😀💥ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் ஒடிசா, பீகார் மாநில சட்டங்களுக்கு jசுப்ரீம் கோர்ட் ஒப்புதல்k
லஞ்ச, ஊழலில் ஈடுபடும் அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்தி அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை ஒடிசா மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதேபோன்றதொரு சட்டத்தை பீகார் மாநில சட்டசபையும் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது.
கோர்ட்களின் மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்னதாகவே சொத்துகளை பறிமுதல் செய்யும் இந்த இரு மாநில அரசுகள் நிறைவேற்றிய சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அத்தனையையும் ஒரே வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் நீதியரசர்கள் திபக் மிஸ்ரா மற்றும் ஏ.ஆர்.தவே கொண்ட அமர்வு மேற்படி சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது. லஞ்ச ஊழல் போன்ற சமூகப் பேரழிவு தேசிய பொருளாதாரத்துக்கு எதிரான தீவிரவாதம் போன்றது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருவகையில், ஊழல் என்பது தேசிய பொருளாதார தீவிரவாதமாக மாறிவருகின்றது. இதுபோன்ற சமூகப் பேரழிவை கட்டுப்படுத்த வலிமையான சட்டம் தேவை. ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக மேற்கண்ட மாநில அரசுகள் இயற்றியுள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் 247-வது பிரிவை எவ்விதத்திலும் மீறுவதாக அமையவில்லை.
ஊழல் செய்தவர்களின் பணத்தையும், சொத்துகளையும் முதல்கட்டமாக பறிமுதல் செய்யும் சட்டமும் அரசியலமைப்பு சட்டத்தை மீறியவகையில் இல்லை. ஊழல் செய்தவர்கள் தங்களது முறையான வருமானத்தை மீறிய வகையில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அவர்கள் சேர்த்து வைத்துள்ள வருமானத்தை மீறிய சொத்துகளே ஆதாரங்களாக இருக்கும்போது, அவர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரத்தை கோர்ட்டில் நிரூபித்துதான் அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறுவது சரியாகாது.
எனவே, ஊழல் வழக்குகளை விசாரிக்கவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் ஒடிசா மற்றும் பீகார் மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டங்கள் செல்லுபடியாக தக்கவைதான.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment