கடந்த 26.12.2015 டெக்கான் க்ரானிக்கல் ஏட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தைப் பற்றி எழுதிய பத்தியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வியாபாரிகளும், கார்ப்பரேட் கம்பெனியைச் சேர்ந்தவர்களும் வந்துவிட்டனர். ராஜ்ய சபா ஒரு கிளப் ஆகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு யார் காரணம்? தகுதியானவர்கள் ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்படுவதில்லை. எப்படி மருத்துவக்கல்லூரியில் பணத்தைக் கட்டி, படிக்க இடத்தை பெறுகிறார்களோ, அதேபோல பணத்தை வாரி இறைத்து மல்லையா, தமிழகத்தை சேர்ந்த மறைந்த எம்.ஏ.எம்.இராமசாமி போன்ற மக்கள் பணி இல்லாமலேயே அந்த பதவியை விலைக்கு வாங்கி விடுகின்றனர். தகுதியே தடையாக இருப்பதால் நல்லவர்களோ, வல்லவர்களோ, ஆற்றலாளர்களோ அந்த அவைக்கு இப்போது செல்வது கடினமாகிவிட்டது. கற்றவர்கள், ஆற்றலாளர்கள் செல்லவேண்டிய அவை, பணக்காரர்கள் செல்கின்ற கேளிக்கை அவையாக மாறிவிட்டது. இந்த புரையோடிய நிலையை மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதையெல்லாம் மனதளவில் பார்த்து வேடிக்கை பொருளாகிவிட்டது. ராஜ்ய சபாவிற்கு செல்வது கடமையாற்றவோ, பொறுப்பை செய்யவோ அல்ல. தன்னுடைய பெயருக்குப் பின் M.P. என்ற அசோக சின்னம் பொறித்த லட்டர் பேட் வேண்டும்.
இப்படியும் வேடிக்கைக் காட்சிகள் அரசியல் களத்தில் நடக்கின்றது.
No comments:
Post a Comment