Thursday, September 19, 2024

#நியூஸ்சேனல்_பரிதாபங்கள்.

 #நியூஸ்சேனல்_பரிதாபங்கள்.

_____ செய்தி வாசிப்பாளர் : சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் இன்று ஒரேபைக்கில் வந்த மூன்று பேர் சாகச முயற்சியில் ஈடுபட்ட போது நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தனர். மூவரும் சிகிச்சைக்காக தரமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த மேலதிக தகவல்களைத் தர நமது நிருபர் காத்திருக்கிறார். சொல்லுங்க நரசிம்மன். அங்கு என்ன நடந்தது? நரசிம்மன்: சென்னை .... சென்னை இன்று... காலை.... ஈ.சி.ஆர் சாலையில் ... இன்று... இன்று பைக்கில் ... ஒரே பைக்கில்... சாகசம் செய்த போது..... மூவரும்... அந்த மூவரும்..... நிலை தடுமாறி .... கீழே .... கீழே விழுந்து.... விழுந்ததால்... படுகாயம் .... அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது.... உடனே ... மூவரும் .... அந்தமூவரும் ... தரமணி மருத்துவமனையில் .... அரசு மருத்துவமனையில் ... அனுமதித்து.. அனுமதிக்கப்பட்டனர் பிரியா... செய்தி வாசிப்பாளர் : உங்கள் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நரசிம்மன்.

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...