஆற்றோரத்தில் வாழும் மானிடர்களைப் பற்றி, அவருடைய வாழ்க்கை அம்சங்களைப் பற்றியும் சொல்கின்றது.  அந்தக் கதையில் வரும் அங்குசாமி மூப்பன் காட்டும் உதாசினமும், வில்லத்தன்மையும் கொண்ட பாத்திரத்தை மாதவன் தன்னுடைய சொல்லாடலில் சிறப்பாக சொல்கிறார். இயற்கையை தன்னுடைய பேராசைக்காக மனிதன் எப்படியெல்லாம் நாசப்படுத்துகிறான் போன்றவை இவரது கதையாடலில் உள்ளன.  இவருடைய மனைவியும், இவருடைய மகன் 35 வயதிலே இறந்த துயரங்களையும் ஆற்றிக் கொண்டு இலக்கியப் பணியை மலையாள கரையோரம் செய்வது இவருக்கே உள்ள தனி தைரியம் ஆகும்.  திருவனந்தபுரத்தில் வாழ்ந்த நகுலனும், வாழ்கின்ற நீல. பத்மநாபனும், நெல்லை சு. முத்துவும் போன்ற தமிழ் படைப்பாளிகளையும் இவரோடு சேர்த்து எண்ணிப் பார்க்க வேண்டும்.  தமிழகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்கின்ற அனைவரும் ஆ. மாதவனையும், நீல. பத்மநாபனையும், நகுலன் இருந்தபோது அவரையும் சந்திக்காமல் தமிழகத்திற்கு திரும்ப மனம் ஒப்பாது.

ஆ. மாதவன் அவர்கள் நல்ல பண்பாளர், நட்பையும் தொடர்பையும் வாஞ்சையோடு மதிப்பவர்.  அப்படிப்பட்ட அவருக்கு கால தாமதமாகத்தான் சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது என்பது அனைவரது கருத்து. இவருக்கு இந்த விருதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இவரும் 'கதைசொல்லி' ஆதரவாளர். 'கதைசொல்லி' களத்தில் இயங்குபவரும் கூட. 'கதைசொல்லி' சார்பில் ஆ. மாதவனுக்கு வாழ்த்துக்கள்.

Monday, December 28, 2015

கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்

நேற்று (26.12.2015) கோவையில் கே.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடந்த ஆய்வுக் கட்டுரை கருத்தரங்கில் ஏழுத் தொகுப்பு நூல்களை வெளியிட்டு கரிசல் இலக்கியத்தைப் பற்றி நான் ஆற்றிய உரையின் சுருக்கம். இந்நிகழ்வில் திருப்பூர் கிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜோ டி குருஸ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, ஸ்டாலின் குணசேகரன், அக்கல்லூரியின் தாளாளர் கே.எஸ். கீதா, இக்கருத்தரங்கத்தின் நெறியாளர் சதாசிவம் கலந்துகொண்டனர்.

கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்

உலகில் இன்றைக்கு மூத்த மொழியாக பழக்கத்தில் இருப்பது கன்னித் தமிழும், சீனமும், அரபும் ஆகும். இதோடு பண்டைய மொழிகளான லத்தீன், ஹிப்ரு போன்ற பல மொழிகள் அழிந்துவிட்டன.

தமிழ்மொழிக்கென்றே தனியான பல கீர்த்திகள் உள்ளன. அது வேறு எந்த மொழிக்கும் இல்லை. தமிழில் மண் சார்ந்த வட்டார இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், பொதுவுடைமை இலக்கியங்கள், தேசிய  சிந்தனை கொண்ட இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண்ணிய இலக்கியங்கள், தொழிலாளர் இலக்கியங்கள், இசை இலக்கியங்கள் என பலவகைப் படுத்தலாம். இலக்கணமும், இலக்கியமும் தமிழில் செழுமையானது. அக, புற இலக்கியங்கள் தமிழில் மட்டும் உள்ளன. தமிழின் இலக்கிய வரலாறு நெடிய வரலாறாகும்.

இலக்கியம் என்பது ஒன்றுதான். உலகம் எங்கும் ஆயிரக்கணக்கான மொழிகளில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அதுபோல தமிழ்மொழியிலும் காலகாலமாக இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இன்றும் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்மொழியிலேயே கரிசல் இலக்கியம், கொங்கு மண்டல இலக்கியம், தஞ்சை வட்டார இலக்கியம், மதுரை மண் இலக்கியம், நாஞ்சில் நாட்டு இலக்கியம், நெல்லைச் சீமை இலக்கியம், பழைய ஆற்காட்டு பகுதி இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்தலாமே?

நம் முன்னோர்கள் தமிழ் இலக்கியத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்தார்கள். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் வாழ்கிற மக்களின் வாழ்வியல் அனுபவமும், கடலும் கடல்சார்ந்த இடத்தில் வாழ்கிற மக்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஒன்றாகாது. எனவே தான் நம் முன்னோர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தார்கள்.

பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் எழுதுவதும் இலக்கியம்தான். ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்கிற மற்றோர் எழுத்தாளன் எழுதுவதும் இலக்கியம் தான். புவியியல் அமைப்புப்படி இந்த இலக்கியங்களை நாம் வகைப்படுத்த வேண்டியதிருக்கின்றது.

