Thursday, October 3, 2024

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️



திமுகவை அழைத்து மதுவிலக்கு மாநாட்டை நடத்துவதுதான் சரி போலும்!. அதில் ஒரு கேள்வி வருகிறது! மதுவிலக்கு குறித்து இன்றைய திமுகவின் நிலை என்ன? ‪மதுவிலக்கை தளர்த்தக் கூடாது என்று யாரிடம் போராடினார் ராஜாஜி?‬



‪திமுகவிடம்!‬

அது ஒரு புறம் இருக்க இந்த மதுவிலக்கு மாநாட்டு மேடையில் திமுகவினரே கடுமையாக விமர்சித்த ராஜாஜி மற்றும் காமராஜர் கட்டவுட்களை வைத்திருக்கிறார்கள்.அதுவும் சரிதான்!

ஆனால் இவர்களுக்கு தெரியாதா என்ன! முதன்முதலாக மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்திக் கடுமையாகப் பேசிய நடை முறைக்கு கொண்டு வந்த தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூரார்தான்!  அவரது கட்டவுட்டைக் காணோமே? 
தமிழ்நாட்டின் மதுவிலக்குப் போராட்ட வரலாற்றை ஒழுங்காகத் தெரியாதவர்கள் நடத்திய மாநாடு தான் இது.!

இந்த லட்சணத்தில் மாநில அதிகார பட்டியல் அளவில் உள்ள மது ஒழிப்பை மத்திய அரசுதான் கொண்டுவர வேண்டும் என்று சொல்லும் பைத்தியக்காரர்கள் பற்றி என்ன சொல்வது? பிகாரில், குஜராத்தில் , மிஸேரோமில், நாகலாந்தில், லட்சதீவில்   ம த்திய அரசு சொல்லி கொண்டு வந்தார்களா❓ இதுவும் தமாஷ்தான்….. என்ன சொல்ல❓

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன! தமிழ்நாட்டு மக்களை கோமாளிக்கூட்டம் என்று இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகள் முடிவெடுத்துவிட்டார்கள் போல.

#மதுவிலக்கு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-10-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...