Monday, December 7, 2015

முல்லைப் பெரியாறு

முழு கொள்ளளவில் முல்லைப் பெரியாறு: 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதன் அனுமதிக்கப்பட்ட முழுகொள்ளளவான 142 அடியை நெருங்குவதால் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேக்கடி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதன் அனுமதிக்கப்பட்ட முழுகொள்ளளவான 142 அடியை நெருங்குவதால் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள தமிழக எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்க உச்சநீதிமன்ற அனுமதி உள்ளது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அனானியின் நீர்மட்டம் 141.7 அடியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் இருந்தால் நாளை காலைக்குள் அணை முழுக்கொள்ளளவான 142 அடியை எட்டிவிடும் என்று கருதப்படுகிறது.

இதனால் அணையை ஒட்டிய தமிழகத்தின் தேனி மாவட்ட மக்களுக்கும், வைகை கரையோர மக்களுக்கும் மற்றும் கேரளா மாநில இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு1,400 அடியிலிருந்து 1,816 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை 2,200 அடியாக அதிகரிக்குமாறு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி.ரதீசன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும்பட்சத்தில் 13 மதகுகளின் வழியாகவும் உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு கேரளா வழியாகவும் உபரி நீர் திறக்கப்படும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
07/12/2015

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...