பல பன்முகத் தன்மை கொண்ட தமிழ் இலக்கியத்தில் வட்டார மண் சார்ந்த இலக்கியம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது. அந்த வகையில் தெற்குச் சீமையில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களின் தென்பகுதியில் உள்ள கரிசல் மண்ணில் உதித்த இலக்கியங்கள் விவசாயிகளுடைய பாடுகளையும், ரணங்களையும் வெளிப்படுத்துகின்றன. அக்னி வெயிலிலும், கந்தக பூமியிலும் அங்குள்ள மக்கள் சந்திக்கின்ற வதைகள், மகிழ்ச்சிகளை அந்த மண் சார்ந்த மொழி நடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில், கரிசல் நிலப்பகுதி தனித்த புவியியல் அமைப்பைக் கொண்டதாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் அனுபவத்தில் இருந்து கரிசல் நிலப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் மாறுபட்டதாக உள்ளது. காவிரி தீரவாசத்தில் அங்குள்ள மக்கள் கலைகளிலும், இசையிலும் நாட்டமுள்ளவர்கள். அம்மண்ணில் உதித்த தி.ஜானகிராமன், மௌனி போன்றவர்கள் அந்த மண் வாசனையோடு தஞ்சை மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அதிகமாக சொல்லியதுண்டு. ஆனால் கரிசல் பகுதியின் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் போராட்ட வாழ்க்கைதான்.

பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே கரிசல் நிலம் திகழ்கிறது. இங்கு மழையை நம்பி மக்கள் விவசாயம் செய்து வாழ்கிறார்கள். இப்பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. சிவகாசியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் தீப்பெட்டித் தொழிலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சுத் தொழிலும் இன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் மண்ணையும் மழையையும் நம்பி வாழ்கின்ற இப்பகுதி மக்களின் வாழ்வியல் அனுபவம் என்பது தனித்தன்மையானதாகும். கடுமையான உழைப்பும், மன உறுதியும் கொண்ட இப்பகுதி விவசாயிகள் கடந்து வந்த பாதை மிகவும் கடுமையானது. இன்றும் பெரிய அளவில் இப்பகுதியில் விவசாய புரட்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. இத்தகைய வாழ்வியல் சூழ்நிலையில் வாழ்ந்து வருகிற மக்களின் அனுபவத்தை இங்கு வாழ்ந்த எழுத்தாளர்கள் தன் எழுத்தில் பதிவு செய்தார்கள்.

இந்த வட்டாரத்தில்தான் விவசாயிகளின் போராட்டங்கள் 1970களின் துவக்கத்தில் ஆரம்பித்து அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளினுடைய புரட்சியே இங்கு நடந்தது. கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சை நிமிர்த்தி போராடிய விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். குறிப்பாக கோவில்பட்டி மெயின் ரோட்டிலும் என்னுடைய கிராமம் குறிஞ்சாகுளத்தில் 7 விவசாயிகளும் விவசாயப் போராட்டத்தில் காவல்துறையினால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அது மட்டுமல்லாமல் சங்கரன்கோவில் அருகே உள்ள பநவடலி சத்திரம், இராஜபாளையம் அருகே உள்ள சிமெண்ட் ஆலை இருக்கின்ற ஆலங்குளத்திலும் துப்பாக்கி சூடுகள் நடைபெற்றன.  வானம் பார்த்த பூமியில் வறட்சியின் காரணமாக இயற்கையாகவே போராடும் மன திடத்தை விவசாயிகள் பிறப்பிலேயே பெற்றிருந்தனர். இது ஒரு வீர பூமி. ஏனென்றால் இப்பகுதியிலிருந்து இராணுவத்தில் அதிகமானவர்கள் பணியாற்றியதுண்டு.

இப்படிப்பட்டவர்களின் வாழ்வியலை சொல்வதுதான் கரிசல் இலக்கியம்.

கரிசல் பூமியில் பிறந்து வாழ்வில் சாதனைகள் படைத்த அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத் துறையினர், சிற்பிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு தனி நூலாகிவிடும்.

கரிசல் இலக்கியம் என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் என்ற குக்கிராமத்தில் பிறந்த கி. ராஜநாராயணன் அவர்கள். தான் வாழும் கரிசல் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியலில் உள்ள இன்ப துன்பங்களை, அழகுணர்ச்சிகளை, இறையியலை, கலை நுகர்வை, உணவுப் பழக்கவழக்கங்களை, கலாச்சார கூறுகளைத் தன்னுடைய படைப்பில் மிக நுட்பமாகப் பதிவு செய்தார். அதுவரை எழுதப்பட்டு வந்த தமிழ் சிறுகதைகளின் தடத்தில் இருந்து மாறி புதிய வட்டார மொழிநடையில், புதிய கதைக்களத்தில் புதிய கருத்துக்களை மையமாகக் கொண்டு கி.ரா. சிறுகதைகளைப் படைத்தார். அப்போதுதான் மண் சார்ந்த வட்டார இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. எனவே தமிழ் இலக்கிய உலகமே கி.ரா.வின் படைப்புகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது.

கி.ரா. பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கு. அழகிரிசாமி. இருவரும் தோழர்கள். இவர்கள் நட்பின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கி.ரா. அவர்களுக்கு கு.அழகிரிசாமி அவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்தாலே தெரியும். இது கு.அ. வின் கடிதங்கள் என்று நூலாக வெளியாகியுள்ளது. ஆனால் கு. அழகிரிசாமி கரிசல் இலக்கியம் என்ற முத்திரையுடன் தன் கதைகளைப் படைக்கவில்லை. கி.ரா. தான் கரிசல் இலக்கியம் என்ற கோட்பாட்டை முதன்முதலாக தமிழ் இலக்கியத்தில் முன்வைத்த முன்னத்தி ஏராக இருக்கிறார்.

முதன்முதலாக கரிசல் நிலம் பகுதியில் வாழும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை எல்லாம் 1980இல் தொகுத்து கரிசல் சிறுகதைகள் என்று கி.ரா.வே நூலாக வெளியிட்டார்.

கி.ரா. கரிசல் வட்டாரத்தில் நிலவும் வாய்மொழிக் கதைகளையும் எழுத்தில் பதிவு செய்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி கி.ரா.வின் சாதனைகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் வட்டார வழக்குச் சொல்லகராதி என்பது முதன்முதலாக கி.ரா. தயாரித்து அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா 1982ல் வெளியிட்டார்.

கி.ரா. இப்படி ஒரு இயக்கமாகச் செயல்பட்டால் கரிசல் எழுத்தாளர்களே அவரை முன்னிறுத்தி ஏர் என்றும், கரிசல் இலக்கிய கீதாரி என்றும் அழைப்பதுண்டு. கி.ரா. தான் மட்டும் எழுதியதோடு, கரிசல் பகுதியில் எழுதிக்கொண்டிருக்கும் சக எழுத்தாளர்களையும் எழுதும்படி தூண்டினார். இந்தத் தரவை கி.ரா.வின் நான்கு தொகுப்புக் கடிதங்களில் படித்தாலே புரியும்.

கி.ரா.வுக்கு அடுத்து பூமணியைக் குறிப்பிட வேண்டும். ஒரே கிராமத்தைச் சேர்ந்த கி.ரா.வும், கு.அழகிரிசாமியும் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றதைப் போலவே, பூமணியும் சாகித்ய அகாதமி விருது பெற்றார். பூமணியின் அஞ்ஞாடி என்ற நூல் அவ்விருதைப் பெற்றுத் தந்தது. சூரங்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். போத்தையா. இவர் ஒரு சிறந்த நாட்டுப்புற கலைகளின் களப்பணியாளர். ஆசிரியராகப் இருந்த எஸ்.எஸ். போத்தையா அப்பகுதியில் வாய்மொழியாய் உலவிய நாட்டுப்புறக் கதைகளையும் பாடல்களையும் சொலவடைகளையும், வழக்குச் சொற்களையும் சேகரித்துள்ளார். கி.ரா. அவர்கள் வழக்குச்சொல் அகராதி என்ற நூலைத் தொகுத்தபோது, எஸ்.எஸ். போத்தையா அவர்கள் வழக்குச்சொற்களை சேகரித்து உதவினார். இவர் கம்மவார் வாழ்வியல் சடங்குகளையும் தொகுத்துள்ளார். இவரின் நண்பர் சூரங்குடி ஆ. முத்தானந்தமும், கரிசல் இலக்கியத்தில் தன்னுடைய சுவடுகளை பதித்தவர்.

சுப.கோ. நாராயணசாமியும், வீர.வேலுச்சாமியும், கி.ரா.வுக்குப் பல நாட்டுப்புறக் கதைகளைச் சிறுவர் நாடோடிக்கதைகள், வழக்குச் சொல் அகராதிக்கான கலைச்சொற்களையும் சேகரித்துக் கொடுத்துள்ளார்கள். வீர. வேலுச்சாமியின் நிறங்கள் என்ற சிறுகதைத் தொகுதி கரிசல் இலக்கியத்தின் ஒரு மைல் கல் ஆகும். தெக்கத்தி ஆத்மாக்கள் என்ற குணச்சித்திரத் படைப்பை வழங்கிய ப.செயப்பிரகாசத்தின் சிறுகதைகள் கரிசல் மக்களின் வாழ்வியலை கலைநயத்துடன் சித்தரிப்பவை. 1965இல் மொழிப்போரில் பங்கேற்றவர். இவர்களைத் தொடர்ந்து கரிசல் இலக்கியத்தைத் தலைநிமிர வைத்தவர்களில் தனுஷ்கோடி ராமசாமிக்கும்  சோ.தர்மருக்கும் முக்கியப் பங்குண்டு. இவர்கள் ஒரு கால கட்டம். இதை அடுத்த காலக்கட்டத்தில் வேல ராமமூர்த்தியும், லெட்சுமணப் பெருமாளும் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

மேலாண்மை பொன்னுச்சாமி கலை அழகுடனும் முற்போக்குச் சிந்தனையுடனும், சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்தார். இவரும் சாகித்ய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளராவார். தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் தனித்துவமானவை. இவருடைய சகோதரர் கோணங்கியுடைய படைப்புகள் யாவும் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடுகின்றது. கோணங்கியின் ஆரம்பகால சிறுகதைகள் மண் வாசனையும், மனித நேயமும் மிக்கவை. இவரின் மதினிமார்களின் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. தற்போது வேறொரு தளத்தில் நாவல்களை எழுதி வருகிறார். கோணங்கியின் உலகம் தனியானது. இவர் கல்குதிரை என்ற பருவகால சீற்றத்தையும் நடத்தி வருகிறார்.

சுயம்புலிங்கம் தனித்துவமான மொழிநடையுடைய கரிசல் இலக்கியப் படைப்பாளி. இவரது கவிதைகளிலும் வட்டார வழக்குமொழி கொஞ்சும்.

இவர்களுக்கு அடுத்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாதவராஜும், உதயசங்கரும். மாதவராஜின் கதைகள் மயக்கம் தரும் நடை உடையவை. இவர் சிற்றிதழ் ஆசிரியர். தற்போது உதயசங்கருடைய பணியும் இத்தளத்தில் முக்கியமானது. கிருஷியும், நாறும்பு நாதனின் படைப்புகளும் முக்கியமானவை.

