Thursday, September 19, 2024

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக  

நம்மை யாரேனும் 

நினைவில் வைத்திருத்தல் 

அத்தனை இலகுவான

விடயமா என்ன











அதற்கு 

ஏதெனுமொரு காரியத்தை 

பெரிதாய் செய்திருக்க வேண்டும் 

ஏதெனுமொரு உதவியை 

துணிந்து தந்திருக்க வேண்டும் 

ஏதெனுமொரு ஆபத்தில் 

கரம் கொடுத்திருக்க வேண்டும் 

ஏதேனுமொரு காலத்தை

அவர்களோடு சேர்ந்து 

சிரமப் பட்டு கடந்திருக்க வேண்டும் 

ஏதேனுமொரு சிக்கலில் 

அவர்களோடு நாமாக நின்று 

தோள் கொடுத்திருக்க வேண்டும் 

மீளவே  முடியாதென அவர்கள் 

மிரள மிரள விழித்த போது 

முடியுமான சிறு ஆறுதலையேனும் 

முன் நின்று செய்திருக்க வேண்டும் 


இத்தனையும் 

என்றோ ஒருகாலத்தில் 

நீ செய்திருப்பின்

அவர்கள் காட்டிக் கொள்ளா விட்டாலும்

அவர்கள் நினைவில் 

அழியாது நீ நிற்பாய் 


அது உனக்கான அவர்களது

சிறு பிரார்த்தனையிலேனும்

வெளிப்படக் கூடும்

உணர்ந்து கொள்!

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...