Thursday, September 19, 2024

#Communalharmony #மதநல்லிணக்கம்

 #Communalharmony 

#மதநல்லிணக்கம்

———————————-

மகாவிஷ்ணு சிவன் போன்ற இந்திய மண் வம்சாவளி வழிபாடுகள்….

அதேபோல் இயேசு கிறிஸ்துவை இறைவனாக கொண்டு வழிபடும் கிறிஸ்தவர்கள்….. 

அல்லாவை முதன்மையாகக் கொண்டு திசைகளைவணங்கும்இஸ்லாமியர்கள்…

அதேபோல் கிரந்தங்களை கொண்டு வழிபடும் சீக்கிய மத வழிபாடு கொண்டவர்கள்….. 



அனைவரும் மத நல்லிணக்கத்தில் வாழும் நாடுதான் இந்தியா!! இது மதச்சார்பற்ற நாடு என்பது ஒருபோதும் பொருந்தாது இங்கு எல்லா மதங்களும் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்த வழிபாடுகள்  அனைத்துத் திருத்தலங்களிலும் ஆலயங்களிலும் மசூதிகளிலும் குருத்துவாரகளில் தத்தம் நம்பிக்கைகளோடு பிரார்த்தனைகள் செய்து அன்றாட வழிபாட்டில்  இருக்கும் போது மதச்சார்பற்ற  நாடு என்று இந்தியாவைச் சொல்வது ஒரு மேற்ப்பூச்சான யூகமாகத்தான்  இருக்க முடியும். விஞ்ஞானத்திற்கே இன்னும் விடைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

மக்களின் நம்பிக்கையின் மீது எதற்கு விரோதம் மனப்பான்மை.?


•எல்லா இந்து திரு கோவில்களில் ஆறுகால பூஜைகள்- வழிபாடு  கீர்த்தியுடன் நடக்கட்டும்… விபூதி, திருமண் இட்டு வணங்க வேண்டிய நிலை நீடிக்கட்டும். 


*எல்லா கிறிஸ்துவ ஆலயங்களிலும் மணியோசையுடன் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபங்கள்-பிரார்த்தனைகள் நடக்கட்டும். 


•எல்லா இஸ்லாமிய மசூதிகளிலும் பாங்கு ஓதி தொழுகைகள்  நடக்கட்டும் 


•அதே போல கிரந்தங்களை வசித்து வழிபடும் சீக்கியர்களுடைய வழிபாடும் தொடரட்டும். 


இத்தகைய நம்பிக்கைகளை துடைத்தழிப்பது என்கிற பெயரில் யார் இங்கு இயங்கினாலும்  தவறாகத்தான் முடியும்.


•இறை மறுப்பு கொள்கை உள்ளவர்கள் அதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளட்டும் அவர்களுக்கும் இங்கு தடை இல்லை!


அதற்காக எல்லா வழிபாட்டுத்தலங்களும் இயங்க கூடாது மத நம்பிக்கையே கூடாது 

என்று  கீழ்தனமாக பிரச்சாரம் செய்கிறவர்கள் சாதித்ததெல்லாம் என்ன! இது கடுமையான கண்டனம் செய்ய வேண்டிய செயல் ஆகும் condemnation act.மத நம்பிக்கையும் அதன் மூலமாக இயற்கையும் வாழ்வையும் தத்துவமாக அறிந்து நன்மைகளையும் உண்மைகளையும் உபகாரங்களையும் ஆன்மீக வழியில் பேணுகிறவர்களைக் கேலி செய்வது முகப்புத்தகம் போன்றவற்றில் ஆபாசமாக எழுதுவது கிண்டல் செய்து ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் அறிவாளி என்பது மாதிரி நடந்து கொள்வது போன்ற காரியங்கள்  மனிதத் தன்மையாகாது.


கண்ணதாசன் சொல்வது மாதிரி கடவுள் உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. அவரவர் நம்பிக்கையில் மீது தங்களுடைய கருத்தை ஏற்றி அவமானப்படுத்துவது முற்றிலும் மனித நாகரிகம் அற்ற செயல்.


உங்கள் பிரச்சாரங்கள் உங்கள் சொந்த வீட்டிலேயே எடுபடவில்லை என்கிற போது நீங்கள் இறை நம்பிக்கையா

ளர்களைக் கேலி செய்வது ஒரு வகையில் வன்முறை தான் அன்றி வேறு என்ன?


கடவுளை மறுத்துவிட்டு இதுவரை தாங்கள் செய்து வருகிற காரியங்களில் என்ன யோக்கியதையை இவர்கள் விஞ்ஞானபூர்வமாகக் கொண்டுள்ளார்கள் என்பதை யார் கேட்பது?


Communal harmony means that people of different religions, castes, creeds, sex and different background live together in the society with love and peace amongst them. Communal harmony strives to create goodwill and harmony among various communities.


தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்!


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸட்

7-9-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...