ஓவியர் கொண்டையராஜு குடும்பத்தைச் சார்ந்த மாரீஸ் கரிசல் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.

எட்டயபுரம் இளசை அருணாவும், இளசை சுந்தரம் ஆகியோருடைய கரிசல் இலக்கியப் பணிகளை மறக்க முடியாது.

கரிசல் மண்ணில் கோதை நாச்சியார் ஆண்டாள், ஆவுடையக்காள், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், உமறுப்புலவர், வ.உ.சிதம்பரனார், பாரதி, பொதி சுவாமிகள், நாவலர் சோமசுந்தர பாரதி என்ற ஆளுமைகளில் துவங்கி பன்மொழிப் புலவர் இராஜபாளையம் ஜெகந்நாத ராஜா, கி.ரா., கு.அழகிரிசாமி, தீபம் நா. பார்த்தசாரதி, ல.சண்முகசுந்தரம் என்ற பட்டியலில் பொன்னீலன், ஆர்.எஸ்.ஜேக்கப் (நெல்லை), எஸ். இராமகிருஷ்ணன் (மல்லாங்கிணறு), கவிஞர் தேவதச்சன் (கோவில்பட்டி), தேவதேவன் (தூத்துக்குடி), மாலன் (விளாத்திகுளம்), செம்மலர் எஸ்.ஏ. பெருமாள் (விருதுநகர்), பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் (கோவில்பட்டி), ரா. அழகிரிசாமி (சாத்தூர்), கணபதி (எ) மாறன் (குமிழங்குளம்), கவிஞர் சமயவேல், கொ.மா. கோதண்டம் (இராஜபாளையம்), கௌரிசங்கர் (கோவில்பட்டி), பாமா (வத்திராயிருப்பு), உதயசங்கர் (கோவில்பட்டி), அப்பாஸ் (கோவில்பட்டி), ஸ்ரீதர கணேசன் (தூத்துக்குடி), கு. சங்கரநாராயணன் (திருவில்லிப்புத்தூர்), ஜி. காசிராஜன் (கஞ்சம்பட்டி), பொ. ராமசாமி (சிவகாசி), பொன்ராஜ் (சிந்தப்பள்ளி), ருத்ர துளசிதாஸ் (சிவகாசி), பாரததேவி (சொக்கலிங்கபுரம்), கொண்டல்சாமி (ஒட்டநத்தம்), தமிழச்சி தங்கபாண்டியன் (மல்லாங்கிணறு), கழனியூரான், ஞானன் (சிவகாசி), இளசை மணியன், திடவை பொன்னுச்சாமி, அப்பண்ணசாமி, கவிஞர் லீனா மணிமேகலை (வ.புதுப்பட்டி),  கவிஞர் திலகபாமா (சிவகாசி), மதுமிதா, ரஜினி பெத்ராஜ் (இராஜபாளையம்) போன்ற கரிசல் இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் விரிந்துகொண்டே செல்லும். இந்தப் பட்டியல் முழுமையானதும் அல்ல.

கி.ரா.வும், அடியேனும் இணைந்து கரிசல் வட்டார தரவுகளை வெளிப்படுத்துகின்ற வகையில் கதைசொல்லி கந்தாய இலக்கிய இதழையும் நடத்துகின்றோம்.

கரிசல் இலக்கியவாதிகளின் பங்களிப்பு தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதது. மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் யாவரும் ஒவ்வொரு விதத்தில் தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்துள்ளார்கள் என்றாலும் அவர்களின் படைப்புகளில் எல்லாம் கரிசல் மக்களின் ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கை பல்வேறு விதங்களில் பல்வேறு வழிகளில் பதிவாகியுள்ளது.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நடைச்சித்திரங்கள், கடிதங்கள் என்று எதை எழுதினாலும் தனித்துவத்துடனும் வெக்கை வெயில் அடிக்கும் கந்தக பூமியில் கரிசல் முத்திரையுடனும் இவர்களின் சகல படைப்புகளும் திகழ்கின்றன.

தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக் கலாச்சாரவெளிக்கும், இலக்கியத்திற்கும், கரிசல் எழுத்தாளர்கள் செய்துள்ள பணிகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

புரோட்டா பிரியர்களுக்கு கவனத்திற்கு

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/41/43/46.

இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டையும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்...

கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்.

திங்கள் அன்று இறந்தவர் வயது 37 (மாரடைப்பு/) தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர். தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.

இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.
புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.

மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.
ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.

உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.

கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.
இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்...

ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் மறைவு தினம்

இன்று ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் மறைவு தினம் (1813-1846) 1829 லிருந்து மரணம் வரை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக ஆட்சி புரிந்தவர். சிறந்த ஆட்சி புரிந்ததோடு இவரே சிறந்த பாடகர். இசை அமைப்பாளர். 400 க்கும் மேலாக கர்னாட்டிக் பாடல் எழுதி இசை அமைத்திருக்கிறார். பன்மொழி வித்தகர். சமஸ்கிருதம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ்,ஒரிய்யா, ஆங்கிலம் என் பல மொழியிலும் வித்தகர். http://www.mp3tunes.tk/download?v=hfmF7CpYYN8 அவர் எழுதி இசையமைத்த “கிரபயா பாலயா சௌரே” பாடலை கேட்டுப்பாருங்கள்: ராகம்: சாருகேசி.பாடியது: சங்கரன் நம்பூதரி

Sunday, December 27, 2015

ஊடகங்கள் - Media

இளையராஜாவிலிருந்து இன்றைக்கு தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் வரை ஊடகங்களை விமர்சித்து குற்றம் சாட்டும் வகையில் நிலைமைகள் வந்துவிட்டன. இதற்கு காரணமென்ன?

