Sunday, December 20, 2015

மானாவாரி பயிர்கள்

மஸ்கட்டில் இருந்து செல்வராஜ் கரிசல் மானாவாரி பயிர்களான பருத்தி, உளுந்து, கம்பு, எள் போன்றவை எப்படி பயிரிட்டு வருகின்றனர் என்ற செய்தியை அனுப்பியிருந்தார். இன்று வரை பெய்த மழையினால் குறிப்பாக ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தூர், சிவகாசி வட்டாரங்கள் வானம் பார்த்த மானாவாரி பயிர்கள் யாவும் விதைகள் விதைக்கப்பட்டும், விளைச்சல் எப்படி இருக்குமோ என்று விவசாயிகள் ஒரு பக்கத்தில் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இது குறித்து அவ்வட்டார வருவாய் அலுவலர்கள், கிராம அதிகாரிகள் மூலம் உரிய புள்ளி விவரங்களை பெற்று நிவாரணங்கள் வழங்க வேண்டும்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி,கம்பு ,பருத்தி போன்ற பல்வேறு பயிர்கள் கடந்த புரட்டாசி மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் பயிரிட்டனர் .உளுந்து,பாசிக்கு விளைச்சல் காலம் 70 நாட்களாகும். ஏக்கருக்கு 15 ஆயிரம் வரை களை ,மருந்துக்கு செலவு செய்துள்ளனர் . காய் மணி பிடித்து 20 நாட்களுக்கு மேலாகிறது தற்போது .நெத்து பறித்து வருகின்றனர் .தொடர் மழையால் நெத்துகள் நனைந்து செடியிலேயே முளைத்து விட்டது.தொடர் மழையால் உளுந்து, பாசி பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர் .5ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பருவத்திற் கேற்ற மழை பெய்ததால் துவக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர் .மகையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...