Sunday, August 31, 2014

டெசோ மாநாட்டில் வசூலான பணம் -






































இந்த வாரம் தமிழ் இந்தியா டுடேவில், 1986, மே மாதம் மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் வசூலான பணத்தை ஈழப் போராளிகளுக்கு வழங்கப்பட்டது என்ற தவறான தகவல் வெளியாகி உள்ளது. 1986இல் ஜூன் மாதம், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளன்று சென்னையில் நடந்த நிகழ்வில் வசூலான ரூ.2,00,000/= நிதியிலிருந்து, ஈழப் போராட்டக் குழுக்களான ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ, பிளாட் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் என தலா ரூ.50,000/= வழங்க திட்டமிடப்பட்டது. 

ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும் வாங்கத் தயங்கியது. 
இதுகுறித்து 7.6.1986 அன்று, தம்பி பிரபாகரனிடமும், பேபி சுப்பிரமணியத்திடமும் நான் நேரில் சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சியில் (எம்.ஜி.ஆர். தலைமையில்) நாங்கள் பணம் வாங்கினால் எம்.ஜி.ஆர். தவறாக நினைப்பார் என்று தயக்கமாக கூறினார்கள். உடன் இருந்த பாலசிங்கம், கிட்டு போன்றவர்கள் இதை அறிவர். இதுதான் சரியான தகவல்.

இதுகுறித்து விரிவான செய்திகளை ‘எனது நினைவுகளில்’ பதிவு செய்ய உள்ளேன். தமிழகத்தில் பழைய நிகழ்வுகளை பதிவு செய்யும்போது பல தவறுகள் நடந்துவிடுகிறது. இதில் யார் மீதும் குறை இல்லை. செய்தி வெளியிடுவதற்கு முன், பொறுப்பானவர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

31-08-2014

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...