துலாக்கோல் நிலையில் ஒரு காலத்தில் இயங்கிய செய்திதாள்களும், ஊடகங்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொண்டதனால்தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள்.

பத்திரிகைத் துறையில் பிதாமகன்களாக இருந்த ராம்நாத் கோயங்கா, ஏ.என். சிவராமன், விகடன் வாசன், சி.ப. ஆதித்தனார், இராமசுப்ப ஐயர், கல்கி ராஜேந்திரன் போன்றோர்கள் பத்திரிகை தர்மத்தை அறமாகவும், தவமாகவும் காத்தனர்.

இன்றைக்கு ஊடகங்களில் விவாதங்களில் கூட தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு நடத்துவதும், தினமும் நடக்கும் விவாதத்தில் சரியான விவாத பொருளும் இல்லாமலும், அதில் பங்கேற்பவர்கள் தகுதியெல்லாம் கவனிக்காமல் அழைப்பதும் ஏதோ விவாதம் நடத்தவேண்டும், இன்றைய நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்ற நிலைதான். பரபரப்பும், விமர்சனமும், என்ற நிலையில் செய்திகளை தந்தால் போதும் என்று நினைப்பது தவறானது. செய்தி ஊடகங்கள் தனிப்பட்டவருடைய சொந்தமாக இருக்கலாம். விருப்பு, வெறுப்புக்கு அப்பால் நடுநிலையோடு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலைப்பாட்டோடு இருந்தால்தான் பத்திரிகைத் துறையின் ஆளுமை வெளிப்படும். சிறுக சிறுக இந்தத் தன்மை சிதைந்துகொண்டு இருப்பது ஆரோக்கியமான நிலை இல்லை. ஒரு கட்டத்தில் மக்களே இம்மாதிரி நிலையை எதிர்த்து ஊடகங்களை நோக்கி வினாக்கள் எழுப்பலாம்.

நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடை என்ற முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகளுக்கு ஒப்ப செய்தி ஊடகங்கள் இருக்க வேண்டும். இந்த நிலையிலிருந்து தவறினால் மக்கள் மன்றம் இதை மன்னிக்காது.

பாலாறு பாழாகாமல், நீரோடும் பாலாறாக மாறவேண்டும்!

பாலாறு என்றால் வெறும் வறண்ட ஆறாக எப்போதும் காட்சி அளிக்கும். மணல் கொள்ளையில் பாலாறு பாழாகிவிட்டது. இந்த ஆண்டு மழையில் பல ஆண்டுகளுக்குப்
பின் வெள்ளமாக நீர் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது.

அப்பகுதி மக்கள் பாலாறு, தென்பெண்ணை ஆறுகள் இரண்டையும் இணைக்க வேண்டுமென்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கர்நாடக நந்திதுர்க்கத்தில் தொடங்கும் பாலாறு பின் ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் பாய்ந்து தமிழகத்தை அடைந்து 222 கிலோ மீட்டர் தமிழ் மண்ணில் பயணித்து கல்பாக்கத்தின் அருகே உள்ள வயலூரில் வங்கக் கடலில் கலக்கின்றது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட விவசாயிகளுக்கு பாசன வசதியும், குடிநீர் வசதிக்கும் இந்த ஆற்று நீர் பயன்படுகிறது. இந்த ஆற்றில் செல்லும் உபரி நீரை கிருஷ்ணகிரி அருகே உள்ள நெடுங்கல் அணையிலிருந்து சந்தூர் வழியாக, வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் துணை நதியான கல்லாற்றில் இணைக்க திட்டம் இருந்தும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்காக கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டவேண்டும் என்ற திட்டம் இருந்தும் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வீணாகும் நீரை, வாய்க்கால் வழியாக பயன்படுத்தி பாலாற்றை நீர் செல்கின்ற ஆறாக பார்க்க முடியும். வட மாவட்டங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி நீரோடும் பாலாறாக மாற்றவேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாகும்.


சற்று சிந்திப்பீர்!

மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதை சொல்கின்றோம் என்று செயல்படுகின்ற தொலைக்காட்சிகள், தங்களின் விளம்பரங்களில் சென்னைக்கு அருகே வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடுகள் என மக்களை கவரும் வகையில் ஒளிபரப்புகின்றன.  சென்னையில் நடந்த வெள்ள சேதத்துக்கு காரணம் ஏரி, குளங்களை கபளீகரம் செய்து ஆக்கிரமித்த இடங்களில் வீட்டு மனைகளும், அடுக்கு மாடி கட்டங்களும் கட்டியததுதான் காரணம் என்னும்போது, இப்படிப்பட்ட விளம்பரங்களை காட்டி மக்களை ஏமாற்றுகின்ற வகையில் தொலைக்காட்சிகள் நடந்துகொள்வது நியாயம்தானா?

கோவில்பட்டி கௌரிசங்கர், விழிப்புணர்வு கு.காமராஜ்

கடந்த இரண்டு நாட்களாக துக்கமான செய்திகள் மனதை வாட்டுவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களை

இழந்துவிட்டோமே என்ற சொல்ல முடியாத கையறு நிலை. கரிசல் இலக்கியத்தில் முக்கிய படைப்பாளியான கவிஞர் கௌரிசங்கர், விழிப்புணர்வு கு.காமராஜ் ஆகியோருடைய மறைவு வேதனையில் ஆழ்த்தியது.

