Monday, December 7, 2015

தமிழீழ அரசாங்க நியூயார்க் மாநாடு


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் நண்பர் ருத்ரகுமார் அவர்கள் நியூயார்க்கில் கடந்த டிசம்பர் 4-6 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்திருந்தார். ஆனால் இயற்கை பேரிடரால் சென்னையில் இருக்க வேண்டிய காரணத்தினால் கலந்துகொள்ள இயலவில்லை. கடந்த நவம்பர் 6ம் தேதி தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டிலும் வைகோ அவர்கள் தாயார் காலமானதால் கலந்துகொள்ள இயலவில்லை.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைக்குள்ள நிலவரம் அங்கு ஏற்படுத்த வேண்டிய தீர்வுகள் மட்டுமல்லாமல் சென்னையும், தமிழகமும் கடந்த ஒரு வாரமாக இயற்கை பேரிடரால் வதைப்பட்டது குறித்தும் உரிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த தீர்மானங்களுக்கு மேல் நல்ல நகர்வுகள் ஏற்படவேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
07/12/2015


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...