கௌரிசங்கர் கோவில்பட்டியில் பிறந்து தமிழகம் அறிந்த கரிசல் இலக்கிய படைப்பாளி. கடந்த 19.12.2015 இரவு மாரடைப்பால் இறந்தார். 1980 களில் 'மழை வரும் வரை' என்ற கவிதைத் தொகுப்பும், முன்னூறு யானைகள், பின்செல்லும் குதிரை என்ற சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டார். தமிழ் இசையில் ஈடுபாடு கொண்டு காருக்குறிச்சி அருணாசலம் குறித்து ஓர் ஆவணப் படத்தையும் வெளிகொண்டு வந்தவர். கதைசொல்லி இதழோடு தொடர்பில் இருந்தவர். கி.ரா. மற்றும் எனக்கும் நண்பராக திகழ்ந்தவர் இன்றைக்கு இளம் வயதிலேயே அவர் காலமானது மறக்க முடியாத துக்கமான செய்தியாகும்.

சாத்தூர் ஏழாயிரம்பண்ணையில் பிறந்த விழிப்புணர்வு காமராஜும் மாணவப் பருவத்திலிருந்து தொடர்ந்து என்னோடு இருந்தவர். சில நேரங்களில் என்னிடம் ஆலோசனைகள் பெற்று தளங்களில் செயல்படக் கூடியவர். சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பலமுறை வற்புறுத்தியும், பார்க்கலாம் என்று என்னிடம் தட்டிக் கழித்தவர். கொடூரமாக விபத்தில் மறைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத கொடிய நிகழ்வாகும்.

கரிசல் வட்டாரத்தை சேர்ந்த இந்த இரண்டு நண்பர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு களப் பணிகள் ஆற்றிய தோழர்களை இழந்துவிட்டோம் என்ற துக்க செய்திதான் இதயத்தை தவிக்க வைக்கின்றது.

Friday, December 25, 2015

G . D . Naidu ....

இன்று நம் ஜி.டி. நாயுடு அவர்களின் பிறந்தநாள்..

முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர். 

மரக்கரியில் இயங்கிய பஸ்கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாதகாலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்திபெருமை
சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.வாய்ப்பு  கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்

Thursday, December 24, 2015

MP salaries

💥பணத்தாசை பிடித்து அலையும் பாராளுமன்ற பிரதிநிதிகள்

வருமானவரிதுறையை ஏய்க்க முயற்சிக்கும் குள்ளநரி கூட்டம்

தமிழக மக்கள் இயக்கம் கடும் கண்டனம்.....

நாட்டை சுரண்டும் நயவஞ்சகர் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்கள் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 தற்போது எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலோவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. 

பெரும்பாலான எம்.பிக்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று விரும்புகிறார்களாம். ஏனெனில், சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டால் உயர் வருமான வரி பிரிவில் தாங்கள் சேர வேண்டிவரும், வரி மூலம் அரசுக்கு அதிக பணம் சென்றுவிடும் என்பதால், அலோவன்ஸ் தொகையை உயர்த்தி கேட்கிறார்களாம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த அறிவிப்பு வெளியாகும் என்று 

. கடைசியாக 2010ம் ஆண்டில் சம்பளம் உயர்த்தப்பட்டிருந்தது. லோக்சபா அல்லது ராஜ்யசபாவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ரூ.29 ஆயிரம் செலவாகிறது. ராஜ்யசபாவில் விரையமாக்கப்பட்ட நேரத்தால், சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையிலும், சம்பள உயர்வுக்கு அனைத்து எம்.பிக்களும் கட்சி வேற்றுமையின்றி முயற்சி நடத்தியுள்ளது ஆளும் கட்சி, எதிர் கட்சி , உதிரிகள் கட்சிகள் மக்கள் வரி பணத்தை கொள்ளையடிப்பதில், ஊழல் செய்வதில் நாங்கள் ஒற்றுமை உணர்வோடு செயல்படுவோம் என்பதை நிருபிப்பதாக உள்ளது...

மத்திய அரசு நேர்முகவரி, மறைமுகவரி, தொழில் வரியை உயர்த்தி மக்கள் மீது சுமத்தும் போது, மவுன சாமியார்கள் போல் இருக்கின்றனர்...இந்த கயவர் கூட்டம்..

தொகுதி வளர்ச்சி,  மக்களின் நலன் இரண்டிலும் அக்கறை காட்டாமல், பல 
வகையில் மக்கள் வரி பணத்தை கொள்ளையடித்து கோடி, கோடியாய் குவித்து வைத்திருக்கும் இந்த பிராணா நிதிகள் , மாத சம்பளத்தை உயர்த்துவதில் துடிப்புடன் இருப்பதை தமிழக மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பாராளுமன்ற செலவுகளை கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்......நாட்டு மக்களை நிம்மதியோடு, நலமோடு வாழ வழி ஏற்ப்படுத்த வேண்டும்...

Arnab salary

அர்ணாப்புக்கு 5 கோடி ரூபாய் சம்பளமா? கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்,
♨டைம்ஸ்நவ் தொலைக்காட்சி சேனல் ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான அர்ணாப் கோஸ்வாமி மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.. அர்ணாப்பிற்கு 5 கோடி சம்பளமாமே என டிவிட்டரில் திரியை கொளுத்தி போட்டுள்ளார். சமீபத்தில், டெல்லி சட்டசபை எம்.எல்.ஏக்களுக்கான சம்பளத்தை உயர்த்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு சம்பளத்தை இருமடங்காக உயர்த்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்து அதை நிதித்துறை ஏற்றுக்கொண்டதாக தகவவல் வெளியாகியுள்ளது. அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலைதொடர்ந்து, வேலையே செய்யாத எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு அவசியமா? சம்பள உயர்வு எதற்கு? என்பது போன்ற தலைப்புகளில், டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனல் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

இன்றைய (24-12-2015) தினமணி நாளிதழில் “கிழக்குத் தொடர்ச்சி மலைகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது பத்தி.


Monday, December 21, 2015

கரிசல் இலக்கியம் வரைபடம்

கரிசல் இலக்கியம் என்பது தமிழ் கூறும் நல் உலகில் ஒரு முக்கிமயான மைல் கல் ஆகும். வானம் பார்த்த இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், தேனி மாவட்டத்தின் தென் பகுதியில் சில கிராமங்கள் அடங்கியதுதான் கந்தக பூமியான கரிசல் பூமியாகும். இங்குள்ள எந்தெந்த ஊர்களில் கரிசல் இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினர் என்பதுதான் இந்த வரைபடம் காட்டுகின்றது. இதை கி.ரா. தயாரித்து, கவிஞர் மீரா மேற்பார்வையில் 1984 கட்டத்தில் வெளியிடப்பட்ட வரைபடம்.



மதுரைக்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமானசேவை

வளைகுடா நாடுகளிலில் பணியாற்றும் நண்பர்கள் நீண்ட காலமாக மதுரைக்கு நேரிடையாக விமான சேவை வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அவர்களை சந்தித்து முறையிட்டது குறித்து கடந்த செப்டம்பர் 14, 2015 அன்று என்னுடைய (http://ksr1956blog.blogspot.in/2015/09/flights-from-gulf-to-madurai.html) வலைதளத்தில் எழுதியிருந்தேன். திரும்பவும் நேற்றைக்கு டெல்லியில் இது

மந்தமாக இருந்த இந்த பணிகள் சற்று வேகமெடுத்து உள்ளன. திரும்பத் திரும்ப இதற்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிகள் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சரியான பாதையில் மத்திய அரசு இது குறித்து பரிசீலித்து வருகிறது.
குறித்து அமைச்சரிடம் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

Sunday, December 20, 2015

விவசாயிகளின் தலைவர் யோகேந்திர யாதவுடன் சந்திப்பு

சுவராஜ் அபியான் அமைப்பின் தலைவரும், வட மாநிலங்களில் விவசாய உரிமைகளுக்கும், நலன்களுக்கும் போராடும் யோகேந்திர யாதவுடன் தமிழக விவசாய நலன்கள் புது தில்லியில் கடந்த டிசம்பர் 17, 2015 அன்று தினமணி ஆசிரியர் நண்பர் கே. வைத்தியநாதனும், நானும் காந்தி ஃபவுண்டேஷன் வளாகத்தில் மாலை நேரத்தில் சந்தித்தோம். அப்போது, இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பல செய்திகளை யோகேந்திரா எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.


விவசாயிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் மாறுபட்டாலும், முற்றிலும் அடிப்படையில் அவர்கள் உற்பத்தி செய்யும் சாகுபடி பொருட்களுக்கு விலையில்லை. கடன் தொல்லைகள், தற்கொலைகள் என்பது இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன என்பதை பல பரிமாணங்களோடு எடுத்துரைத்தார்.  வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் கோவையில் ஏற்பாடு செய்துள்ள விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அதற்கும் ஒப்புக் கொண்டார். கோவையில் நடக்கும் இந்நிகழ்வுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் போன்ற முக்கிய ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வு நடக்க இருக்கின்றது. வெறும் கூடிக் கலைவது மட்டுமில்லாமல் ஆக்கப்பூர்வமான முடிவுகளை பிப்ரவரி 7ம் தேதி கோவையில் நடக்கும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் விவசாய இடுபொருள் விலையேற்றம், விவசாய விளைபொருட்களுக்கான இலாபகரமான விலை, கடன் தொல்லைகள், தற்கொலைகள், விவசாயிகளின் உரிமைகள், மறைந்த நாராயணசாமி நாயுடுவுக்கு அவர் மறைந்த கோவில்பட்டி நகரிலும், கோவையிலும் சிலை அமைப்பது குறித்தான பொருள்களை விவாதிக்க இருக்கிறோம்.  ஆர்வமுள்ளவர்கள், அக்கறையுள்ளவர்கள், விவசாயி வீட்டில் பிறந்த இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.  

இதை அரசியல் லாபத்திற்காக நடத்தவில்லை. மறைந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தை நடத்தும்போது தமிழகமே திரும்பிப் பார்த்தது. அச்சமயத்தில் அந்த அமைப்பை கல்லூரிகளில் கட்சி சார்பில்லாத நிலையில் அமைத்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் மீது ஏவப்பட்ட ஜப்தியையும், கடன் தொல்லைகளையும் நிறுத்தி நிவாரணங்கள் பெற்றவன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் வானம் பார்த்த தெற்கு சீமையில் உள்ள கரிசல் பூமியில் ஒரு குக்கிராமத்தில் விவசாய வீட்டில் பிறந்த சுக்காங்கல் போன்ற அடியேன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.  

எனது குருஞ்சாக்குளம் கிராமத்தில் 31 டிசம்பர் 1980, வருட கடைசி நாளில் 7 விவசாயிகள் காவல்துறையின் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இதைப் பொறுக்க முடியாத எனது கிராமத்து விவசாயிகள் மந்திரம் என்ற காவல்துறையை சேர்ந்த காவலைரை அடித்துக் கொன்றனர். அது கொலை வழக்காகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வழக்கு மன்றத்தில் திருநெல்வேலி, சென்னை உயர்நீதிமன்றம் என்று அலைந்து மிகவும் பாதிக்கப்பட்டனர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தி விடுதலையும் பெற்றுத் தந்தேன். 

நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறளுக்கு விழா


Tirukural Parliament of India

கடந்த 17.12.2015 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறளையும், ஐயன் திருவள்ளுவரையும் வட புலத்தில் கொண்டாடிய விழாவை மறக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் இந்த விழாவை சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில் தினமணி ஆசிரியர் நண்பர் வைத்தியநாதனுக்கும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும், படைப்பாளி ஜோ.டி. குருஸ் ஆகியோரை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பள்ளி மாணவச் செல்வங்கள் 133 பேர் திருக்குறளை அருமையாகப் பாடி ஒப்பித்தது பெருமிதமாக இருந்தது. இது தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு என்பது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. வைத் தவிர்த்து அனைத்துக் கட்சியினரும் இன்னும் வட மாநிலங்களைச் சார்ந்த கட்சித் தலைவர்களும் பங்கேற்றது பெருமையான செய்தியாகும். தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த ஒரு பாராட்டு நிகழ்வாக இருந்தது. தமிழகத்திலிருந்து எங்களைப் போன்றவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சில....










தமிழ் இலக்கிய வானில் நெல்லைச் சீமை அள்ளிய சாகித்திய அகாதெமி விருதுகள்


வாக்களிப்பது கட்டாயமாக்குவது குறித்தான மசோதா - Compulsory Voting

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜனார்த்தன் சிங் கடந்த 18.12.2015 வாக்களிப்பது கட்டாயமாக்க வேண்டும் என்ற தனிமனித மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தார். இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு சிலர் இது சாத்தியமா என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர். இது கை, கால் வராத தனமான பேச்சாகும். வெறும் 35% - 40% வாக்குகளை பெற்று ஒரு சிலர் ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர். ஒரு 50% சதவீதம் வாக்குகள் கூட பெறாமல் ஆட்சிக்கு வருவது நியாயம்தானா? ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள் என்று சொல்லும் வகையில் பங்களிப்பு இருக்க வேண்டாமா? இது குறித்து பல நேரங்களிலும் எனது பத்திகளிலும், வலைதளங்களிலும் எழுதியுள்ளேன். இருப்பினும் இது குறித்து ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற மன திருப்தியில் இந்த பத்தியை எழுதுகின்றேன். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர், அர்ஜென்டினா, பிரேசில், கிரீஸ், சைப்ரஸ், உருகுவே, துருக்கி, பெரு, லக்ஸ்ம்பர்க் என பல நாடுகளில் வாக்குரிமை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா, மக்கள் தொகை அதிகம்பெற்ற பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், கொண்ட பன்மையில் ஒருமை என்ற நாடாகும். எனவே இங்கு பல்வேறு மாநிலங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் வலுவான மக்கள் நல மத்திய அரசு அமைந்தால்தான் வேற்றுமை இல்லாத சமன்பாடான ஜனநாயக நலத்திட்டங்கள் பாரபட்சமில்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிடைக்கும்.

இது குறித்து Times of India வில் 19.12.2015 அன்று வெளிவந்த செய்தி கட்டுரை இதோ.


BJP MP moves must-vote bill, divides party

Neeraj Chauhan

New Delhi:

Udit Raj Calls It Impractical, Slams India's Middle Class
The private member's bill moved by BJP MP Janardhan Singh Sigriwal in March to make voting compulsory for everyone in the country was discussed in the Lok Sabha on Friday and saw opposition from within the party with his colleague Udit Raj calling it “impractical“ and that “people cannot be pressurised to vote“.
Speaking against the bill, Udit Raj targeted the middle classes and even advised them to leave the country if they had such a problem with the system and even when they didn't take part in it.

Calling the problem of not voting in the country a “middle class phenomenon“, Raj said, “The middle class in this country only criticises, they will reject everyone... politicians are projected so badly . The poor... r who live in clusters, work as las bourers and cannot eat properd ly will still go to vote. But those t who live in big bungalows, bez long to upper class and middle class... are they here only to rea mind us of demerits of democp racy .“ He said the government should impress upon the mid dle class that “they have failed to discharge their basic citi zenship duty“. He said there was a need to educate people and encourage them to partici pate in the electoral process in stead of forcing it on them.

As the bill was taken up for consideration, several MPs favoured that India should set an example by making everyone vote compulsorily while a few MPs were against it.

BJP MP Daddan Mishra BJP MP Daddan Mishra said that people should mandatorily go to vote under the law as this will reduce election-related corruption. BJP's Ravindra Kumar Ray , Banshilal Mahto, Kamakhya Prasad Tasa and Jugal Kishore Sharma also favoured it saying it will strengthen democracy .

The bill was opposed by JD U) MP Kaushalendra Kumar who said voting is a right of citizens and this right should not be made a law. “Actually, this controversial bill is a product of Gujarat and con ceived by Prime Minister.When he was CM Gujarat in 2009, the state government tried to impose this but couldn't. Now they want to make it a law,“ Kumar said.


#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...